CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (03.03.2025-04.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (03.03.2025-04.03.2025)

தமிழ் செம்மல் விருது :

  • தமிழ் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்பு வழங்கிய 38 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வழங்கினாா்.
  • மாவட்ட அளவில் தமிழ்த் துறைக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞா்களுக்கு ஆண்டுதோறும் ‘தமிழ்ச் செம்மல் விருது’ வழங்கப்படுகிறது. 
  • அந்த வகையில், 2023-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. 
  • இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட அமைச்சா் மு.பெ.சாமிநாதன் 38 பேருக்கு விருதுகளை வழங்கினாா் (தருமபுரி மாவட்ட விருதாளா் மா.சென்றாயன் பங்கேற்கவில்லை). விருதாளா்களுக்கு தலா ரூ.25,000 காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

  • மாவட்டம் விருது பெற்றவர் பெயர்
    1. அரியலூர் புலவர் க.ஐயன்பெருமாள்
    2. ராணிப்பேட்டை க.பன்னீர் செல்வம்
    3. ராமநாதபுரம் நீ.சு.பெருமாள்
    4. ஈரோடு து.சுப்ரமணியன்
    5. கடலூர் சி.ஆறுமுகம்
    6. கரூர் க.கோபாலகிருஷ்ணன்
    7. கள்ளக்குறிச்சி ச.பிச்சப்பிள்ளை
    8. கன்னியாகுமரி வ.ராயப்பன்
    9. காஞ்சிபுரம் த.ராஜீவ்காந்தி
    10. கிருஷ்ணகிரி அ.திலகவதி
    11. கோவை சு.தர்மன்
    12. சிவகங்கை உ.கருப்பத்தேவன்
    13. செங்கல்பட்டு புலவர் வ.சிவசங்கரன்
    14. சென்னை இரா. பன்னிருகை வடிவேலன்
    15. சேலம் சோ.வைரமணி (எ) கவிஞர் கோனூர் வைரமணி
    16. தஞ்சாவூர் ந.ஜூனியர் சுந்தரேஷ்
    17. தருமபுரி மா.சென்றாயன்
    18. திண்டுக்கல் இர.கிருஷ்ணமூர்த்தி
    19. திருச்சி இராச.இளங்கோவன்
    20. திருநெல்வேலி அ.முருகன்
    21. திருப்பத்தூர் புலவர் நா.வீரப்ப
    22. திருப்பூர் க.ப.கி.செல்வராஜ்
    23. திருவண்ணாமலை ச.உமாதேவி
    24. திருவள்ளூர் சு.ஏழுமலை
    25. திருவாரூர் வி.இராமதாஸ்
    26. தூத்துக்குடி நெய்தல் யூ.அண்டோ
    27. தென்காசி செ.கண்ணன்
    28. தேனி மு.செந்தில்குமார்
    29. நாகப்பட்டினம் கவிஞர் நாகூர் மு.காதர் ஒலி
    30. நாமக்கல் ப.கமலமணி
    31. நீலகிரி புலவர் இர.நாகராஜ்
    32. புதுக்கோட்டை இரா.இராமநாதன்
    33. பெரம்பலூர் மு.சையத்அலி
    34. மதுரை புலவர் இரா.செயபால் சண்முகம்
    35. மயிலாடுதுறை இளங்கோயன் (எ) நன்னிலம் இளங்கோவன்
    36. விருதுநகர் காளியப்பன்
    37. விழுப்புரம் இரா.முருகள்
    38. வேலூர் இரா.சீனிவாசன்


    தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 2025:

    • தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மாா்ச் 14) வெளியிடப்படவுள்ளது. 
    • மத்திய அரசின் நடைமுறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். 
    • ஆனால், தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பில்லை. 
    • கேரளம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. 
    • இந்நிலையில், தமிழகம் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னை மண்டல வானிலை மையத்தின் முதல் பெண் இயக்குநராக அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்:

    • சென்னை வானிலை ஆய்வு மையத்தின், தென் மண்டல தலைவராக இருந்த எஸ்.பாலச்சந்திரன், ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைவராக பி.அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இந்திய வானிலை துறையின் தென் மண்டல பிரிவாக, சென்னை வானிலை ஆய்வு மையம் செயல்படுகிறது. 
    • இங்கு வானிலை அறிக்கைகளை வெளியிட, இயக்குநர் மற்றும் டி.டி.ஜி., எனப்படும் தலைவர் இருப்பர். தினசரி வானிலை அறிக்கைகள், இயக்குநர் வாயிலாக வெளியிடப்படும். 
    • புயல், மழை போன்ற காலங்களில், தென் மண்டல தலைவர், நேரடியாக அறிக்கைகளை வெளியிடுவார். 
    • பொது மக்களுக்கான அறிவிப்புகளை வெளியிடுவதுடன், தமிழக அரசுக்கும், மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும், வானிலை நிலவரத்தை, இந்த மையத்தின் தலைவர் வழங்கி வருகிறார்.


    அறிக்கை: “FROM :BORROWERS TO BUILDERS: WOMEN’S ROLE IN INDIA’S FINANCIAL GROWTH STORY” / கடன் வாங்குபவர்கள் முதல் கட்டுமானப் பணியாளர்கள் வரை: இந்தியாவின் நிதி வளர்ச்சிக் கதையில் பெண்களின் பங்கு:

    • கடன் பெற்றவர்கள் முதல் கட்டுமானதாரர்கள் வரை நாட்டின் நிதிசார் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு குறித்த அறிக்கையை நிதி ஆயோக்  வெளியிட்டுள்ளது. 
    • நிதி ஆயோக் தலைமைச்  செயல் அலுவலர் திரு பி.வி.ஆர்.சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் கடன் பெற விரும்புவதாகவும் தங்களது கிரெடிட் ஸ்கோரை கண்காணிப்பதாகவும் தெரியவந்துள்ளது. 
    • 2024 டிசம்பர்  நிலவரப்படி, 27 மில்லியன் பெண்கள் தங்கள் கடனை கண்காணித்து வந்துள்ளனர். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 42% கூடுதலாகும். டிரான்ஸ்யூனியன் சிபில், நிதி ஆயோக்கின் பெண்கள் தொழில்முனைவோர் தளம்  மற்றும் மைக்ரோசேவ் கன்சல்டிங்  ஆகியவை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன.
    • மொத்த சுய கண்காணிப்பு தளத்தில் பெண்களின் பங்கு, 2023 இல் 17.89% ஆக இருந்து, டிசம்பர் 2024 இல் 19.43% ஆக அதிகரித்துள்ளது என்பதை அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
    • பெருநகரப் பகுதிகள் அல்லாத பகுதிகளில் 48% வளர்ச்சியும், பெருநகரப் பகுதிகளில் 30% வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகியவை அனைத்து சுய கண்காணிப்பு பெண்களில் 49% பங்கைக் கொண்டிருந்தன
    • டிசம்பர் 2024 நிலவரப்படி வணிகக் கடன் வாங்குபவர்களில் பெண்கள் 35% ஆக உள்ளனர்.

    இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத் திறன் மேம்பாட்டுத் திட்டம்:

    • தேசிய மனித உரிமைகள் ஆணையம்,வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள, உலகின் தென் பகுதி நாடுகளின் தேசிய மனித உரிமை நிறுவனங்களுக்கான ஆறு நாள் மனித உரிமைகள் குறித்த இந்தியத் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நிர்வாகத் திறன் மேம்பாட்டுத் திட்டம் புதுதில்லியில் தொடங்கியது. 
    • உலகின் தென் பகுதியின் 14 நாடுகளைச் சேர்ந்த தேசிய மனித உரிமை நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 47 பங்கேற்பாளர்கள் தங்கள் பங்கேற்பை உறுதிப்படுத்தியுள்ளனர். 
    • அவை மடகாஸ்கர், உகாண்டா, சமோவா, திமோர் லெஸ்டே, டிஆர் காங்கோ, டோகோ, மாலி, நைஜீரியா, எகிப்து, தான்சானியா, மொரீஷியஸ், புருண்டி, துர்க்மெனிஸ்தான் மற்றும் கத்தார் நாடுகளாகும்.


    வந்தாரா:

    • குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிரத்யேகமான வனஉயிரின பாதுகாப்பு, மீட்பு, மறுவாழ்வு முன்முயற்சியான வந்தாராவைப் பிரதமர் திரு நரேந்திர மோடி  தொடங்கி வைத்தார். 
    • கருணைமிக்க முயற்சிகளுக்காக திரு அனந்த் அம்பானி மற்றும் அவரது குழுவினரைப் பாராட்டிய பிரதமர், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வனஉயிரின நலனை ஊக்குவிக்கும் அதே வேளையில், விலங்குகளுக்குப் பாதுகாப்பான புகலிடமாக வந்தாரா திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

    கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களுக்கான கூட்டு பிராந்திய அதிகாரப்பூர்வ மொழி மாநாடு:

    • இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழித் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களின் கூட்டு பிராந்திய அலுவல் மொழி மாநாடு மற்றும் விருது வழங்கும் விழா 05.03.2025 குவஹாத்தியில் நடைபெறும். 
    • இந்த மாநாட்டில் அசாம் முதல்வரும் மத்திய உள்துறை இணையமைச்சருமான திரு. நித்யானந்த் ராய் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொள்வார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. திலீப் சைகியா மற்றும் திருமதி. பிஜுலி கலிதா மேதி ஆகியோரும் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள்.
    • கிழக்குப் பகுதியில் மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவை அடங்கும், வடகிழக்கு பகுதியில் அசாம், திரிபுரா, மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை அடங்கும்.
    • நகர அலுவல் மொழி அமலாக்கக் குழுக்கள் (TOLICs) TOLIC ராஜ்பாஷா சம்மான் விருதுடன் கௌரவிக்கப்படும் . தகவல் மேலாண்மை அமைப்பு மூலம் சமர்ப்பிக்கப்பட்ட காலாண்டு முன்னேற்ற அறிக்கைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 48 விருதுகள் விழாவில் வழங்கப்படும்.
    • இந்த நிகழ்வில், துறை சார்ந்த இதழான ராஜ்பாஷா பாரதியின் சிறப்பு இதழ் மற்றும் பாரதிய பாஷா அனுபவுக்கான பன்மொழி மொழிபெயர்ப்பு மென்பொருளான காந்தஸ்தா (3.0) இன் ஆல்பா பதிப்பும் வெளியிடப்படும்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில், முதல் பிராந்திய மாநாடு ஜனவரி 4, 2025 அன்று கர்நாடகாவின் மைசூரில் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து இரண்டாவது மாநாடு பிப்ரவரி 17, 2025 அன்று ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 
    • இந்த பிராந்தியங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள் மற்றும் நகர அலுவல் மொழி அமலாக்கக் குழுக்கள் (TOLICs) முழுவதும் அலுவல் மொழிக் கொள்கையை திறம்பட செயல்படுத்துவதை ஊக்குவிப்பதே இந்த மாநாட்டின் முதன்மை நோக்கமாகும்.


    9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் என்ஜின் :

    • குஜராத் மாநிலத்தின் தகோத் என்ற இடத்தில் உள்ள ரயில் இன்ஜின் தொழிற்சாலையில், 9 ஆயிரம் குதிரை திறன் கொண்ட நவீன மின்சார ரயில் என்ஜின் தயாரிக்கப்படுகிறது. இந்த ரயில் இன்ஜின் 5,000 டன்கள் எடையுள்ள சரக்கு ரயில் பெட்டிகளை 100 கி.மீ.க்கு அதிகமான வேகத்தில் இழுத்துச் செல்லும்
    • இப்பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.அதன்பின் அவர் அளித்த பேட்டியில், ‘‘அடுத்த 30 முதல் 40 நாட்களில் இந்த நவீன 9,000 குதிரை திறன் கொண்ட ரயில் இன்ஜின் அறிமுகம் செய்யப்படும். சரக்கு போக்குவரத்தை விரைவாக மேற்கொள்ள ரயில்வேக்கு சக்திவாய்ந்த ரயில் இன்ஜின் தேவைப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு பிஹாரில் உள்ள மின்சார ரயில் இன்ஜின் தொழிற்சாலையில் 12 ஆயிரம் குதிரை திறன் கொண்ட இரட்டை ரயில் இன்ஜின்கள் தயாரிக்கப்பட்டன. தற்போது ஒரே ரயில் இன்ஜின் 9 ஆயிரம் குதிரை திறனில் தயாரிக்கப்படுகிறது’’ என்றார்

    அமெரிக்​கா​வின் புளு கோஸ்ட் விண்​கலம் வெற்றிகரமாக நிலவில்  தரையிறங்கி உள்ளது:

    • அமெரிக்​கா​வின் பயர்​பிளை ஏரோஸ்​பேஸ் நிறு​வனம், ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனத்​தின் பால்கன் 9 ராக்​கெட் மூலம் ‘புளூ கோஸ்ட்’ என்ற விண்​கலத்தை கடந்த ஜனவரி 15-ம் தேதி நிலவுக்கு அனுப்​பியது.இது சுமார் ஒரு மாதமாக பூமி​யின் சுற்று​வட்​டப்​பாதை​யில் பயணம் செய்​தது.பின்னர் நிலவின் சுற்று​வட்டப்பாதையை அடைந்​தது. 
    • 16 நாட்கள் பயணத்​துக்​குப் பிறகு புளு கோஸ்ட் விண்​கலம் நிலவின் மாரே கிரிசி​யூம் பகுதி​யில் 03.03.2025 அதிகாலை 3.34-க்கு (அமெரிக்க நேரம்) வெற்றிகரமாக தரையிறக்​கப்​பட்​டது.
    • டெக்​சாஸ் மாகாணம் ஆஸ்டின் நகரில் உள்ள இந்த திட்​டத்​தின் கட்டுப்​பாட்டு மைய பொறி​யாளர் இதை உறுதி செய்​துள்ளார். 
    • இதன்​மூலம் இந்த சாதனையை நிகழ்த்திய 2-வது தனியார் திட்டம் என்ற பெருமை கிடைத்​துள்ளது. 
    • ரஷியா, அமெரிக்கா, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிலவில் தரையிறங்கி பரிசோதனை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்று உள்ளன. 
    • இதில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 'பயர்பிளை ஏரோஸ்பேஸ்' நிறுவனம் கடந்த ஜனவரி 15-ந் தேதி விண்கலம் ஒன்றை அனுப்பியது.'புளூ கோஸ்ட்' என்ற இந்த விண்கலம் பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் ராக்கெட் மூலம் நிலவுக்கு செலுத்தப்பட்டது. 
    • நிலவின் சுற்றுப்பாதையை அடைந்த இந்த விண்கலத்தில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து நேற்று நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது. நிலவின் வடகிழக்கு விளிம்பில் உள்ள பழங்கால எரிமலை குவிமாடத்தின் சரிவில் தரையிறங்கியது.
    • நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்கான செலவைக் குறைப்​ப​தற்காக அமெரிக்க விண்​வெளிஆராய்ச்சி மையம் (நாசா) தனியார் நிறு​வனத்​துடன் இணைந்து செயல்பட ​திட்​ட​மிட்​டுள்​ளது. இதன் ஒரு பகு​தியாக இந்த ​விண்​கலம் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்ளது குறிப்​பிடத்​தக்​கது.


    சீனாவில் 10 லட்சம் டன் தோரியம் கண்டுபிடிப்பு:

    • சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணங்களில் ஒன்று உள்மங்கோலியா இங்குள்ள பயூன் ரோபோ பகுதியில் அரியவகை கனிமங்கள் காணப்படுகின்றன. ஏற்கனவே அங்கு மிகப்பெரிய அளவிலான 5 சுரங்கங்கள் செயல்பட்டு வரும் நிலையில் 170க்கும் மேற்பட்ட கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு தோரியம் இருக்கிறதா என்பது குறித்து அந்நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வந்தனர். சமீபத்தில் அது தொடர்பான விரிவான அறிக்கை சீன அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • அதில் அப்பகுதியில் சுமார் 10 லட்சம் தன் தோரியம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது. அணுமின் உற்பத்தியை பொருத்தவரை யூரேனியம், ப்ளூட்டோனியம் ஆகிய தாதுக்களுக்கு அடுத்தபடியாக தோரியம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதே நேரத்தில் அதனை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் போது சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். மேலும் மின்சாரத்தை தயாரிப்பதற்கான செலவும் வெகுவாக குறையும்.


    Japanese Enfilosity என்ற வைரஸால் ஏற்படும் மூளையழற்சி நோயை உலக சுகாதார நிறுவனம் அவசரநிலையாக அறிவித்துள்ளது:

    • ஜப்பானிய மூளைக்காய்ச்சல் ( JE ) என்பது ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வைரஸ் (JEV) காரணமாக ஏற்படும் மூளை தொற்று ஆகும் .பெரும்பாலான நோய்த்தொற்றுகள் சிறிய அல்லது அறிகுறிகளை ஏற்படுத்தாவிட்டாலும், அவ்வப்போது மூளையில் வீக்கம் ஏற்படுகிறது 
    • JEV பொதுவாக கொசுக்களால் , குறிப்பாக குலெக்ஸ் வகை கொசுக்களால் பரவுகிறது .


    தேசிய வனஉயிரின வாரியத்தின் கூட்டம்:

    • குஜராத்தின் ஜூனாகத்தில் தேசிய வனஉயிரின வாரியத்தின் கூட்டம்  நடைபெற்றது. 
    • இதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் வனஉயிரினங்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
    • குறிப்பாக சிங்கம், புலி, சிறுத்தை, சிவிங்கி புலி, யானைகள், டால்பின் உள்ளிட்டவற்றின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.


    உலக வன உயிர் தினம்:

    • ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை தன்னுடைய 68வது அமர்வின்போது ‘உலக வன உயிரின நாளாக’ மார்ச் 3ஆம் தேதியைத் தேர்வுசெய்துள்ளது. 
    • வன விலங்குகள் மட்டும் அல்லாமல் அரிய வகைத் தாவரங்களையும் சேர்த்துப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘வன உயிரினம்’ (wildlife) என்கிறார்கள். (இந்தியாவில் வன உயிரின வார விழா ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.) 
    • இதற்கெனவே 179 சர்வதேச நாடுகளுக்கிடையில் CITES (the Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற ஓர் ஒப்பந்தம் நிலவுகிறது. இதன்படி வன உயிரினம் தொடர்பான வணிகம் நடைபெறும்போது, சம்பந்தப்பட்ட இனம் அழிந்துபோகும் அபாயம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதே நோக்கம் ஆகும்.


    தேசிய பாதுகாப்பு தினம் (National Defence Day) :மார்ச் 3

    • இரண்டாம் உலக யுத்தத்தின்போது கிழக்கு ஆப்பிரிக்காவிடமிருந்து சூடான் நாடு விடுதலை அடைவதற்கு இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் உயிரைத்தியாகம் செய்தனர். 
    • இதற்காக சூடான் அரசு ஒரு லட்சம் பவுன்ஸ் பணத்தை இந்திய கவர்னர் ஜெனரல் லார்டு லின்லித்கொவ் (Lord Linlithgow) என்பவரிடம் வழங்கியது. அப்பணத்தைக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புனே அருகில் கதக்வாஸ்லா (khadakwasla) என்னுமிடத்தில் இந்திய ராணுவ வீரர்களின் தியாகங்களை அங்கீகாரம் செய்யும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது. 
    • மேலும் இவ்விடத்தில் தேசிய பாதுகாப்புக் கல்வி நிறுவனம் உருவாக்கப்பட்டு ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைக்கும் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது. 
    • உயிர்த் தியாகம் செய்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய பாதுகாப்பு தினம் மார்ச் 3, 1972 இல் அறிவிக்கப்பட்டது.


    தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் (National Safety Day) :மார்ச் 4

    • இந்தியாவில் மார்ச் 4ஆம் தேதி தொழிலாளர்கள் பாதுகாப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. 
    • அதன் பின்னர் 1971ஆம் ஆண்டு மார்ச் 4 அன்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் உருவாக்கப்பட்டது. 
    • மும்பையை தலைமையகமாகக்கொண்டு அனைத்து மாநிலத்திலும் இதன் பிரிவுகள் செயல்படுகின்றன. 
    • அரசியல்சாரா தொண்டு நிறுவனமாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயல்படுகிறது. 
    • தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட விழிப்புணர்வு ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம்:ZERO DISCRIMI NATION DAY 2025:

    • ஐ.நா. அவையின் அனைத்து உறுப்பு நாடுகளிலும் அனைவரிடத்தும் சட்டத்தின் முன்னான சமத்துவத்தை மேம்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச பூஜ்ஜிய பாகுபாடு தினம் (Zero discrimination Day) கொண்டாடப் படுகின்றது.
    • சமூக பரிமாற்றத்தின் அடையாளமாக உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள அடையாளமான "வண்ணத்துப்பூச்சி" குறியீடு பூஜ்ஜிய பாகுபாட்டிற்கான சின்னமாக பயன்படுத்தப் படுகின்றது.
    • பாகுபாடுகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய அழைப்பு விடுக்கும் இத்தினமானது, கண்ணியத்தோடு ஓர் முழுமையான ஆக்கப்பூர்வ வாழ்வை வாழ்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமையை கொண்டாடுவதற்காக ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
    • ஐ.நா. அவை 2014 ஆம் ஆண்டு மார்ச் 1 அன்று முதன்முறையாக பூஜ்ஜிய பாகுபாடு தினத்தைக் கொண்டாடியது.
    • ஐ.நா. எய்ட்ஸ் (UN AIDS) அமைப்பு 2013 ஆண்டு டிசம்பர் மாதம் உலக எய்ட்ஸ் தினத்தன்று பூஜ்ஜிய பாகுபாடு பிரச்சாரத்தை (Zero discrimination Campaign) தொடங்கியதிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகின்றது.


    OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



    FOLLOWS ON:

    • Email: tnpscpayilagam@gmail.com

     

    If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


    Post a Comment

    0Comments

    Post a Comment (0)