CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (27.03.2025-29.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (27.03.2025-29.03.2025)


ஆபரேஷன் பிரம்மா:

  • தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் மோனிவா நகருக்கு அருகே  (மார்ச் 28) காலை 11.50 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அந்த நாட்டின் பல்வேறு நகரங்களில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. 
  • இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடத்தில் அங்கு 2-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டது. 
  • இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. மியான்மரின் சாகாயிங் நகரின் வடமேற்கே 16 கி.மீ தொலைவிலும், 10 கி.மீ ஆழத்திலும் இந்த பூகம்பம் மையம் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து, 4 முறை லேசான அதிர்வுகள் ஏற்பட்டன.
  • மியான்மர், தாய்லாந்தில் பூகம்பத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. 1600-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். 
  • இந்நிலையில் இந்திய அரசு ‘ஆபரேஷன் பிரம்மா’ என்ற பெயரில் மியான்மருக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது. உணவு, கூடாரங்கள், அத்தியாவசிய மருந்துகள் என 15 டன் அளவிலான பொருட்களை இந்திய விமானப் படையின் C130J விமானம் மூலம் மியான்மருக்கு கொண்டு சேர்த்துள்ளது.


தனிமாநில அந்தஸ்து:

  • புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து தொடர்பாக திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் அரசு தீர்மானமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. '
  • தனிமாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை வலியுறுத்தி தனிமாநில அந்தஸ்து பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.


நியமனம்:

  • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின்(தாட்கோ) தலைவராக நா.இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞரால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது.


லெபனான் மற்றும் சிரியா இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தானது:

  • லெபனான் மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே எல்லை வரையறை ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 
  • சௌதி அரேபியா நாட்டில் (மார்ச் 27) இரு நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்குபெற்று மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம் எல்லையில் நிலவி வந்த பதற்றமானது தணிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sourcex India 2025: சோர்ஸ்எக்ஸ் இந்தியா 2025:

  • மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகத்தின் ஆதரவுடன் இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள சோர்ஸ்எக்ஸ் இந்தியா 2025 இன் 3 வது பதிப்பு புதுதில்லியில் உள்ள யஷோபூமி மாநாட்டு மையத்தில் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை மத்திய வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் திரு சந்தோஷ் குமார் சாரங்கி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
  • ஆப்பிரிக்கா, CIS, EU, LAC, NAFTA, NEA, OCEANIA, SA, SEA மற்றும் WANA போன்ற பிராந்தியங்கள் உட்பட 45+ நாடுகளில் 150 க்கும் மேற்பட்ட உலகளாவிய வாங்குபவர்களின் பங்கேற்புடன், Sourcex India 2025 இந்திய ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தைகளுடன் ஈடுபடுவதற்கான முக்கிய தளமாகும். 
  • இந்த நிகழ்வில் உணவு மற்றும் பானங்கள், உடல்நலம் மற்றும் அழகு, FMCG & FMCD, ஆடை மற்றும் ஆடைகள், ஜவுளி & வீட்டு அலங்காரங்கள், இ-காமர்ஸ் சேவைகள் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய நிறுவனங்களின் பங்கேற்பு உள்ளது. 
  • கூடுதலாக, இந்த நிகழ்வு இந்திய அரசின் ஜவுளி அமைச்சகத்தின் மேம்பாட்டு ஆணையர் (கைவினைப்பொருட்கள்) அலுவலகத்தின் ஆதரவுடன் இந்தியா முழுவதிலுமிருந்து தேசிய விருது பெற்ற 10 கைவினைஞர்களின் படைப்புகளை காட்சிப்படுத்துகிறது.


உள்நாட்டு 5ஜி ஆய்வகம்:

  • மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமான டெலிமேடிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்: Centre for Development of Telematics(C-DOT)), குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் உள்நாட்டு 5ஜி ஆய்வகத்தை நிறுவியுள்ளது. 
  • இது ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் 5ஜி அமைப்பில் நடைமுறை நுண்ணறிவுகளைப் பெற உதவுகிறது. 5ஜி தொழில்நுட்பத்தைப் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்ளவும் இந்த மையம் உதவுகிறது. 
  • புதிய 5ஜி பயன்பாட்டு நடைமுறைகளை ஆராயும் போது திறன்களையும் 6ஜி தொழில்நுட்பங்களுக்கான மேம்பட்ட ஆராய்ச்சிக்கான அடித்தளத்தையும் வழங்குகிறது.


செமிகான் இந்தியா திட்டம்:

  • நாட்டில் குறைக்கடத்திகள், மின்னணு தொடுதிரை ஆகியவற்றின் உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக மொத்தம் ரூ.76,000 கோடி செலவில் செமிகான் இந்தியா திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
  • அசாமின் மோரிகானில் ரூ.27,120 கோடி முதலீட்டில் நாளொன்றுக்கு 48 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி திறன் கொண்ட வெளிப்பணி ஒப்படைப்பு குறைக்கடத்தி உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது


நீருக்கடியில் தொல்பொருள் ஆய்வு:

  • துவாரகா மற்றும் பெட் துவாரகா கடற்பகுதியில், நீருக்கடியில் தொல்பொருள் ஆய்வு நடந்து வருகிறது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதைத் தவிர நீரில் மூழ்கிய தொல்பொருள் எச்சங்களைத் தேடுவது, ஆவணப்படுத்துவது ஆகியவை இந்த ஆய்வில் அடங்கும். 
  • ஆய்வின்போது கிடைக்கும் வண்டல் படிவுகள், தொல்பொருள் மற்றும் கடல் படிவுகளை அறிவியல் பகுப்பாய்வு செய்வதன் மூலம் மீட்கப்பட்ட பொருட்களின் பழமையை உறுதிப்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • நீருக்கடியில் தொல்லியல் பிரிவு உட்பட இந்திய தொல்லியல் ஆய்வகத்தின் பல்வேறு கிளைகள் மற்றும் கள அலுவலகங்களுக்கு தொல்பொருள் ஆராய்ச்சி மற்றும் களப்பணிக்காக பிரத்யேக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை மூலம் களப்பணி மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக நடப்பு களப்பணிக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்:

  • தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நடைபெற்ற பயிலரங்கில் மருத்துவ ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய வழிகாட்டுதல்களை (National Guidelines on Medical Oxygen Managementசுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. '
  • தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகத் துறை சார்பில் ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஆக்ஸிஜன் மேலாண்மை குறித்த தேசிய திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டம், புதுதில்லி எய்ம்ஸ் உடன் இணைந்து சுகாதாரத்துறை அமைச்சகத்தின் பேரிடர் பிரிவில் நடைபெறும் ஒரு முன் முயற்சியாகும். இது நாடு முழுவதும் சுமார் 200 முதன்மை பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ ஆக்ஸிஜனை முறையாகக் கையாளுதல், பயன்படுத்துதல், வீணாவதைக் குறைத்தல், மருத்துவ விளைவுகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படும்.


வதேஷ் தர்ஷன் திட்டம் ( இரண்டாம் கட்டம்) :

  • ஸ்வதேஷ் தர்ஷன் முதல் கட்டத் திட்டத்தின் கீழ், கருப்பொருள் அடிப்படையிலான சுற்றுலாத் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்றுலா சுற்றுவழி வட்டமும் பல தலங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றன.
  • சுற்றுலா அமைச்சகம் விரிவான ஆய்வுக்குப் பிறகு நிலையான, பொறுப்பான சுற்றுலாத் தலங்களை உருவாக்கும் நோக்கத்துடன் ஸ்வதேஷ் தர்ஷன் இரண்டாம் கட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் முக்கிய சுற்றுலா செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • சுற்றுலா அமைச்சகம் 2019-ம் ஆண்டில் தேசிய உற்பத்தித்திறன் கவுன்சில் மூலம் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம் தொடர்பான மதிப்பீட்டை மேற்கொண்டது. 'ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்' வாழ்வாதார வாய்ப்புகளுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கவும், உள்ளூர் சமூகங்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் பங்களிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

டிவி 9 உச்சிமாநாடு 2025: TV9 Summit 2025

  • புதுதில்லி பாரத மண்டபத்தில் நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
  • பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பு குறித்து பேசினார். 
  • சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளில் உலகின் 11-வது பெரிய பொருளாதாரமாக இருந்த இந்தியா, கடந்த 7-8 ஆண்டுகளில் 5-வது பெரிய பொருளாதாரமாக உயர்ந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். 
  • மேலும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை "இந்தியா முதலில்" என்ற தாரக மந்திரத்துடன் செயல்படுகிறது என்றும், இந்தியா உலக ஒழுங்கில் பங்கேற்பது மட்டுமின்றி, எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் அவர் கூறினார். 
  • கோவிட்-19 பெருந்தொற்றின் போது இந்தியா தனது சொந்த தடுப்பூசிகளை உருவாக்கியது மற்றும் பல நாடுகளுக்கு மருந்துகளை வழங்கியது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.


மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல்:

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ரூ.22,919 கோடி நிதி உதவியுடன் மின்னணுப் பொருட்கள் வழங்கல் தொடரில் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான மின்னணு சாதனங்கள் உற்பத்தி திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
  • திறன் மேம்பாடு, உலகளாவிய மதிப்புத் தொடருடன் இந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் மூலம் உள்நாட்டு மதிப்புக் கூடுதலை அதிகரித்து, மின்னணு சாதன உற்பத்தி சூழலில் பெருமளவு முதலீடுகளை (உலகளாவிய / உள்நாட்டு) ஈர்க்கும் வகையில், வலுவான உபகரண சூழல் அமைப்பை உருவாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டம் ரூ.59,350 கோடி முதலீட்டை ஈர்ப்பதாக இருக்கும். இதன் மூலம் ரூ.4,56,500 கோடி மதிப்புள்ள பொருட்கள் உற்பத்தி ஆகும். இதன் மூலம் 91,600 பேருக்கு கூடுதலாக நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதுடன், ஏராளமானவர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
  • முதலீட்டு காலத்திற்கும் உற்பத்தி காலத்திற்கும் இடைப்பட்ட ஓராண்டு காலம் உட்பட இந்தத் திட்டத்தின் கால அளவு 6 ஆண்டுகள் ஆகும்.
  • ஊக்கத்தொகையின் ஒவ்வொரு பகுதியும் வழங்கப்படுவது வேலைவாய்ப்பு இழப்புகள் நிறைவேற்றப்படுவதுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  
  • 2014-15 நிதியாண்டில் ரூ.1.90 லட்சம் கோடி மதிப்பிலிருந்த உள்நாட்டு மின்னணு சாதனங்களின் உற்பத்தி 2023-24 நிதியாண்டில் ரூ.9.52 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதே போல் 2014-15 நிதியாண்டில் ரூ.0.38 லட்சம் கோடியாக இருந்த மின்னணு சாதனங்களின் ஏற்றுமதி 2023-24 நிதியாண்டில் ரூ.2.41 லட்சம் கோடியாக அதிகரித்தது. 


கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டி 2025 :

  • புதுதில்லியில் நடைபெற்ற இரண்டாவது கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில், காந்திநகர் இந்திய விளையாட்டு ஆணையத்தின் தேசிய சிறப்பு மையத்தை சேர்ந்த பளுதூக்கும் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 
  • ஜவஹர்லால் நேரு விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஏழு தங்கம் உட்பட 10 பதக்கங்களை அவர்கள் வென்றனர்.
  • ஜந்து குமார் (ஆடவர் 72 கிலோ), ஜஸ்பிரீத் கவுர் (பெண்கள் 45 கிலோ), சீமா ராணி (பெண்கள் 61 கிலோ), மணீஷ் குமார் (ஆடவர் 54 கிலோ) ஆகியோர் தேசிய சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றனர்.


NATIONAL CONFERENCE ON ‘ENVIRONMENT – 2025:

  • சுற்றுச்சூழல் – 2025' குறித்த இரண்டு நாள் தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு புதுதில்லியில் (மார்ச் 29, 2025) தொடங்கி வைத்தார்.
  • நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், சுற்றுச்சூழல் தொடர்பான அனைத்து நாட்களும், அவற்றின் நோக்கங்களையும், திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிக்கின்றன என்று கூறினார்.
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'சுற்றுச்சூழல் – 2025' குறித்த தேசிய மாநாடு, அழுத்தமான சுற்றுச்சூழல் சவால்களைப் பற்றி விவாதிக்கவும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், நிலையான சுற்றுச்சூழல் மேலாண்மைக்கான எதிர்கால செயல் திட்டங்களில் ஒத்துழைக்கவும் முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது


இந்திய ரயில்வேயின் வசம் உள்ள மொத்த நிலம் :

  • 31.03.2024 நிலவரப்படி, இந்திய ரயில்வேயின் வசம் உள்ள மொத்த நிலம் சுமார் 4.90 லட்சம் ஹெக்டேர் ஆகும், இதில் 8812 ஹெக்டேர் நிலம் பல்வேறு நோக்கங்களுக்காக குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. 
  • பயணிகள் வசதிகள், சரக்கு தொடர்பான வசதிகள், வணிக மேம்பாடு போன்றவற்றுக்காக குத்தகைக்கு / உரிமம் பெற்ற ரயில்வே நிலம் இதில் அடங்கும்.
  • தடங்கள், நிலையங்கள், முனையங்கள், பணிமனைகள், உற்பத்தி அலகுகள் போன்றவை இதில் அடங்கும். மேலும், அரசுத் துறைகள், கேந்திரிய வித்யாலயா, பொதுச் சேவை பயன்பாட்டு வழங்குநர்கள், தனியார் துறைகளுக்கு பயணிகள் வசதிகள், சரக்கு தொடர்பான வசதிகள் போன்ற ரயில்வே தொடர்பான நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள கொள்கையின்படி ரயில்வேயின் உரிமையைப் பேணும் குத்தகைக்கு / உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
  • மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய ரயில்வே, தகவல் மற்றும் ஒலிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


இந்திய எரிசக்தி புள்ளியியல் 2025:

  • புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம், ‘’இந்திய எரிசக்தி புள்ளியியல் 2025’’ (Energy Statistics India 2025என்னும் வருடாந்திர தரவுத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த வெளியீடு அமைச்சகத்தின்  www.mospi.gov.in இணையதளத்தில் கிடைக்கிறது.
  • மின் அனுப்புகை மற்றும் மின் பகிர்மானத்தினால் ஏற்படும் இழப்புகள் குறைக்கப்பட்டதன் மூலம் மின்சாரத்தின் பயன்பாடு கடந்த ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு மேம்பட்டுள்ளது. 2014-15 நிதியாண்டில் 23% ஆக இருந்த மின் பகிர்மானம் மற்றும் விநியோகம் தொடர்பான இழப்பு 2023-24 நிதியாண்டில் சுமார் 17% ஆக குறைந்துள்ளது.
  • அனைத்து முக்கிய இறுதி பயன்பாட்டு எரிசக்தி நுகர்வு துறைகளில், தொழில்துறை , 2023-24 நிதியாண்டில் அதிகபட்ச விரிவாக்கத்தைக் கண்டுள்ளது. வணிகம் மற்றும் பொதுப்பணி, குடியிருப்பு, வேளாண்மை மற்றும் வனவியல் போன்ற அனைத்து பிற துறைகளும் இதே காலகட்டத்தில் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.


கடல் வழியாக சரக்குகளை எடுத்து செல்லும் மசோதா 2024 நாடாளுமன்ற மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது:

  • இந்த புதிய சட்டம் காலனித்துவ கால சட்டங்களை அகற்றுவதற்கும், வணிகம் செய்வதற்கு எளிதாக கடல்சார் விதிமுறைகளை எளிமையாக்கும் மத்திய அரசின் பரந்த முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். 
  • 1925-ம் ஆண்டு கடல் மூலம் இந்திய சரக்குகளை எடுத்துச் செல்லும் சட்டத்தை மாற்றியமைக்கும் இந்த மசோதா, இந்தியாவின் கடல்சார் சட்டத்தை சர்வதேச மரபுகளுடன் சீரமைக்கிறது. மேலும், கடல் வழியாக சரக்குகளை எடுத்துச் செல்வதை நிர்வகிக்கும் விதிகளை இந்த மசோதா நவீனமயமாக்க முயல்கிறது.


உப்புத் தண்ணீரில் உடனடியாக கரையும் புதிய பிளாஸ்டிக்:

  • ஜப்பானில் உள்ள எமர்ஜென்ட் மேட்டர் சயின்ஸ் (செம்ஸ்) ஆய்வு மைய விஞ்ஞானிகள் புதிய வகை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளனர். இதை பயன்படுத்தும்போது உறுதியாக இருக்கும். உப்புத் தண்ணீரில் போட்டவுடன் கடைரந்து விடும். தண்ணீரில் கரைந்ததும், அது தீங்கற்ற பொருட்களாக மாறி சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கும்.
  • இது குறித்து இந்த ஆராய்ச்சி குழுவுக்கு தலைமை வகித்த விஞ்ஞானி டகுசோ அய்தா கூறியதாவது: சுற்றுச்சூழல் மாசு பிரச்சினைக்கு தீர்வு காண சுப்ரமாலிகுலர் பிளாஸ்டிக் பாலிமர்களை பயன்படுத்தி புதிய பிளாஸ்டிக்கை உருவாக்கினோம். இரண்டு அயனி மோனோமர்களை இணைப்பதன் மூலம் இந்த பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறது. அவை வலிமை மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)