போங்கோ சாகர் 25 / BONGOSAGAR 25
- வங்கக் கடலில் இந்த வாரம் நடத்தப்பட்ட இந்தியா- பங்களாதேஷ் கப்பற்படை பயிற்சியான போங்கோ சாகர் 25-லும், கப்பற் படைகளின் ஒருங்கிணைந்த சுற்றுக் காவலிலும் ஐஎன்எஸ் ரன்வீர் பங்கேற்றது. பங்களாதேஷ் கப்பற் படையின் பிஎன்எஸ் அபு உபைதா இவற்றில் பங்கேற்றது.
- இருநாட்டு கப்பற்படைகளுக்கு இடையே செயல்பாட்டு திறனை விரிவுபடுத்தவும் கடல்சார் பாதுகாப்பு சவால்களை பகிர்ந்து முறியடிப்பதில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டது.
- இந்தப் பயிற்சியின் போது கடற்பகுதியில் துப்பாக்கியால் சுடுதல், உத்திசார்ந்த முயற்சிகள், ஒரு கப்பலிலிருந்து மற்றொரு கப்பலுக்கு மாறிச்சென்று ஆய்வு செய்தல், தகவல் தொடர்பு பயிற்சிகள் போன்றவை இடம் பெற்றன.
- TNPSC EXAM NOTES : இந்திய இராணுவப் பயிற்சிகளின் பட்டியல் 2024-2025
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழக அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு:
- கல்வி திட்ட நிதி, புயல், வெள்ள நிவாரணம் உள்ளிட்ட இனங்களில் மத்திய அரசிடம் இருந்து வரும் தொகைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியால், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் தமிழக அரசுக்கு ரூ.45,152 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
- TNPSC EXAM KEYPOINTS : TAMILNADU BUDGET 2025-26 (KEY POINTS)
- TNPSC EXAM KEYPOINTS : TAMIL NADU'S FIRST ECONOMIC SURVEY 2024-25 (KEY POINTS)
- TNPSC EXAM KEYPOINTS : TAMILNADU AGRICULTURE BUDGET 2025-26 (KEYPOINTS)
கரும்பு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு 2ஆம் இடம் வகிப்பதாக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்து உள்ளார்:
- கரும்பு உற்பத்தியில் நாட்டிலேயே தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது.கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 215 ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
- கரும்பு விவசாயிகளுக்கு ரூ.841 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளது. கரும்புக்கான ஊக்கத் தொகை, ரூ. 215ல் இருந்து ரூ. 349 ஆக உயர்த்தப்படுகிறது. கரும்பு டன் ஒன்றுக்கு 3500 வழங்கப்படும். இதற்காக ரூ. 297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
யுனெஸ்கோ அங்கீகாரத்திற்கான உத்தேச பட்டியலில் இந்தியாவின் 6 இடங்கள் சேர்ப்பு:
- உலகத்தின் புராதன சின்னங்களின் வரிசையில் இந்தியாவை சேர்ந்த இயற்கை மற்றும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் அளித்துள்ளது.
- மாமல்லபுரம் கடற்கரை கோயில், குதுப்மினார், ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட 43 இடங்களை உலகின் பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் யுனெஸ்கோ சேர்த்துள்ளது.
- தற்போது கலாசார பிரிவில் 35, இயற்கை பிரிவில் 7 மற்றும் இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து ஒன்று என மொத்தம் இந்தியாவில் 43 யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ளன. கடந்த 2024-ஆம் ஆண்டு முதல்முறையாக உலக பாரம்பரிய குழுக் கூட்டம் இந்தியாவில் நடைபெற்றது. அப்போது அஸ்ஸாமில் ஆட்சிபுரிந்த அஹோம் வம்சத்தின் புதைகுழி அமைப்பு முறைக்கு (மொய்தம்ஸ்) யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- இந்த நிலையில், இந்தியாவை சேர்ந்த 6 இடங்கள் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
- சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள கங்கர் பள்ளதாக்கு பூங்கா,தெலங்கானா மாநிலம் முதுமல்லில் உள்ள பண்டைய காலத்து செங்குத்தான கற்கள், பல மாநிலங்களில் உள்ள அசோகரின் ஆணைகள் குறித்த கல்வெட்டுகள், சவுசாத் யோகினி கோயில் வட இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள குப்தர்கள் கோயில், மபி, உபியில் உள்ள பண்டேலா ராஜ்யத்து மாளிகை மற்றும் கோட்டைகள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- இதன் மூலம் யுனெஸ்கோவின் அங்கீகாரத்திற்கான தற்காலிக பட்டியலில் உள்ள இந்திய இடங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
World Consumer Rights Day / உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025 :
- உலக நுகர்வோர் உரிமைகள் தினம், ஆண்டுதோறும் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.
- 2025-ம் ஆண்டு கடைபிடிக்கப்படும் உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தின் கருப்பொருள்: உலக நுகர்வோர் உரிமைகள் தினம் 2025
நீர் நிலைத்தன்மை மாநாடு 2025:
- தேசிய நீர் மிஷன் (NWM-National Water Mission), ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர் பயன்பாட்டு திறன் பணியகம் (BWUE-The Bureau of Water Use Efficiency), எரிசக்தி மற்றும் வள நிறுவனம் (TERI-The Energy and Resources Institute) உடன் இணைந்து “நீர் நிலைத்தன்மை மாநாடு 2025”(Water Sustainability Conference 2025) ஐ ஏற்பாடு செய்தது.
- தொழில்துறை நீர் பயன்பாட்டு திறன் குறித்து கவனம் செலுத்திய இந்த மாநாடு மார்ச் 12, 2025 அன்று புதுதில்லியில் உள்ள சன்சாத் மார்க்கில் உள்ள பாலிகா கேந்திராவில் உள்ள NDMC மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
- மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீல், நீர் பாதுகாப்பிற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். திறமையான தொழில்துறை நீர் பயன்பாட்டிற்கான புதுமையான தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகளைப் பற்றி விவாதிக்க இந்த நிகழ்வு அமைச்சகங்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்களை ஒன்றிணைத்தது.
- தொழில்துறை நீர் தணிக்கைகள், நீர் திறன் மிக்க செயல்முறைகளை மாற்றியமைத்தல் மற்றும் மறுசுழற்சி, மறுபயன்பாடு மற்றும் நிலத்தடி நீர் மறுசுழற்சி மூலம் சுய ஒழுங்குமுறைக்கு தொழில்களை ஊக்குவித்தல்.
- தொழில்துறை தயாரிப்புகளில் நீர் தடயத்தைக் குறித்தல் மற்றும் BIS தரநிலைகளை ஊக்குவித்தல்.
- நீர் பயன்பாட்டு செயல்திறனைக் கண்காணிப்பதற்கும், முடிவெடுக்கும் ஆதரவு அமைப்புகளுக்கும் நிகழ்நேர நீர் பயன்பாட்டுத் தரவைப் பதிவுசெய்து வெளியிடுவதை ஊக்குவித்தல்.
- மேம்பட்ட நீர் மறுசுழற்சி மற்றும் பூஜ்ஜிய திரவ வெளியேற்ற தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்ள தொழில்களை ஊக்குவித்தல்.
- நீர் செயல்திறனை மேம்படுத்துவதற்காக நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவித்தல்.
- தொழில்துறை நீர் பயன்பாட்டிற்கான கொள்கை கட்டமைப்புகள் மற்றும் ஒழுங்குமுறை தரங்களை வலுப்படுத்துதல்.
- நீர்-சிக்கனமான நடைமுறைகளை உருவாக்கி செயல்படுத்துவதற்கு தொழில்-அரசு கூட்டாண்மைகளை வளர்ப்பது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!