தமிழக பட்ஜெட் 2025-26 :
- 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 14-03-2025 காலை சரியாக 9.30 மணியளவில் தாக்கல் செய்தார்.
- TNPSC EXAM KEYPOINTS : TAMILNADU BUDGET 2025-26 (KEY POINTS)
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25:
- தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட ‘தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கை 2024-25’-ஐ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (13-03-2025) வெளியிட்டார்.
- TNPSC EXAM KEYPOINTS : TAMIL NADU'S FIRST ECONOMIC SURVEY 2024-25 (KEY POINTS)
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட பட்ஜெட் இலச்சினையில் இந்திய ரூபாய் குறியீட்டுக்கு பதிலாக ‘ரூ’ இடம்பெற்றதால் சர்ச்சை கிளம்பி உள்ளது:
- தமிழக சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் 14-03-2025 தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு பட்ஜெட் இலச்சினையில், மத்திய அரசின் ரூபாய் குறியீட்டை மாற்றி, ‘ரூ’ என்ற தமிழ் எழுத்துடன் கூடிய இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
- ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற வாசகத்துடன் ‘சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டின் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திட’ என குறிப்பிட்டு, ரூபாய் குறியீடுக்கு பதிலாக ‘ரூ’ என்ற இலச்சினையை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். இந்திய ரூபாய்க்கென தனிக்குறியீடு கடந்த 2010-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. இதை வடிவமைத்தவர் தமிழரான உதயகுமார் ஆவார். இவர், ரிஷிவந்தியம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கத்தின் மகன் ஆவார்.
விண்வெளியில் வலம்வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை (UnDocking) வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
- விண்ணில் பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் (பிஏஎஸ்) எனும் ஆய்வு நிலையத்தை வரும் 2035-ம் ஆண்டுக்குள் நிறுவ இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டுள்ளது. இதற்கான விண்கலங்கள் 2028-ம் ஆண்டு முதல் விண்ணில் தொடர்ந்து செலுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
- அதற்கு முன்னோட்டமாக ஸ்பேடெக்ஸ் (SPADEX–Space Docking Experiment) எனும் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைத்தல், விடுவித்தல் ஆகிய பரிசோதனையை மேற்கொள்ள இஸ்ரோ முடிவு செய்தது.
- இதற்காக தலா 220 கிலோ எடை கொண்ட ஸ்பேடெக்ஸ்-ஏ, ஸ்பேடெக்ஸ்-பி ஆகிய இரட்டை விண்கலன்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டன. இந்த 2 விண்கலன்களும் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த டிசம்பர் 30-ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
- அதன்பிறகு, அந்த விண்கலன்கள் ஒரே சுற்றுப்பாதையில் குறிப்பிட்ட தூர இடைவெளியில் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. அவற்றுக்கு இடையே உள்ள தூரத்தை படிப்படியாக குறைத்து, 2025 ஜனவரி 16-ம் தேதி 2 விண்கலன்களும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன்மூலம் ‘விண்வெளி டாக்கிங்’ தொழில்நுட்பத்தை கொண்ட 4-வது நாடு எனும் பெருமையை பெற்று இந்தியா சாதனை படைத்தது.
- இந்நிலையில், சுமார் 2 மாதங்களுக்கு பிறகு, இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக 13-03-2025 விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்வெளியில் ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள் ஒன்றில் இருந்து மற்றொன்று விடுவிக்கப்படும் நிகழ்வின் காணொலி மற்றும் படங்களும் வெளியாகின.
எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் வணிக ஒப்பந்தம்:
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸுக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயற்கைக்கோள் மூலம் உலகம் முழுவதுமுள்ள கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த இணைய சேவையை இந்தியாவுக்குள் அறிமுகம் செய்வதற்கான முயற்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் ஈடுபட்டுள்ளார்.
- தற்போது முதல் நிறுவனமாக ஏர்டெல் நிறுவனத்துடன் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் ஒப்பந்தம் செய்துள்ளது.
- இதன்தொடர்ச்சியாக ஜியோவும் ஸ்டார்லிங்கின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
- இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் அதிவேக இணையசேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
உலக ஜூனியர் செஸ் போட்டி 2025:
- பெட்ரோவாக்கில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் பிரணவ் வெங்கடேஷ் (18) வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளார். அவருக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.
- பிரணவ் வெங்கடேஷ் கடந்த 2022-ம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்கு தகுதி பெற்றார். கடந்த 2024 நவம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டியில் சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு தொகையாக ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!