CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (25.03.2025-26.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (25.03.2025-26.03.2025)


உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்-சர்வதேச நிதி நாணயம்

  • இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, ஜப்பானைவிட அதிகரிப்பதாக சர்வதேச நிதி நாணயம் தெரிவித்துள்ளது.
  • உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இருக்கும் இந்தியா, கடந்த பத்தாண்டுகால பொருளாதாரத்தில் 105 சதவிகித வளர்ச்சியடைந்துள்ளதாக சர்வதேச நிதி நாணயம் தரவறிக்கையில் கூறியுள்ளது.
  • நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2015 ஆம் ஆண்டில் 2.1 டிரில்லியன் டாலராக இருந்த நிலையில், தற்போது இருமடங்காக அதிகரித்து 2025-ல் 4.3 டிரில்லியன் டாலர் என்ற நிலையை அடைந்துள்ளது.
  • தற்போது, ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரிதளவிலான மாற்றம் இல்லாததால், 2024-25 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ஜப்பானை விஞ்சி உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் வாய்ப்புகளும் உள்ளன.
  • மேலும், இதே வளர்ச்சியுடன் முன்னேறினால், 2027 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 4.9 டிரில்லியன் டாலர் என்ற மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்
  • கடந்த பத்தாண்டுகளில் இந்தியா 105 சதவிகித வளர்ச்சி அடைந்திருந்தாலும், சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 76 சதவிகிதமாகவும், அமெரிக்கா 66 சதவிகிதமும், ஜெர்மனி 44 சதவிகிதமும், பிரான்ஸ் 38 சதவிகிதமும், இங்கிலாந்து 28 சதவிகிதம் மட்டுமே வளர்ந்தது.


செபக் தக்ரா உலகக் கோப்பை 2025:

  • பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற 2025 செபக்தக்ரா உலகக் கோப்பையில் இந்திய ஆண்கள் ரெகு அணி  தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்தது. இறுதிப் போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கணக்கில் கடுமையாகப் போராடி வீழ்த்தி, மதிப்புமிக்க போட்டியில் முதல் தங்கப் பதக்கத்தை இந்தியா பெற்றது.
  • 2025 செபக்டக்ரா உலகக் கோப்பையில் இந்தியா பல்வேறு பிரிவுகளில் ஏழு பதக்கங்களைப் பெற்றது
  • செபக் தக்ரா உலகக் கோப்பை 2025 போட்டியில் சிறப்பாக  விளையாடிய இந்திய  அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றதற்காக அணிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.


பேரிடர் மேலாண்மை (திருத்த) மசோதா 2024:

  • "பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா- 2024" குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில்  (மார்ச் 25,2025) நிறைவேற்றப்பட்டது.


உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை (2025) நம்பியோ வெளியிட்டுள்ளது: 

  • உலகளவில் குற்றங்களின் நிலை, பாதுகாப்பு பிரச்னைகள், சொத்து மற்றும் வன்முறை குற்றங்கள் முதலானவற்றை மதிப்பிட்டு, பாதுகாப்பான நாடுகள் குறித்த தரவரிசைப் பட்டியலை நம்பியோ ஆய்வறிக்கை வெளிட்டுள்ளது. 
  • நம்பியோ 2025 ஆய்வின்படி, அன்டோரா நாடுதான் உலகளவில் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் பாதுகாப்பு குறியீட்டு மதிப்பெண் 84.7 என்ற அளவில் குறிப்பிட்டுள்ளது. 
  • அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம் 84.5 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், 84.2 மதிப்பெண்களுடன் கத்தார் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றியுள்ளன. 
  • மேலும், 55.7 மதிப்பெண்களுடன் 66 ஆவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது. 
  • அமெரிக்கா 50.8 மதிப்பெண் பெற்று, 89 ஆவது இடத்தில் உள்ளது.


குளிரூட்டிகள் பயன்பாடு-ஆய்வு அறிக்கை:

  • இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
  • மொத்த மக்கள்தொகையைப் பொருத்தவரை, குளிரூட்டிகளின் அதிகப்படியான தேவையில் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், பிலிப்பின்ஸ், அமெரிக்கா இருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • ந்தியாவில் 2035 ஆம் ஆண்டில் வீட்டுப் பயன்பாட்டு குளிரூட்டிகளின் தேவை 130 மில்லியன் முதல் 150 மில்லியன்வரையில் அதிகரிக்கக் கூடும். இதன் மூலம், நாட்டின் உச்சபட்ச மின்தேவையும் 2020 ஆம் ஆண்டில் 120 ஜிகாவாட்டும், 2035-ல் 180 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும். 
  • இது கிட்டத்தட்ட 30 சதவிகித அதிகரிப்பாகும். இந்த வளர்ச்சி, மின் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கலாம். 
  • இந்தியாவில், தற்போது வெப்ப அலை அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், மின் தேவையும் 10 சதவிகிதம்வரையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.


தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது-ஆய்வு அறிக்கை:

  • அலுவலகங்களில் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனம் செய்த ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 
  • அதில், நடுத்தர அளவிலான பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் 2020 - 2024 இடையிலான காலகட்டத்தில் 4.13 சதவிகிததில் இருந்து 8.93 சதவிகிதமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. 
  • தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு 7.8 சதவிகிதமாக இருந்த பெண்களின் பங்கு, 2024-ல் 21.2 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் (26.50%) தகவல் தொழில்நுட்பத் துறையில் பெண்களின் பங்கு குறைந்துள்ளது.
  • சர்வதேச திறன் மையங்களின் பெண்களின் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டு 42.40 சதவிகிதமாக இருந்த நிலையில், 2024 இல் 38.30 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2023 இல் 33.60 சதவிகிதமாக இருந்தது. இந்த ஏற்ற இறக்கத்துக்கு சுழற்சி முறை வேலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதேபோல், வங்கிகள், எரிசக்தி, உற்பத்தி போன்ற தொழில்நுட்பம் இல்லாத பிற துறைகளில் ஆண்களின் ஆதிக்கம் தொடர்வதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு 14 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இருப்பினும், 2020 ஆம் ஆண்டை (1.90%) ஒப்பிடுகையில் நிலையான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.


LIST OF IMPORTANT DAYS IN TAMIL - MARCH 2025:


பிறக்காத குழந்தையின் சர்வதேச தினம் : International Day of the Unborn Child

  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று பிறக்காத குழந்தையின் சர்வதேச தினமாகும்.
  • அதிகாரப்பூர்வமாக, இது முதன்முதலில் 1993 இல் எல் சால்வடாரில் கொண்டாடப்பட்டது, அங்கு மக்கள் பிறப்பதற்கான உரிமையைக் கொண்டாடினர். இந்த நாள் கருக்கலைப்பின் கொடூரத்தால் பிறக்காத குழந்தைகளின் இழந்த வாழ்க்கையை நினைவுகூருகிறது. இது போப் இரண்டாம் ஜான் பால் பதவிக் காலத்தில் நடந்தது.
  • போப் இந்த நாளை "வாழ்க்கைக்கு ஆதரவாக ஒரு நேர்மறையான விருப்பமாக" பார்த்தார்.


வலிப்பு நோய்க்கான ஊதா நாள் : Purple Day for Epilepsy: 

  • சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு நாள் அல்லது ஊதா தினம் மார்ச் 26ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் உலகம் முழுவதும் மூளை வளர்ச்சி பிரச்சனைகள், அதனால் ஏற்படும் வலிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)