இந்தியா - நியூசிலாந்து இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின:
- இந்தியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சழூல், வேளாண், விளையாட்டு என பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
- இந்திய பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்துக்கும் நியூசிலாந்து சுங்க சேவைக்கும் இடையே பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- இந்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் மற்றும் நியூசிலாந்தின் முதன்மைத் தொழில்கள் அமைச்சகம் இடையே தோட்டக்கலை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்தியச் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் மற்றும் நியூசிலாந்தின் முதன்மை தொழில்துறை அமைச்சகம் இடையே வனத்துறை தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய கல்வி அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து கல்வி அமைச்சகம் இடையே கல்வி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
- இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நியூசிலாந்து அரசின் விளையாட்டு அமைச்சகம் இடையே விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் நிதி நிர்வாகம், தொன்மையும் தொடர்ச்சியும் ஆவண நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்:
- தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 'தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்' ஆவண நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, இதற்கான சிறப்பு இணையப் பக்கத்தைத் (https://www.tamildigitallibrary.in/budget) தொடங்கி வைத்தார்.
- இதில் பண்டைய வணிகம், வரிவிதிப்பு முறைகள், காலனிய கால நிதிநிர்வாக நடைமுறைகள், நவீன தமிழகத்தின் நிதிநிலை அறிக்கைகள் ஆராயப்பட்டுள்ளன.
- அரிய தகவல்களும் தரவுகளும் நிறைந்துள்ள இந்நூல் பல நூற்றாண்டுகளாகத் தமிழர் நிதி நிர்வாகம் உருவாகி வந்த வரலாற்றையும், தமிழகத்தின் பொருளாதார அடையாளம் வடிவமைக்கப்பட்ட விதத்தையும் குறித்த ஆழமான கண்ணோட்டத்தையும் வழங்குகிறது.
- இந்த ஆவண நூலில், பொருளியல், வரலாற்றுத் துறைகளைச் சேர்ந்த தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்-சர்வதேச கருத்தரங்கம்:
- சென்னையிலுள்ள தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தில், ‘கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள்’ எனும் தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கை, நிதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் (மார்ச் 17) தொடங்கி வைத்தார். இக்கருத்தரங்கில், இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்தும் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
- தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்குகள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத் தீவுகள் நிர்வாகத்தினருக்கும், கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பை (மிதக்கும் கலன்) காமராஜர் துறைமுகத்துக்கும் சரஸ்வத் வழங்கினார்.
- ரோஷினி என்ற இந்தக் கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்கு சென்னை தேசிய கடல்வளத் துறை தொழில்நுட்பக் கழகத்தின் விஞ்ஞானி பூர்ணிமா ஜலிகல் என்பவரது கண்டுபிடிப்பாகும்.
- வரும் 2032-ம் ஆண்டுக்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது, இந்தியா 12.4 கிகா வாட் கடலலை மின்னுற்பத்தியுடன் சேர்த்து 54 கிகா வாட் பெருங்கடல் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ளது” என்று நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் விஜய்குமார் சரஸ்வத் இக்கருத்தரங்கில் கூறியுள்ளார்
தெலங்கானா பிசி இடஒதுக்கீடு 42% ஆக அதிகரிக்கும் மசோதா நிறைவேற்றம்:
- தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை கடந்த மாதம் மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.
- மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவிகிதம் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தெலுங்கானா பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒதுக்கீடு மசோதா 2025 மற்றும் தெலுங்கானா பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் இடஒதுக்கீடு மசோதா 2025 ஆகியவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
- இந்த மசோதாக்கள் மூலம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு 29 சதவிகிதத்தில் இருந்து 42 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல், பட்டியலினத்தவர்களுக்கான இடஒதுக்கீடு 15 சதவிகிதத்தில் இருந்து 18 ஆகவும், பழங்குடியினவர்களுக்கான இடஒதுக்கீடு 6 சதவிகிதத்தில் இருந்து 10 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
- இதன்மூலம், கல்வி, வேலைவாய்ப்பு, உள்ளாட்சித் தேர்தல் உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்.
2025 பிப்ரவரி மாதத்திற்கான இந்தியாவில் மொத்த விலை குறியீட்டு எண்கள்:
- அகில இந்திய அளிவில் மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான 2025 பிப்ரவரி மாதத்திற்கான ஆண்டு பணவீக்க விகிதம் 2.38% (தற்காலிகமானது) ஆக உள்ளது.
- 2025 பிப்ரவரி மாதத்தில் நேர்மறையான பணவீக்க வீதத்திற்கு, உணவுப் பொருட்கள் மற்றும் அது சார்ந்த பிற உற்பத்தி, உணவு அல்லாத பொருட்கள், ஜவுளி உற்பத்தி போன்றவற்றின் விலை உயர்வே முதன்மையான காரணிகளாகும்.
- உணவுப் பொருட்களின் விலை (-2.05%), கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு (-1.46%), தாதுக்கள் (-1.26%) மற்றும் உணவு அல்லாத பொருட்களின் விலை (-0.36%) 2025 ஜனவரி 2025 உடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் குறைந்துள்ளது. இந்த முக்கிய பொருட்களுக்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 189.9-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 1.74% குறைந்து 186.6-ஆகவும் இருந்தது.
- மின்சாரம் (4.28%) மற்றும் தாது எண்ணெய்கள் (1.87%) ஆகியவற்றின் விலை 2025 ஜனவரியுடன் ஒப்பிடும்போது 2025 பிப்ரவரியில் அதிகரித்துள்ளது. இவற்றின் குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 150.6-ஆகவும், பிப்ரவரி மாதத்தில் 2.12% அதிகரித்து 153.8-ஆகவும் உள்ளது. நிலக்கரியின் விலை முந்தைய மாதத்தின் குறியீடு அளவிலேயே இருந்தது.
- உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான 22 என்.ஐ.சி இரண்டு இலக்கமாகவும், 17 வகையான பொருட்கள் விலை உயர்வையும் கண்டுள்ளன. இதற்கான குறியீடுகள் 2025 ஜனவரி மாதத்தில் 143.2-ஆகவும், பிப்ரவரி மாதத்தில், 0.42% அதிகரித்து 143.8-ஆகவும் உள்ளது.
- சில முக்கிய பொருட்கள், பிற பொருட்களின் உற்பத்தி; உணவுப் பொருட்களின் உற்பத்தி; அடிப்படை உலோகங்கள்; ஏனைய உலோகமல்லாத கனிமப்பொருட்கள், இரசாயனப் பொருட்கள் போன்றவை விலை வீழ்ச்சியைக் கண்டுள்ளன.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்:
- நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்தனா்.
- சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் மூலம் இயக்கப்படும் தலா 10 பெட்டிகளைக் கொண்ட 35 ஹைட்ரஜன் ரயில்களை தயாரிக்க மத்திய அரசு சாா்பில் கடந்த ஆண்டு ரூ.2,300 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து இந்த ரயிலுக்கான என்ஜின் மற்றும் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டிகள் தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) கடந்தாண்டு தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன
- இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கி. மீ. தூரத்துக்கு இயக்கப்படவுள்ளது.
PMIS(Prime Minister's Internship Scheme) செயலி:
- இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை (PM Internship Scheme App) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
- TNPSC EXAM NOTES : பிரதமரின் உள்ளகத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம்
ரிகாப்’ தகவல் பகிா்வு மைய செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படை அதிகாரி வி.டி.சஃபேகா் நியமனம்:
- ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடற்கொள்ளையா்கள் தடுப்புக்கான பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ரிகாப் ) அமைப்பின் உறுப்பு நாடுகளுக்கு தகவல்கள் அளிக்கும் தகவல் பகிா்வு மையத்தின் (ஐஎஸ்சி) செயல் இயக்குநராக இந்திய கடலோர காவல்படையின் முன்னாள் கூடுதல் தலைவா் (ஏடிஜிபி) வி.டி.சஃபேகா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
- கடந்த ஆண்டு நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற்ற ‘ரிகாப்’ ஐஎஸ்சி-யின் 19-ஆவது நிா்வாகக் குழு கட்டத்தில் இவா் தோ்வு செய்யப்பட்டு, நியமனம் செய்யப்பட்டுள்ளாா். வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி செயல் இயக்குநராக பதவி ஏற்குள்ள சஃபேகா், வரும் 2028-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு அப் பதவியை வகிக்க உள்ளாா்.
காற்று மாசு அதிகமுள்ள 5-ஆவது நாடு இந்தியா:
- ஸ்விட்சா்லாந்தைச் சோ்ந்த காற்றின் தரக் குறியீடு தொழில்நுட்ப நிறுவனமான ஐக்யூஏஐஆா் நிறுவனம், 2024-ஆம் ஆண்டின் தரவுகளின் அடிப்படையில் காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் மற்றும் நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
- 138 நாடுகளில் 8,954 நகரங்களில் இருந்து காற்றின் தரக் குறியீடு தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக 40,000-க்கும் மேற்பட்ட காற்றின் தர கண்காணிப்பு மையங்களில் இருந்து தரவுகள் சேகரிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காற்று மாசை அளவிடும் பிஎம் 2.5 நுண் துகளின் அடா்த்தி அடிப்படையில் நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
- உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைப்படி, காற்றில் இந்த அளவு 0-5 (மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டா்) வரை இருக்க வேண்டும்.
- அதன்படி, காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான சாட் முதலிடத்தில் உள்ளது. இந்நாட்டில் பிஎம் 2.5 நுண் துகளின் அளவு பரிந்துரைக்கப்பட்டதைவிட 18 மடங்கு (91.8) அதிகமாக பதிவாகியுள்ளது.
- அடுத்தடுத்த இடங்களில் வங்கதேசம் (78), பாகிஸ்தான் (73.7), காங்கோ (58.2) உள்ளன. 5-ஆவது இடத்தில் இந்தியா (50.6) உள்ளது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!