CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (19.03.2025-20.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (19.03.2025-20.03.2025)


தேசிய கால்நடை இயக்கத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்:

  • நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ராஷ்ட்ரீய கோகுல் மிஷன் (ஆா்ஜிஎம்) மற்றும் தேசிய பால்வள வளா்ச்சித் திட்டம் (என்பிடிடி) ஆகிய 2 திருத்தப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.6,190 கோடியாக உயா்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, கால்நடைத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை இயக்கத்திற்கு( (ராஷ்ட்ரிய கோகுல் மிஷன்-Rashtriya Gokul Mission)ஒப்புதல் அளித்தது. 2021-22 முதல் 2025-26 வரையிலான பதினைந்தாவது நிதிக்குழு  காலத்தின் போது, 1000 கோடி ரூபாய் கூடுதல் ஒதுக்கீட்டில், அதாவது 3400 கோடி ரூபாய் மொத்த ஒதுக்கீட்டில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
  • இதில் இரண்டு புதிய செயல்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன: (i) மொத்தம் 15,000 கிடேரிகளைக் கொண்ட 30 குடியிருப்பு வசதிகளை உருவாக்க செயலாக்க முகமைகளுக்கு கிடேரி வளர்ப்பு மையங்கள் அமைப்பதற்கான மூலதன செலவில் 35% ஒரு முறை வழங்குதல்
  • (ii) உயர் மரபுத் தன்மை கொண்ட கிடாரிகளை(கன்று ஈனாத இளம் பசு)வாங்குவதற்கு விவசாயிகளை ஊக்குவித்தல், பால் ஒன்றியங்கள் / நிதி நிறுவனங்கள் / வங்கிகளிடமிருந்து விவசாயிகள் வாங்கும் கடனுக்கு 3% வட்டி மானியம் வழங்குதல்.
  • திருத்தியமைக்கப்பட்ட தேசிய கால்நடை (ராஷ்ட்ரிய கோகுல்) இயக்கத்திற்கு 15-வது நிதிக்குழு சுழற்சியில் (2021-22 முதல் 2025-26 வரை) ₹3400 கோடி ஒதுக்கீட்டுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ராஷ்ட்ரீய கோகுல் மிஷன்(2014 டிசம்பரில் தொடங்கப்பட்டது) -நோக்கம்:

  • உள்நாட்டு மாடுகளின் இனங்களை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல். 
  • பால் உற்பத்தியை அதிகரித்தல். 
  • கிராமப்புற விவசாயிகளுக்கு பால் உற்பத்தியை லாபகரமாக்குதல். 
  • நாட்டு மாடுகளை பாதுகாத்தல். 
  • இந்த திட்டம் பால் உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கும், இறுதியில் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். இந்த முயற்சி உற்பத்தித் திறனை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பால்பண்ணைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 8.5 கோடி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும்.


விண்வெளி பயணங்களுக்காக விக்ரம் 3201 மற்றும் கல்பனா 3201 ஆகிய அதிவேக நுண்செயலிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ)  உருவாக்கியது:


விக்ரம் 3201: ஏவுகணை வாகனங்களுக்கான முதல் இந்தியத் தயாரிப்பு நுண்செயலி: 

  • விக்ரம் 3201 நுண்செயலி, சண்டிகரில் உள்ள குறைக்கடத்தி ஆய்வகத்துடன் (SCL) இணைந்து இஸ்ரோவின் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தால் உருவாக்கப்பட்டது .
  • இது SCL இன் அதிநவீன, 180nm CMOS குறைக்கடத்தி ஃபேப்பில் தயாரிக்கப்பட்டது.
  • இந்த மேம்பட்ட செயலி, 2009 முதல் இஸ்ரோவின் ஏவுதள வாகன ஏவியோனிக்ஸ் அமைப்புகளில் செயல்பட்டு வரும் உள்நாட்டு 16-பிட் விக்ரம் 1601 நுண்செயலியின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

கல்பனா 3201: விண்வெளி பயன்பாடுகளுக்கான பல்துறை நுண்செயலி:
  • இரண்டாவது நுண்செயலி, கல்பனா 3201, ஒரு பல்துறை 32-பிட் SPARC V8 RISC நுண்செயலி ஆகும்.
  • இது IEEE 1754 இன்ஸ்ட்ரக்ஷன் செட் ஆர்கிடெக்சரை அடிப்படையாகக் கொண்டது மற்றும் திறந்த மூல மென்பொருள் கருவித்தொகுப்புகளுடன் இணக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலி விமான மென்பொருளிலும் சோதிக்கப்பட்டுள்ளது மற்றும் இஸ்ரோவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிமுலேட்டர்கள் மற்றும் ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல் (IDE) ஆகியவற்றுடன் இணக்கமாக உள்ளது.
(இரண்டு நுண்செயலிகளும் PSLV-C60 பயணத்தின் போது விண்வெளியில் சரிபார்க்கப்பட்டன)

சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலை:

  • எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
  • இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் கடந்த 1876 மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல். கடந்த 1902-ம் ஆண்டு தனது 26 வயதில் இந்திய தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார்.
  • 1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க சிந்துவெளி பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு, இந்திய துணைக் கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களை புரட்டிப் போட்டது. அவர் கடந்த 1958 ஆக.17-ம் தேதி மறைந்தார்.
  • இந்நிலையில், கடந்த ஜன.5-ம் தேதி நடைபெற்ற சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு தொடக்க விழாவின்போது, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் 19.03.2025 திறந்து வைத்தார். 

ராஜீவ் யுவ விகாசம்' திட்டம்:

  • தெலுங்கானாவில் ஐந்து லட்சம் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 'ராஜீவ் யுவ விகாசம்' திட்டத்தை முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார். 

ஆசியான் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாடு:

  • ஆசியான் (தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு) மற்றும் அதன் 8 பாா்வையாளா் உறுப்பு நாடுகளின் கீழ் இயங்கும் பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் (இடபிள்யுஜி) இரண்டு நாள் மாநாடு தில்லியில்  (மாா்ச் 19/2025) தொடங்கியது. 
  • மலேசியாவுடன் இணைந்து இந்தியா சாா்பில் நடத்தப்படும் இந்த மாநாட்டில் ஆசியான் உறுப்பு நாடுகளான புரூனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மா், பிலிப்பின்ஸ், சிங்கப்பூா், தாய்லாந்து, வியத்நாம் மற்றும் அந்த அமைப்பின் பாா்வையாளா் உறுப்பினா்களான இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜப்பான், நியூஸிலாந்து, தென் கொரியா, ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 
  • பயங்கரவாத எதிா்ப்புக்கான நிபுணா் பணிக் குழுவின் மாநாட்டை இந்தியா இணை தலைமையேற்று நடத்துவது இதுவே முதல் முறை என பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

9 மாதங்களுக்குப் பிறகு பாதுகாப்பாக பூமி திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்!

  • இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்டோர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு திரும்பினர்.
  • அமெரிக்காவின் போயிங் நிறுவனம் தயாரித்த ஸ்டார்லைனர் என்ற புதிய விண்கலத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் கடந்த ஆண்டு ஜூன் 5-ம் தேதி ஐஎஸ்எஸ் நிலையத்துக்கு சென்றனர்.
  • இவர்கள் 8 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருவரும் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. 

நாக்பூரில் வன்முறை

  • மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி போராட்டம் நடைபெற்ற நிலையில், நாக்பூரில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இது திட்டமிட்ட சதி என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.
  • மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ என்ற பெயரில் திரைப்படமாக இந்தி மொழியில் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில், சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஆஸ்மி, முகலாய மன்னர் அவுரங்கசீப்பை பாராட்டி கோஷமிட்டது சர்ச்சையானது.
  • நாக்பூரில் கலவரம் பாதித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா சட்டத்தின் 163-வது பிரிவின் கீழ் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 5-க்கும் மேற்பட்டோர் ஓரிடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பொருள் விநியோக சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் மத சிறுபான்மையினருக்கு  4% இடஒதுக்கீடு மசோதா தாக்கல்:

  • கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் திருத்த மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் 18.03.2025 தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு, பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • கர்நாடகாவில் அரசின் ஒப்பந்த பணிகளில் முஸ்லிம் உள்ளிட்ட மத சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் மத சிறுபான்மையினருக்கு 2பி பிரிவில் ரூ.2 கோடி வரையிலான ஒப்பந்த பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 
  • இந்நிலையில் இந்த சட்ட திருத்த மசோதாவை கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல், 'கர்நாடக பொது கொள்முதல் (திருத்தம்) மசோதா 2025' என்ற பெயரில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஒரு கிராமம் ஒரு அரச மரம்' என்ற திட்டம்:

  • பேரூர் ஆதீனத்தின் 24-வது குரு மகா சன்னிதானம் தெய்வத்திரு பேரூர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு (20.03.2025), பேரூர் ஆதினம், ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம், கோவை கட்டிட கட்டுமானம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு, நொய்யல் ஆறு அறக்கட்டளை ஆகியோர் சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு அரச மரத்தினை நடவு செய்வதை இலக்காக கொண்டு 'ஒரு கிராமம் ஒரு அரச மரம்' என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளது.
  • முதல் கட்டமாக, கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 2 ஆயிரம் கிராமங்களில் அரச மரங்கள் நடவு செய்யப்பட உள்ளன.

புதுச்சேரியில் வீடுதோறும் 20 லிட்டர் இலவச குடிநீர் கேன் வழங்கும் திட்டம்:

  • குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் வீடுதோறும் 20 லிட்டர் சுத்திகரிப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக தரும் திட்டம் தமிழ் புத்தாண்டில் தொடங்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்தார்.
  • அமைச்சர் லட்சுமி நாராயணன், “குடிநீர் பாதிக்கப்பட்டுள்ள நகரப்பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இத்திட்டம் வரும் தமிழ் புத்தாண்டில் தொடங்குகிறது, பட்டியல் தயார் செய்துள்ளோம். அதன் விவரத்தை தொகுதி எம்எல்ஏவிடம் தருவோம்.” என்று தெரிவித்தார்.

டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் விருது 2025:Digital Transformation Award 2025:

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அதன் 'சாரதி' மற்றும் 'பிரவாஹ்' டிஜிட்டல் முயற்சிகளுக்காக லண்டனில் உள்ள சென்ட்ரல் பேங்கிங் நிறுவனத்தால் நிறுவப்பட்ட டிஜிட்டல் உருமாற்ற விருதை(2025) வென்றது
  • சாரதி: ஜனவரி 2023 இல் தொடங்கப்பட்டது, இது உள் பணிப்பாய்வுகளை டிஜிட்டல் மயமாக்கியது, ஆவண மேலாண்மையை மேம்படுத்தியது மற்றும் வலுவான தரவு பகுப்பாய்வை செயல்படுத்தியது.
  • பிரவாஹ்: மே 2024 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது வெளிப்புற ஒழுங்குமுறை சமர்ப்பிப்புகளை நெறிப்படுத்தியது, சார்த்தி அமைப்புடன் தடையின்றி இணைத்தது.
  • டிஜிட்டல் புதுமை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் மத்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை டிஜிட்டல் உருமாற்ற விருது அங்கீகரிக்கிறது .

மகளிர் பிரீமியர் லீக் 2025-மும்பை இண்டியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது

  • 3வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) தொடர் கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கியது. இதன் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் தலா 10 புள்ளி பெற்றாலும் ரன்-ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. குஜராத் ஜெயண்ட்ஸ் 3வது இடம் பிடித்தது. உ.பி.வாரியர்ஸ், பெங்களூரு அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின.
  • இதில் வெளியேற்றுதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 47 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று (மார்ச் 15) நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின
  • இதில் மும்பை இண்டியன்ஸ் அணி டெல்லியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)