CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (07.03.2025-08.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0


CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (07.03.2025-08.03.2025)


இந்தியாவின் புதிய அஸ்ட்ரா MK-III ஏவுகணை, காண்டிவா என மறுபெயரிடப்பட்டது:

  • இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) தனது சமீபத்திய மற்றும் மிகவும் மேம்பட்ட வானிலிருந்து வான் ஏவுகணையான ((Air-to-Air Missile)) அஸ்ட்ரா எம்.கே-III, மகாபாரதத்தில் வரும் அர்ஜுனனின் புகழ்பெற்ற வில்லின் நினைவாக, அதிகாரப்பூர்வமாக காண்டிவா (Gandiva) என மறுபெயரிடப்பட்டுள்ளது.
  • அஸ்ட்ரா ஏவுகணை(Astra MK-III) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) உருவாக்கப்பட்டது.
  • இந்த ஏவுகணை இந்திய விமானப்படையின் சுகோய் Su-30MKI ஜெட் விமானங்களிலும் , இலகுரக போர் விமானமான தேஜாஸிலும் நிலைநிறுத்தப்படும் .
  • இலக்கு 20 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போது இதன் வீச்சு 340 கிலோமீட்டராகவும் , இலக்கு 8 கிலோமீட்டர் குறைந்த உயரத்தில் இருக்கும்போது 190 கிலோமீட்டராகவும் இருக்கும்.
  • இது இரட்டை எரிபொருள் குழாய் ராம்ஜெட் இயந்திரத்தால் இயக்கப்படுகிறது , இது கடல் மட்டத்தில் அல்லது 20 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள IAF ஜெட் விமானத்திலிருந்து ஏவப்பட உதவுகிறது.
  • இந்த ஏவுகணையின் ஏவுதள வேகம் 0.8 முதல் 2.2 மேக் வரை இருக்கும், 2.0 முதல் 3.6 மேக் வேகத்தில் இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டது.

சர்வதேச மகளிர் தினம்/ International Women’s Day 2025:

  • சர்வதேச மகளிர் தினம்,  மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசிய, இன, மொழி, கலாச்சார, பொருளாதார அல்லது அரசியல் எல்லைகளைக் கடந்து பெண்களின்  சாதனைகளை  அங்கீகரிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.  


நாரி சக்தி சே விக்சித் பாரத்-தேசிய மாநாடு:

  • குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு (மார்ச் 8, 2025) புதுதில்லியில் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கு மகளிர் சக்தி ('நாரி சக்தி சே விக்சித் பாரத்') என்ற தலைப்பில் தேசிய மாநாட்டைத் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தது.
  • சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்த நாள் பெண்களின் சாதனைகளை கௌரவிக்கவும், அவர்களின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பாலின சமத்துவத்தை மேம்படுத்த நம்மை அர்ப்பணிக்கவும் இது ஒரு சந்தர்ப்பமாகும் என்று கூறினார்.

பிங்க் ஆட்டோ திட்டம்:

  • மகளிர் தினத்தை ஒட்டி பிங்க் ஆட்டோ திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

புதிய தோழி விடுதிகள் :

  • காஞ்சிபுரம், ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் 72 கோடி ரூபாயில், 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைஃபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அந்த விடுதிகளை அமைக்க இருக்கிறோம்” என்று சென்னையில் நடந்த உலக மகளிர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்,


நிலவின் துருவ பகுதியில் பனிக்கட்டிகள் -சந்திரயான்-3 விண்கல ஆய்வில் தெரியவந்துள்ளது:

  • நிலவின் துருவ பகுதியில் பல இடங்களில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பது இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கல ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • நிலவின் தென் துருவ பகுதியின் மேல்பரப்பில் இருந்து 10 செ.மீ ஆழம் வரை உள்ள பகுதியில் வெப்பநிலையை அளவிட ‘சேஸ்ட்’ (நிலவின் மேற்பரப்பு வெப்பஇயற்பியல் சோதனை) என்ற ஆய்வுக் கருவி விக்ரம் லேண்டரில் பொருத்தப்பட்டிருந்தது. இதில் 10 தனித்துவமான வெப்பநிலை சென்சார்கள் உள்ளன

  • இதன் தரவுகள் குறித்து அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆய்வு மையத்தின் பேராசிரியர் துர்கா பிரசாத் கரனம் கூறியதாவது: நிலவின் துருவ பகுதிக்கு கீழே பல இடங்களில் பனிக்கட்டிகள் இருக்கலாம் என சந்திரயான்-3 விண்கல ஆய்வுகளின் தரவுகள் தெரிவிக்கின்றன. நிலவில் ஏற்படும் குறிப்பிடத்தக்க வெப்பநிலை மாறுபாடு காரணமாக ஏற்படும் பனிக்கட்டிகள் உருவாகலாம். இந்த பனிக்கட்டிகளை ஆய்வு செய்யும்போது, இதன் தோற்றம் மற்றும் வளர்ச்சி பற்றிய தகவல்களை அறிய முடியும்.


ஹானரரி ஆர்டர் ஆப் பிரீடம் உயரிய விருது:

  • மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான பார்படாஸ் நாட்டு பிரதமர் அமோர் மோடலி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஹானரரி ஆர்டர் ஆப் பிரீடம் ஆப் பார்படாஸ் (Honorary Order of Freedom of Barbados) என்ற உயரிய விருதை வழங்கினார். 
  • பிரதமர் மோடிக்கு பதிலாக இந்த விருதை இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணை மந்திரி பபித்ரா மர்ஹெரிட்டா பெற்றுக் கொண்டார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா காலத்தின்போது அவரது தலைமைத்துவத்திற்காகவும், மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

கலைஞர் எழுதுகோல் விருது 2023:

  • 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.
  • இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்று 2021-22 ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.


சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை ஆராய்ச்சி மையம்:

  • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஈட்டன் குழுமத்தின் துணை நிறுவனமான, ஈட்டன் எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 200 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சென்னை சோழிங்கநல்லூரில் உயர்தர மின் மேலாண்மை கருவிகள் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான மையம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். 
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுமுறைப் பயணமாக, 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்த நிறுவனத்தால், சென்னையில் உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவிய பயன்பாடு மற்றும் பொறியியல் மையம் அமைத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • அதன் பிறகு ஆறே மாதங்களில், இத்திட்டம் அமைப்பதற்கு முதலமைச்சரால் இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 1 லட்சம் சதுர அடி பரப்பளவுடன், மேம்பட்ட உற்பத்தித் தளங்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான வசதிகளுடன் இம்மையம் அமைக்கப்பட உள்ளது.


தமிழக அரசின் 2 சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்:

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில், தமிழகத்தில் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு நிலவரி விதிப்பது தொடர்பான சட்ட மசோதா கடந்த டிசம்பர் 2024 மாதம் நிறைவேற்றப்பட்டது. 
  • இந்த சட்டம், பழுப்புக்கரி, சுண்ணாம்புக்கல், சுண்ணாம்புக்களி, மாக்ன சைட், காரீயம் உள்ளிட்ட 13 வகை கனிமங்களை பெரிய வகை கனிமங்களாகவும், கரட்டுக்கல், சரளை அல்லது மண், வண்ண மற்றும் கருப்பு கருங்கல், கூழாங்கற்கள், மணல், படிகக்கல், தீக்களிமண், உருட்டு களிமண், களிமண், ஆற்று மணல், நொறுங்கிய கல், சுண்ணப்பாறை உள்ளிட்ட 17 கனிமங்கள் சிறிய வகை கனிமங்களுக்கு நிலவரி விதிக்க வழி வகை செய்கிறது. 
  • இதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டது. 
  • இந்நிலையில், இந்த சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதைத்தவிர்த்து, தமிழகத்தில் பதவிகாலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த இரண்டு சட்ட மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.


'சர்பஞ்ச் பதி' கலாச்சாரத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில்வெப் தொடர்களை தயாரிக்க டிவிஎஃப் நிறுவனத்திற்கு பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் ஒப்புதல் :

  • அடிமட்ட நிர்வாக அமைப்பில் பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, உள்ளூர் கிராமப்புற நிர்வாகத்தில் முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதை எடுத்துரைக்கும் வெப் தொடர்களை தயாரிக்க டிவிஎஃப் நிறுவனத்திற்கு பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த நிறுவனத் தயாரிப்புகளில் முதல் வெப் தொடர் அஸ்லி பிரதான் கவுன்?" மார்ச் 4-ம் தேதி  புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் திரையிடப்பட்டது. 
  • ஒரு பெண் பஞ்சாயத்து தலைவர் பொது நலனுக்காக தனது அதிகாரங்களை எவ்வளவு திறம்பட பயன்படுத்துகிறார் என்பதை 'அஸ்லி பிரதான் கவுன்?' படம் விளக்குகிறது. மேலும் பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண் பிரதிநிதித்துவம் என்ற அரசியலமைப்பு ஆணையை குறைக்கும் வகையில்,  தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களின் பணியில் ஆண் குடும்ப உறுப்பினர்கள் தலையிடும் 'சர்பஞ்ச் பதி' கலாச்சாரத்தின் பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் இந்தத் தொடர் அமைந்துள்ளது.  
  • நடிகர்கள் துர்கேஷ் குமார் மற்றும் புல்லு குமார் ஆகியோர் நடிக்கும் மேலும் இரண்டு வெப் தொடர்களை வெளியிட பஞ்சாயத்ராஜ் அமைச்சகம் தீர்மானித்துள்ளது. இது கிராமப்புற நிர்வாகத்தில் அடிமட்ட அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி மாற்றத்தை உருவாக்கும் அமைச்சகத்தின் பணியை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)