சாம்பியன்ஸ் டிராபியை(2025) வென்ற இந்திய அணி:
- சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி 7வது ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் 7வது சர்வதேச கோப்பையை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.19.50 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த நியூஸிலாந்து அணி ரூ.9.72 கோடியை பரிசாக பெற்றது.
- 76 ரன்கள் விளாசிய ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதேபோல் அதிக ரன்களை விளாசிய நியூசிலாந்து நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு தொடர் நாயகன் விருது அளிக்கப்பட்டது.
நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை:
- மத்திய பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்காவை, நாட்டின் 58-ஆவது புலிகள் காப்பகமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் சனிக்கிழமை அறிவித்தாா்.
- மத்திய பிரதேசத்தில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாதவ் புலிகள் காப்பகத்துடன், நாட்டில் புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கை 58-ஆக உயா்ந்துள்ளது. இது பெருமைக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
கஞ்சர்-XII பயிற்சி 2025:INDIA- KYRGYZSTAN JOINT SPECIAL FORCES EXERCISE KHANJAR-XII:
- இந்தியா-கிர்கிஸ்தான் கூட்டு சிறப்புப் படைப் பயிற்சியின் 12வது பதிப்பு KHANJAR-XII கிர்கிஸ்தானில் மார்ச் 10 முதல் 23 மார்ச் 2025 வரை நடைபெற உள்ளது.
- TNPSC EXAM KEY POINTS : கஞ்சர்-XII பயிற்சி 2025
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்:
- கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
- இதனைத் தொடர்ந்து லிபரல் கட்சியின் அடுத்த தலைவராகவும்,கனடாவின் 24-வது பிரதமராகவும் மார்க் கார்னி தேர்தெடுக்கப்பட்டுள்ளார். லிபரல் கட்சித் தலைவரான சச்சித் மெஹ்ரா, லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கான போட்டியில் முன்னாள் மத்திய வங்கித் தலைவரான மார்க் கார்னியின் வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
- லிபரல் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்குப் பிறகு புதிய பிரதமராகவும், அக்கட்சியின் தலைவராகவும் மார்க் பதவியேற்கவிருக்கிறார்.
உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள்:
- இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கிய விண்வெளியை கண்காணிக்கும் உலகின் முதல் வர்த்தக செயற்கைகோள் ‘ஸ்காட்-1’ தென் அமெரிக்காவை படம் பிடித்து அனுப்பி தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது.
- பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ‘திகந்தரா’. இந்நிறுவனம் வர்த்தக பயன்பாட்டுக்காக ‘ஸ்காட்-1’ என்ற பெயரில் கண்காணிப்பு செயற்கை கோளை உருவாக்கியது. இதில் உள்ள கேமிரா விண்வெளியில் பூமியை சுற்றுக்கொண்டிருக்கும் பொருட்களை கண்காணிக்கும் திறன் கொண்டது.
- இந்த ஸ்காட் செயற்கைகோள், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிரான்ஸ்போர்ட்டர்-12 ராக்கெட் மூலம் கடந்த ஜனவரி மாதம் 14 தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. புவியின் கீழடுக்கு சுற்றுவட்டபாதையை கண்காணிக்கும் வகையில், இந்த செயற்கை சூரிய சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!