இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் நோய்:
பிரதமர் நரேந்திர மோடி தனது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில், நாடு ஆரோக்கியமாக மாற உடல் பருமனை சமாளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். "ஒரு ஆய்வின்படி, இன்று எட்டு பேரில் ஒருவர் உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டுகளில் உடல் பருமன் பிரச்னைகள் இரட்டிப்பாகி உள்ளன, ஆனால் இன்னும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உடல் பருமன் பிரச்சினை குழந்தைகளிடையே கூட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது, "என்று அவர் கூறினார்.
- தி லான்செட் ஜர்னல் வெளியிட்டுள்ள புதிய ஆய்வில், 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 440 மில்லியனுக்கும் அதிகமான உடல் பருமன் மற்றும் அதிக எடை கொண்ட மக்கள் இருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.
- இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்தியாவில் அதிக எடை மற்றும் பருமனான பெரியவர்களின் எண்ணிக்கை சீனாவிற்குப் பிறகு உலகின் இரண்டாவது மிக அதிகமாக இருக்கலாம் என்று உலகளாவிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது.
- அமெரிக்கா, பிரேசில் மற்றும் நைஜீரியா முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கண்டுபிடிப்பு, 2050 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 218 மில்லியன் ஆண்களும் 231 மில்லியன் பெண்களும் அதிக எடை மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் காட்டுகிறது. மொத்தமாக 44 கோடிக்கும் அதிகமான மக்கள் உடல் பருமன் நோயால் பாதிக்கப்படுவார்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) ஆராய்ச்சியாளர்களும் உலகளாவிய நோய் சுமை (GBD) ஆய்வு 2021 இன் ஒரு பகுதியாக இருந்ததை வைத்து இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நிலையான வளர்ச்சி இலக்கான குறியீடு:(SDG India Index 2025):
- நிலையான வளர்ச்சி இலக்கான (Sustainable Development Goal 16 Indicators (SDG)) 16 குறியீடுகளில், ஒன்பதில் பின்தங்கியிருக்கும் இந்தியா, உலகளவில், 167 நாடுகளில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது.
- எனினும், (SDG Tamilnadu Index 2025) இந்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் நாட்டின் சராசரியான 71-ஐ விடவும் (80.2 மதிப்பெண்) அதிக புள்ளிகள் பெற்று தமிழ்நாடு, நமது நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் கேரளம் உள்ளது.
- TNPSC EXAM KEY POINTS : SDG India Index 2025 Reports in Tamil
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை :தமிழ்நாடு:
- இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
- அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வெற்றிக் கழகம், அ.ம.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இதில் பங்கேற்றன.
- இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (மார்ச் 05)காலை பத்து மணிக்குத் தொடங்கியது.
ஏவுகணையை தாங்கும் 'கான்கிரீட் பேனல்' ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்:
- சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி மெட்ராஸ்) ஆராய்ச்சியாளர்கள் எறிவிசை ஏவுகணைகளின் அச்சுறுத்தலுக்கு எதிராக நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில் உள்கட்டமைப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
- வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட் (Reinforced concrete – RC) பேனல்களின் எறிவிசை எதிர்ப்பை மேம்படுத்தக் கூடிய புதுமையான தீர்வுகளை வடிவமைப்பாளர்கள் உருவாக்க இக்கட்டமைப்பு உதவிகரமாக இருக்கும்.
- ராணுவப் பதுங்குகுழிகள், அணுசக்திக் கட்டடங்கள், பாலங்கள் தொடங்கி ஓடுபாதைகள் வரை பல்வேறு முக்கிய கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வலுப்படுத்தப்பட்ட கான்கிரீட்டில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கணக்கீடு அடிப்படையிலான உருவகப்படுத்தல்களைப் பயன்படுத்தி ஏவுகணைகளால் ஏற்படும் தாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுசெய்தனர்.
- ஊடுருவுதல், துளையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது ஏற்படும் தாக்கத்தால் கான்கிரீட் கட்டமைப்புகள் அதிகளவில் சேதங்களை எதிர்கொள்கின்றன.
- பதுங்குகுழிகளை வடிவமைப்பதற்கு மட்டுமின்றி அணுசக்திக் கட்டடங்கள், பாலங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு கட்டமைப்பு சுவர்களை வடிவமைப்பதற்கும் இந்த அறிவியல் பயன்படுத்தப்படுகிறது.
உலக மொபைல் மாநாடு, 2025
- ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் நடைபெறும் (05 MAR 2025) உலக மொபைல் மாநாட்டில் (Mobile World Congress (MWC))கலந்து கொண்ட மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா அங்கு தொழில் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்.
- உலக மொபைல் மாநாட்டில் இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்டுள்ள உருமாற்ற முன்னேற்றங்களான அதிவிரைவான 5ஜி மொபைல் சேவைகள், தரவு பயன்பாடுகளுக்கு மிகக் குறைந்த கட்டணங்கள், உள்நாட்டு 4ஜி /5ஜி சேவைகள், வலுவான சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன.
- "Converge. Connect. Create" என்ற கருப்பொருளில் மார்ச் 3–6 வரை பார்சிலோனாவில் MWC 2025 நடைபெறுகிறது. இதில் 101,000+ பங்கேற்பாளர்கள், 2,700+ கண்காட்சியாளர்கள் மற்றும் 200+ நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றிணைந்து 5G, AI, IoT மற்றும் டிஜிட்டல் உருமாற்றத்தில் சமீபத்தியவற்றைக் காட்சிப்படுத்துகிறார்கள். உயர் நிர்வாகிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட 1,200+ பேச்சாளர்களுடன், 5G Inside, AI+, Connect X, Enterprise Re-invented, Game Changers மற்றும் Digital DNA ஆகியவை முக்கிய கருப்பொருள்களாகும். MWC 2025 என்பது மொபைல் கண்டுபிடிப்பு, நெட்வொர்க்கிங் மற்றும் எதிர்கால இணைப்புக்கான உலகின் முன்னணி தளமாகும்.
டிஜிட்டல் பரிவர்த்தனை-உத்தரப் பிரதேசம் முதலிடம்:
- டிஜிட்டல் பரிவர்த்தனையில் நாட்டிலேயே உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிப்பதாக அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2017-18-ஆம் ஆண்டு, இம்மாநிலத்தில் ரூ.122.84 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக தெரிகிறது. அதன் பிறகு, இது, 2024-25-ஆம் ஆண்டில் (டிசம்பர் 2024 வரை) ரூ.1,024.41 கோடியாக உயர்ந்துள்ளது. இணையம் மற்றும் வைஃபை வசதிகள் கிராமங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. விரிவான நிதி விழிப்புணர்வு திட்டம் உபி முழுவதிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய மஞ்சள் வாரியத்தின் செயலராக பவானிஸ்ரீ நியமனம்:
- மஞ்சள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில், தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை தலைமையிடமாக வைத்து தேசிய மஞ்சள் வாரியம் தொடங்கப்பட்டுள்ளது.
- அதன் முதலாவது தலைவராக பல்ல கங்கா ரெட்டி நியமிக்கப்பட்டார்.
- இந்நிலையில், வாரியத்தின் செயலராக, தமிழக பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி பவானி ஸ்ரீயை நியமித்து மத்திய வர்த்தகத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ரஞ்சி கோப்பையை வென்றது விதர்பா அணி:
- நாக்பூரில் நடைபெற்று வந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விதர்பா அணி கோப்பையைக் கைப்பற்றியது.
- நாக்பூரில் ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டம் நடைபெற்று வந்தது. முதல் இன்னிங்ஸில் விதர்பா 379 ரன்களும், கேரள அணி 342 ரன்களும் எடுத்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய விதர்பா அணி 4-ம் நாள் ஆட்டநேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் எடுத்திருந்தது.
- இந்நிலையில் நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தை விளையாடியது விதர்பா அணி. அந்த அணி, 9 விக்கெட் இழப்புக்கு 375 ரன்கள் எடுத்திருந்தபோது கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 37 ரன்கள் முன்னிலை பெற்றிருந்ததால் அந்த அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. 3-வது முறையாக ரஞ்சி கோப்பையை விதர்பா அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. விதர்பாவின் 2-வது இன்னிங்ஸில் கருண் நாயர் 135, டேனிஷ் மாலேவர் 73 ரன்கள் எடுத்தனர். ஆட்டநாயகனாக விதர்பா அணியின் டேனிஷ் மாலேவரும், தொடர்நாயகனாக ஹர்ஷ் துபேவும் தேர்வு செய்யப்பட்டனர்.
சிலி ஓபன் டென்னிஸ்: ரித்விக் ஜோடி சாம்பியன்:
- சான்டியாகோவில் நடைபெற்று வந்த சிலி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரித்விக் சவுத்ரி போலி பள்ளி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன் டோஸ் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
- ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் ரித்விக், நிக்கோலஸ் ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் மேக்ஸிகோ கோன்சாலஸ், ஆந்த்ரஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது.
துபாய் ஏடிபி டென்னிஸ்: யூகி ஜோடிக்கு முதலிடம்:
- துபாயில் நடைபெற்று வந்த ஏடிபி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்பிரின் ஜோடி முதலிடம் பிடித்தது.
- துபாயில் நடைபெற்ற ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டி பாம்ப்ரி, அலெக்ஸி ஜோடி 3-6, 7-6, 10-8 என்ற செட் கணக்கில் ஃபின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா, பிரிட்டனின் ஹென்றி பேட்டன் ஜோடியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.
கேன்ஸ் செஸ் போட்டியில் பட்டம் வென்றார் இனியன்:
- பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் 38-வது ‘கேன்ஸ் ஓபன்’ சர்வதேச செஸ் போட்டி நடைபெற்றது.
- 9 சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டரான ஈரோட்டைச் சேர்ந்த இனியன் கடைசி சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த பிரனேஷை வீழ்த்தி 7.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.
- மற்றாரு இந்திய வீரரான ஆராத்யா கார்க் 7 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்தார். கஜகஸ்தானின் காஸிபெக் நோடெர்பெக் 3-வது இடம் பிடித்தார்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!