4 சீன பொருள்கள் மீது மத்திய அரசு "பொருள் குவிப்பு தடுப்பு வரி " விதித்துள்ளது:
- சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதித்துள்ளது.
- சீனாவில் இருந்து இந்த பொருள்கள் மிகவும் மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளா்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- இதன்படி அலுமினியம் ஃபாயில் காகிதங்கள் மீது அடுத்த 6 மாதங்களுக்கு ஒரு டன்னுக்கு 873 அமெரிக்க டாலா் பொருள் குவிப்பு தடுப்பு வரியாக விதிக்கப்படுகிறது. மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்கள் மீது 35 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வேக்வம் ஃபிளாஸ்க் மீது டன்னுக்கு 1,732 அமெரிக்க டாலா், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் மீது டன்னுக்கு 276 டாலா் வரி விதிக்கப்படுகிறது.
பொருள் குவிப்பு தடுப்பு வரி
- பொருள் குவிப்பு தடுப்பு வரி என்பது தங்கள் பொருட்களை நியாயமான சந்தை விலைக்கு குறைவாக விற்று, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்கள் மீது அரசாங்கம் கூடுதல் விதிக்கும் கூடுதல் பாதுகாப்பு சுங்க வரி ஆகும்.
- உள்நாட்டு உற்பத்தியாளர்களைப் பாதுகாக்கவும், சந்தையில் ஏகபோகத்தைத் தடுக்கவும், வர்த்தக நிலைத்தன்மையை ஏற்படுத்தவும் இத்தகைய வரி விதிக்கப்படுகிறது.
- ஜெனிவாவில் உள்ள உலக வர்த்தக சபையில் மேற்கொள்ளப்பட்ட பொது ஒப்பந்தம் ஆர்டிகிள் 6 கீழ் நாடுகள், இந்த பொருள் குவிப்பு வரியை போட்டுக்கொள்ள முடியும்.
ஈவுத் தொகை 2023-24:
- பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
- முந்தைய நிதியாண்டில் பங்குதாரா்களுக்கு ரூ.20,964 கோடி ஈவுத்தொகையை பொதுத்துறை வங்கிகள்அளித்திருந்தன.
- ஆனால், 2023-24 நிதியாண்டில் இது ரூ.27,830 கோடியாக உயா்ந்துள்ளது. இது 32.7 சதவீத உயா்வாகும். இந்த ரூ.27,830 கோடி ஈவுத் தொகையில் 65 சதவீதமான ரூ.18,013 கோடி மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில், பொதுத் துறை வங்கிகளின் பெரும்பான்மையான பங்குகளை மத்திய அரசே வைத்துள்ளது.
மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க தேசிய அளவிலான செயற்குழு:
- உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது நாடெங்கிலும் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மாணவர்களின் மனநலன் சார் பிரச்சினைகளைக் களையவும் அவற்றுக்கு தீர்வு காணவும் ஏதுவாக தேசிய அளவிலான செயற்குழுவை அமைக்க உச்சநீதிமன்றம்(மார்ச் 24) உத்தரவிட்டுள்ளது.
- இதையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தற்கொலை குறித்த இவ்விவகாரத்தில் இந்த செயற்குழு உரிய விசாரணை நடத்தி அடுத்த நான்கு மாதங்களில் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விரிவான விசாரணை அறிக்கையை 8 மாதங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த குழுவுக்கு ரூ. 20 லட்சம் ஒதுக்கிடவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
59-ஆவது ஞானபீட விருது:
- பிரபல ஹிந்தி எழுத்தாளா் வினோத் குமாா் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.
- இதன்மூலம், இந்திய அளவில் இலக்கியத் துறையில் மிக உயரிய விருதான ஞானபீட விருதை சத்தீஸ்கரில் இருந்து பெறும் முதல் நபா் என்ற பெருமையையும் அவா் பெற்றுள்ளாா்.
- சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் என இலக்கியத் துறையில் பங்களித்துள்ள மிகச்சிறந்த சமகால எழுத்தாளராக விளங்கும் வினோத் குமாா் சுக்லா இந்த விருதை பெறும் 12-ஆவது ஹிந்தி எழுத்தாளராவாா்.
- விருதுக்குத் தோ்வாகியுள்ள வினோத் குமாா் சுக்லாவுக்கு பரிசுத் தொகையாக ரூ.11 லட்சம், சரஸ்வதி உருவத்திலான வெண்கலச் சிலை மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படவுள்ளது. முன்னதாக, கடந்த 1999-ஆம் ஆண்டு கேந்திர சாகித்திய அகாதெமி விருதை வினோத் குமாா் சுக்லா பெற்றாா்.
வெங்காயம் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை மத்திய அரசு ரத்து
- வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது.
- அரசின் இந்த முடிவால் வெங்காயம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைத்ததுடன் வெங்காய ஏற்றுமதியும் அதிகரித்தது. இந்தநிலையில் ரபி பயிர் வரத்து அதிகரித்துள்ளதால், பல மாநிலங்களில் வெங்காயம் விலை சரிந்துள்ளது.
- எனவே விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான 20 சதவீத ஏற்றுமதி வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- இதன்படி வெங்காய விலை தேசிய சராசரியில் 39 சதவீதமும், சில்லறை விலையில் 10 சதவீதமும் குறைந்துள்ளதால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும், ஏற்றுமதி வரி ரத்து அறிவிப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது.
சிறந்த நீர்வள ஆதார திட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு விருதுகள்:
- மத்திய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரிய தினம் ஆண்டுதோறும் டெல்லியில் கொண்டாடப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் பல்வேறு பிரிவுகளில் நீர்வளத்துறையில் 2024ம் ஆண்டு விருதுகளுக்கான விண்ணப்பங்களை கோரியது.
- தமிழ்நாடு நீர்வளத்துறை விருதுகளுக்காக விண்ணப்பித்தது. மத்திய நீர்ப்பாசன மற்றும் மின்சக்தி வாரியம் 2024ம் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருதுகளை வழங்க தமிழ்நாடு நீர்வளத்துறையை தேர்வு செய்துள்ளது.
- அதன்படி பங்கேற்பு பாசன மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துதல், ஒருங்கிணைந்த நீர்வள ஆதார மேலாண்மையில் சிறந்து விளங்குதல் – உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம், சிறந்த நீர்வள ஆதாரத் திட்டமான சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்கு மேட்டூர் அணையின் வெள்ள உபரிநீரை நீரேற்று பாசனம் மூலம் திருப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழ்நாடு நீர்வளத்துறைக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு நேரில் ஆய்வு:
- மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பழங்குடியினத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக மாறியது. 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கலவரத்தால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் புலம்பெயர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மணிப்பூர் நிலவரத்தை உச்ச நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான நீதிபதிகள் குழு இம்பால் சென்றடைந்தது.
- நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் மற்றும் என்.கோட்டீஸ்வர் உள்ளிட்டோர் அடங்கிய இக்குழுவினர் கலவரத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட சூரசந்த்பூர் மாவட்டத்துக்கு சென்றனர். அங்கு இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்களை நீதிபதிகள் குழு சந்தித்து பேசியது. அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
- கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு மணிப்பூர் சென்றுள்ளது
தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா-உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்:
- பிரபல தோட்டக்கலை விஞ்ஞானி கிருஷ்ணா லால் சத்தா (88) உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் (23.03.2025) தெரிவித்தனா்.
- வேளாண்மை மற்றும் தோடக்கலை சாா்ந்த 30 நூல்களை எழுதியவரான கிருஷ்ணா லால் சத்தாவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
- பாகிஸ்தானில் உள்ள சியால்கோட்டில் கடந்த 1936-இல் பிறந்த இவா், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் சோ்ந்து 1964-இல் முனைவா் பட்டம் பெற்றாா். வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் பேராசிரியா், தேசிய திட்டக்குழுவின் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான பணிக்குழு உறுப்பினா், மேற்கு வங்கம், ஹரியாணா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் தோட்டக்கலை மேம்பாட்டுக்கான குழு உறுப்பினா் உள்பட தேசிய அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா்.
- இதுதவிர சா்வதேச மாம்பழ பணிக்குழு மற்றும் வேளாண் வணிக நிபுணா்களுக்கான இந்திய சமூகத்தின் தலைவா் என பல்வேறு சா்வதேச அமைப்புகளுக்கு ஆலோசகராகவும் இருந்துள்ளாா்.
LIST OF IMPORTANT DAYS IN TAMIL-MARCH 2025:
உலக வானிலை நாள் : World Meteorological Day
- 1950 அம் ஆண்டு உலக வானிலை அமைப்பை (WMO) தொடங்கிய நாளான மார்ச் 23 ஆம் தேதியை உலக வானிலை நாளாக ஆண்டுதோறும் கொண்டாடுகிறோம்.
- உலக வானிலையின் தந்தை என லுக் ஹோவார்ட் (LUKE HOWARD) அழைக்கப்படுகிறார்; இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1801-1841 காலகட்டத்தில் லண்டன் மாநகரின் வானிலை பற்றிய எழுதிய கட்டுரைகள் வானிலை ஆய்வுக்கு வித்திட்டது. ஒரு நாட்டின் பொருளாதாரம், தொழில், விவசாயம், கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, தொழில், விஞ்ஞான போன்ற பல துறைகளில் வானிலை முக்கிய பங்கு வகிக்கிறது.
- இந்தியாவின் வானிலை தந்தை என டாக்டர் மேகநாத் சாஹா என அழைக்கப்படுகிறார். இவர் வளிமண்டல ஆய்வுகளின் காலநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டவர்.
- உலக வானிலையியல் அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் இயங்கி வருகிறது. இந்திய வானிலைத் துறையின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது; சென்னை, மும்பை, கல்கத்தா, நாக்பூர், குவஹாத்தி , டெல்லி போன்றவற்றில் பிராந்திய சேவை அமைப்புகள் இயங்கி வருகின்றன.
- கருப்பொருள் (2025) : "Closing the early warning gap together".
உலக காசநோய் தினம்: World Tuberculosis Day
- காசநோயின் பேரழிவு தரும் உடல்நலம், சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், உலகளாவிய காசநோய் தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை முடுக்கிவிடவும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 24 அன்று உலக காசநோய் (காசநோய்) தினத்தை நினைவுகூருகிறோம்.
- 1882 மார்ச்சு 24 இல் டாக்டர் றொபேர்ட் கொக் (Robert Koch) என்பவர் காசநோய்க்கான காரணியை (TB bacillus) பெர்லினில் அறிவித்து அறிவியல் உலகை வியப்பில் ஆழ்த்தினார். அந்நாளில் இந்நோய் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேருக்கு ஒருவரின் உயிரைக் காவு கொண்டு வந்தது. கொக்கின் இக்கண்டுபிடிப்பு காசநோய் பற்றி முழுமையாக அறிய வழிவகுத்தது.
- 1982 ஆம் ஆண்டில் இக்கண்டுபிடிப்பின் நூற்றாண்டு நினைவு நாளில் காச நோய் மற்றும் நுரையீரல் நோய்களுக்கெதிரான அனைத்துலக அமைப்பு (International Union Against Tuberculosis and Lung Disease - IUATLD) மார்ச் 24 ஆம் நாளை உலக காசநோய் நாளாக அறிவிக்க வேண்டுகோள் விடுத்தது. 1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு (WHO) இந்நாளை காசநோய் விழிப்புணர்வு நாளாக அறிவித்தது.
- உலக காசநோய் தினத்தை டாக்டர் ராபர்ட் கோச் தனது மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோசிஸைக் கண்டுபிடித்ததன் நினைவாகக் கடைப்பிடிக்கிறோம்.
- கருப்பொருள் (2025) : Yes! We Can End TB: Commit, Invest, Deliver
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!