CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (01.03.2025-02.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0
CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (01.03.2025-02.03.2025)



NASM-SR (Naval Anti-Ship Missile) -கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை:

  • ஹெலிகாப்டரில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பலை தகர்க்கும் குறுகிய தூர ஏவுகணையை (NASM-SR), டிஆர்டிஓ மற்றும் கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்தன.
  • ஒடிசாவில் உள்ள சண்டிப்பூர் பரிசோதனை மையம் அருகே இந்த ஏவுகணை சோதனை மேற்கொள்ளப்பட்டது
  • கடற்படை பயன்பாட்டுக்கு, ஹெலிகாப்டர்களில் இருந்து எதிரிநாட்டு போர்க்கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தும் குறுகிய தூர ஏவுகணையை (என்ஏஎஸ்எம்-எஸ்ஆர்) டிஆர்டிஓ தயாரித்தது. சுமார் 50 கி.மீ தூரத்துக்குள் உள்ள இலக்கை, இந்த ஏவுகணை மூலம் துல்லியமாக தகர்க்கமுடியும்.
  • இந்த ஏவுகணையில் ‘மேன்-இன்- லூப்’ என்ற தனிச்சிறப்பான அம்சம் உள்ளது. இதன் மூலம் ஹெலிகாப்டரில் பறந்தபடியே, இலக்கை கணக்கிட்டு ஏவுகணை மூலம் பைலட் துல்லிய தாக்குதல் நடத்தமுடியும். கடல் மட்டத்தில் இருந்து குறைந்த உயரத்தில் ஹெலிகாப்டரில் பறந்தபடியே இந்த தாக்குதலை நடத்தமுடியும் என்பதால், இதை ரேடார் மூலமும் கண்டுபிடிக்க முடியாது. மேலும், இலக்கை கண்டறிந்து தாக்குதல் நடத்த அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பமும் இதில் உள்ளது.

16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா

  • 1952-ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு சாா்பில், கோவா நகரில் ஆண்டுதோறும் பன்னாட்டு திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதேபோன்றதொரு திரைப்பட விழா பெங்களூரில் 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கா்நாடக அரசு உதவியுடன் நடைபெற்று வந்த இந்த திருவிழா, 2009-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா என்ற பெயரில் அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.
  • அதன்படி, 16-ஆவது பெங்களூரு சா்வதேச திரைப்பட விழா பெங்களூரில் மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 8-ஆம் தேதிவரை 8 நாள்களுக்கு நடைபெற இருக்கிறது.
  • சா்வதேச அளவிலான திரைப்படங்களில் 200 திரைப்படங்கள் தோ்வு செய்யப்பட்டு பெங்களூரு, ராஜாஜி நகரில் உள்ள ஓரியன் மாலில் உள்ள திரைகளில் திரையிடப்படுகின்றன. இந்த திரைப்பட விழாவில் சிறந்த படங்கள் மட்டுமின்றி, வா்த்தக ரீதியான திரைப்படங்களை தோ்வுசெய்து விருது வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.


தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி 2025:

  • 2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளா் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது.
  • கடந்த 2022-23-இல் இபிஎஃப் மீதான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக இருந்தது. இதை 2023-24-இல் 8.25 சதவீதமாக இபிஎஃப்ஓ கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயா்த்தியது.
  • இந்நிலையில், 2024-25-ஆம் நிதியாண்டுக்கும் இபிஎஃப் மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாகவே தொடர மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தலைமையில்  நடைபெற்ற 237-ஆவது இபிஎஃப்ஓ மத்திய அறங்காவலா் குழு (சிபிடி) கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தொழிலாளா் அமைச்சகம் தெரிவித்தது.


சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது:

  • சூரியனின் புறவெளியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தை வடிவமைத்த இஸ்ரோ, அதை பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 2023, செப்டம்பா் 2-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
  • சூரியனின் கரோனா, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியா் பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது.
  • ஆதித்யா விண்கலத்தில் உள்ள சோலாா் அல்ட்ரா வைலட் இமேஜிங் டெலஸ்கோப் எனப்படும் சூட் கருவியானது சூரியனின் முதல் இரு அடுக்குகளான போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிா்கள் குறித்தும், புற ஊதா கதிா்களுக்கு அருகே ஏற்படும் கதிா் வீச்சு மாறுபாடுகள் குறித்தும் ஆய்வுகளை மேற்கொள்ள அனுப்பப்பட்டுள்ளது.
  • ஒளிவெடிப்பை காட்சிப்படுத்தியது: அதன்படி, போட்டோஸ்பியா் மற்றும் குரோமோஸ்பியரின் புகைப்படங்களை அக்கருவி தொடா்ந்து எடுத்து வருகிறது. பொதுவாகவே சூரியனின் காந்தப் புலத்தில் திடீரென ஏற்படும் மாற்றங்களால் ஒளி வெடிப்பு ஏற்பட்டு கதிா் ஆற்றல் வெளிப்படும். இதை சோலாா் ஃப்ளோ் என அழைக்கிறோம்.
  • அத்தகைய ஒளி வெடிப்பு அண்மையில் சூரியனின் கீழ் புறவெளியில் நிகழ்ந்ததை சூட் கருவி காட்சிப்படுத்தியுள்ளது. அதன்மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு ஆராய்ச்சி முன்னெடுக்கப்படுகிறது.
  • இதுபோன்ற ஒளி வெடிப்புகள் புவியின் தட்பவெப்ப நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சூரியனின் கதிா்வீச்சால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு இந்த ஆய்வுகள் உதவும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.


மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-2025:

  • நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
  • முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பா்) ஜிடிபி வளா்ச்சி 5.6 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
  • இருப்பினும், இந்த காலகட்டத்தில் நாட்டின் ஜிடிபி வளா்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கணித்திருந்த நிலையில், அதைவிட குறைவான வளா்ச்சியே தற்போது பதிவாகியுள்ளது.


எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள்:

  • நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி கடந்த ஜனவரி மாதத்தில் 4.6 சதவீதமாக உள்ளது.
  • முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் அது 4.2 சதவீதமாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளா்ச்சி முன்னேறம் கண்டுள்ளது.
  • கடந்த 2024 ஜனவரி மாதத்தில் 10.6 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்திருந்த நிலக்கரி உற்பத்தி, நடப்பாண்டின் அதே மாதத்தில் 4.6 சதவீத வளா்ச்சியை மட்டுமே கண்டுள்ளது.
  • மதிப்பீட்டு மாதத்தில் உருக்கு உற்பத்தியின் வளா்ச்சி 9.2 சதவீதத்தில் இருந்து 3.7 சதவீதமாகவும், மின்சார உற்பத்தி வளா்ச்சி 5.7 சதவீதத்தில் இருந்து 1.3 சதவீதமாகவும் சரிந்துள்ளது.
  • எனினும், சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், சிமென்ட் ஆகிய துறைகளில் உற்பத்தி முறையே 8.3 சதவீதம், 3 சதவீதம், 14.5 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.
  • கடந்த ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் பத்து மாதங்களில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 4.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 7.8 சதவீதமாக இருந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஒட்டுமொத்த தொழில் வளா்ச்சியை அளவிடும் தொழிக உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி) எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் 40.27 சதவீத பங்களிப்பை வழங்குவது குறிப்பிடத்தக்கது.


ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக உருவெடுத்தல்:

  • இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறித்த ‘ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக உருவெடுத்தல்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டது.
  • அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2047-இல் வளா்ச்சியடைந்த நாடாக வேண்டும் என்ற இலக்கை நிா்ணயித்து இந்தியா பயணித்து வருகிறது. கடந்த 2000-ஆம் ஆண்டுமுதல் 2024 வரை சராசரியாக 6.3 சதவீதமாக இந்திய பொருளாதாரம் வளா்ச்சியடைந்துள்ளது.
  • உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டுமெனில் இந்த வளா்ச்சி போதுமானதாக இருக்காது. நாட்டின் மொத்த தேசிய வருமானம் (ஜிஎன்ஐ) தலா வருமானம் தற்போது இருப்பதைவிட 8 மடங்கு அதிகரிக்க வேண்டும். மேலும், அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வளா்ச்சி தொடா்ந்து அதிகரித்த வண்ணம் இருக்க வேண்டும்.
  • இதற்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதோடு மேலும் பல முக்கிய சீா்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.
  • 2047-இல் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதத்தில் பொருளாதாரம் வளா்ச்சியடைய வேண்டியது அவசியம் என குறிப்பிடப்பட்டது.


பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) 2025:

  • நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில் இது 9.1 சதவீதம் அதிகமாகும்.
  • அரசுத் தரவுகளின்படி, பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,83,646 கோடியாகும். இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.35,204 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ.43,704 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.90,870 கோடி, இழப்பீட்டு வரி ரூ.13,868 கோடி.
  • உள்நாட்டு வருவாய் மூலம் ரூ.1.42 லட்சம் கோடியும், இறக்குமதி வருவாய் மூலம் ரூ.42,702 கோடியும் கிடைக்கப் பெற்றுள்ளது. இவை முறையே 10.2 சதவீதம், 5.4 சதவீதம் அதிகரிப்பாகும்.
  • பிப்ரவரியில் திருப்பி அளிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.20,889 கோடி. முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது 17.3 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிடைக்கப் பெற்ற மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.68 லட்சம் கோடியாகும்.

உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்-சா்வதேச நாணய நிதியம்:

  • 2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளா்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சா்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
  • அதிக தனியாா் முதலீடு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற காரணங்களால் இது சாத்தியப்படும் எனவும் தெரிவித்தது.


அரசமைப்புச் சட்ட விதி 136:

  • அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
  • இதனால் நடுவா் மன்ற செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
  • அரசமைப்புச் சட்ட விதி 136-இன்கீழ் உச்சநீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயா் சிறப்பு அனுமதி மனு (Special Leave Petition) என்பதாகும்.
  • உயா்நீதிமன்றங்கள் உள்பட (ராணுவ நீதிமன்றங்கள் தவிா்த்து) தீா்ப்பாயங்கள் என நாட்டில் உள்ள எந்தவொரு நீதிமன்றத்தின் தீா்ப்புகளை எதிா்த்தும் அரசமைப்புச் சட்ட விதி 136-இன் கீழ் சம்பந்தப்பட்ட நபா் மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • இதை ஏற்பதும் நிராகரிப்பதும் உச்சநீதிமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரமாக உள்ளது.


வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது:

  • மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் ஆணையத்தின் "சதியுடன்" பாஜக வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
  • பின்னர், ஒரே மாதிரியான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (இபிஐசி) எண்களைக் கொண்ட மேற்கு வங்கம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பட்டியல்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
  • இந்த நிலையில், வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான வாக்காளா் அடையாள எண் உடையவா்கள் போலி வாக்காளா்கள் அல்ல என இந்திய தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


டெசர்ட் ஹண்ட் போர்ப் பயிற்சி 2025:

  • 2025 பிப்ரவரி 24 முதல் 28 வரை ஜோத்பூர் விமானப்படை நிலையத்தில் இந்திய விமானப்படையால் "எக்சர்சைஸ் டெசர்ட் ஹண்ட் 2025(EXERCISE DESERT HUNT 2025)" என்று பெயரிடப்பட்ட ஒருங்கிணைந்த முப்படை சிறப்புப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் சிறப்புப் படைகள், இந்திய கடற்படையின் கமாண்டோக்கள், இந்திய விமானப்படையின் கருட் சிறப்புப் படையினர் இணைந்து பங்கேற்றனர்.

  • பாதுகாப்பு சவால்களை எதிர்த்து விரைவான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக மூன்று சிறப்புப் படை பிரிவுகளிடையே செயல்திறன், ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சி இதுவாகும். இந்த பயிற்சியில் வான்வழி நடவடிக்கைகள், துல்லி தாக்குதல்கள், பிணைக் கைதிகள் மீட்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல நடைமுறைகள் அடங்கும். இதில் படைகளின் போர் தயார்நிலையும் சோதிக்கப்பட்டது.
  • மூத்த அதிகாரிகள் பயிற்சியை மேற்பார்வையிட்டனர். மேலும், முப்படைகளுக்கு இடையேயான தடையற்ற ஒத்துழைப்பு மூலம் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய ஆயுதப் படைகளின் உறுதிப்பாட்டை வளர்ப்பதற்கான ஒரு தளத்தை இது வழங்கியது.


உலக மொபைல்  காங்கிரஸ் 2025:

  • ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3-6, 2025 வரை நடைபெறவுள்ள  உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றான,   உலக மொபைல் மாநாடு- 2025 -ல் ( Mobile World Congress (MWC) 2025),  மத்திய தொலைத்தொடர்புத் துறை  அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா, இந்தியாவின் சார்பில் கலந்து கொள்கிறார்.
  • இந்தியா மொபைல் மாநாடு- 2025- ன் முன்னோட்ட நிகழ்ச்சியை அவர் வெளியிடுவதுடன், உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் அரங்கையும் (‘Bharat Pavilion’) திறந்து வைப்பார்.
  • இந்தியா மொபைல் மாநாடு என்பது இந்தியாவின் கண்டுபிடிப்பு சூழல் அமைப்பை முன்னிலைப்படுத்தும் தளமாகும், மேலும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் தங்கள் அதிநவீன முன்னேற்றங்கள் மற்றும் நிலையான தீர்வுகளை இதில் காட்சிப்படுத்துகின்றனர். இந்திய அரங்கில்(‘Bharat Pavilion’) 38 இந்திய தொலைத்தொடர்பு உபகரண உற்பத்தியாளர்கள் தங்களின் அதிநவீன தயாரிப்புகளான வன்பொருள், மென்பொருள் ஆகிய இரண்டையும் காட்சிப்படுத்துவார்கள்.

49வது சிவில் கணக்கு தினம்:

  • மார்ச் 1, 2025 அன்று இந்திய சிவில் கணக்கு பணியின் ( Indian Civil Accounts Service (ICAS)) 49வது நிறுவன நாளைக் குறிக்கும் வகையில், சிவில் கணக்கு தினம் 2025 (49th Civil Accounts Day 2025), புதுதில்லியில் கொண்டாடப்பட்டது. மத்திய நிதி மற்றும் பெரு வணிக நிறுவன  விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.
  • தொடக்க விழாவின் போது, மத்திய நிதியமைச்சர் பொது நிதி மேலாண்மை அமைப்பு  பற்றிய தொகுப்பையும் வெளியிட்டார்.
  • இந்திய சிவில் கணக்குகள் அமைப்பின்  பரிணாமம் மற்றும் சாதனைகள் குறித்த குறும்படமும் திரையிடப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய  மத்திய நிதியமைச்சர், நிர்வாகத்தின் முக்கிய இலக்குகளை அடைவதில் பொது நிதி மேலாண்மை அமைப்பு  (பிஎஃப்எம்எஸ்) ஆற்றிய பங்கை அங்கீகரித்தார்> 60 கோடி பயனாளிகளுக்கு பயனளிக்கும் கடைசி மைலை எட்டுவது, 1100 டிபிடி திட்டங்களை உள்ளடக்கிய 1200 க்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாநில திட்டங்களை நேரடியாக வழங்குதல் இதில் அடங்கும்.
  • 31 மாநில கருவூலங்கள் மற்றும் 40 லட்சம் திட்டங்களை செயல்படுத்தும் முகமைகளின் ஒருங்கிணைப்பு மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துவதற்கு பிஎஃப்எம்எஸ் வழிவகுத்துள்ளது என்று திருமதி சீதாராமன் கூறினார்.
  • பொது மற்றும் தனியார் துறை வங்கிகள் - தடையற்ற நிதி பரிமாற்றங்களை எளிதாக்கும் 650 நிதி நிறுவனங்களுடன் பிஎஃப்எம்எஸ் கட்டமைப்பு செயல்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் தெரிவித்தார். பிஎஃப்எம்எஸ்  பரிவர்த்தனைகளின் அளவு 2015 இல் 2 கோடி செலுத்துதலில் இருந்து 2024 இல் 250 கோடியாக அதிவேகமாக உயர்ந்துள்ளது.
  • தொடக்க அமர்வைத் தொடர்ந்து சிறப்புரையை 16வது நிதி ஆணையத்தின் தலைவர் டாக்டர். அரவிந்த் பனகாரியா,  "உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியா: அடுத்த தசாப்தம் " என்ற தலைப்பில் ஆற்றினார்.


NAIL-National Association of Impact Leaders) கூட்டம் 2025:

  • மத்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (IICA), கோவாவில், தாக்கத்தை ஏற்படுத்தும் தேசிய பிரதிநிதிகள் சங்கத்தின் (NAIL-National Association of Impact Leaders) கூட்டம் 2025-ஐ நடத்தியது. 

  • 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்ட இந்த மைல்கல் நிகழ்வு, புகழ்பெற்ற (ESG - Environmental, social and governance), சுற்றுச் சூழல், சமூக, நிர்வாக (இஎஸ்ஜி) வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள், சிந்தனைத் தலைவர்களின் சங்கமமாக அமைந்தது.
  • இவர்கள், நுண்ணறிவுகளைப் பரிமாறிக்கொள்வதற்கும், வளர்ந்து வரும் நிலைத்தன்மை போக்குகள் குறித்து விவாதிப்பதற்கும்,  பொறுப்பான கார்ப்பரேட் எதிர்காலத்திற்கான போக்கை வகுப்பதற்கும் இணைந்து ஆலோசனை நடத்தினர். 
  • தேசிய நிதி அறிக்கை ஆணையத்தின் (என்எஃப்ஆர்ஏ) தலைவரும், ஐஐசிஏ-வின் தலைமை இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு அஜய் பூஷண் பிரசாத் பாண்டேவின் மதிப்புமிக்க வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றது.


 OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)