1.சீனாவில் தயாரிக்கப்படும் ‘வேக்வம் ஃபிளாஸ்க்’ (வெந்நீா் குடுவை), அலுமினியம் ஃபாயில் காகிதம், மின்சாதனங்களில் பயன்படுத்தப்படும் சில வகை காந்தங்கள், டிரைகுளோரோ ஐசோசைனூரிக் அமிலம் ஆகிவற்றுக்கு மத்திய அரசு --------------- வரி விதித்துள்ளது ?
A) பொருள் குவிப்பு தடுப்பு வரி
B) கலால் தடுப்பு வரி
C) சமூக நல கூடுதல் வரி
D) ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி
ANS: A) பொருள் குவிப்பு தடுப்பு வரி
2. பொதுத்துறை வங்கிகள் முதலீட்டாளா்களுக்கு வழங்கும் பங்கு ஈவுத் தொகை 2023-24 நிதியாண்டில் --------- சதவீதம் அதிகரித்துள்ளது?
A) 20 சதவீதம்
B) 30 சதவீதம்
C) 33 சதவீதம்
D) 50 சதவீதம்
ANS: C) 33 சதவீதம்
3.மாணவர்கள் தற்கொலையைத் தடுக்க யார் தலைமையில் 9 பேர் அடங்கிய தேசிய அளவிலான செயற்குழு அமைக்கப்பட்டுள்ளது?
A) முன்னாள் நீதிபதி ரபுல்லா கிஷோர் மொஹந்த
B) முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட்
C) முன்னாள் நீதிபதி பி. கிருஷ்ணசுவாமி
D) முன்னாள் நீதிபதி நரேந்திர குமார் ஜெயின்
ANS: B) முன்னாள் நீதிபதி எஸ். ரவீந்திர பட்
4.வினோத் குமாா் சுக்லா (88), 59-ஆவது ஞானபீட விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளாா்,இவர் பிரபல ?
A) ஹிந்தி பாடகர்
B) குஜராத்தி கவிஞர்
C) மராத்தி எழுத்தாளா்
D) ஹிந்தி எழுத்தாளா்
ANS: D) ஹிந்தி எழுத்தாளா்
5.விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில் வெங்காயத்தின் மீதான ----- சதவீத ------------- வரியை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.(ரத்து அறிவிப்பு வரும் ஏப்ரல் 1-ந் தேதி/2025 முதல் அமலுக்கு வரும்)?
A) 20 சதவீத ஏற்றுமதி வரி
B) 20 சதவீத இறக்குமதி வரி
C) 25 சதவீத இறக்குமதி வரி
D) 25 சதவீத ஏற்றுமதி வரி
ANS: A) 20 சதவீத ஏற்றுமதி வரி
6.மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023-ம் ஆண்டு மே 3-ம் தேதி மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பழங்குடியினத்தவர் இடையே மோதல் ஏற்பட்டது.கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக யார் தலைமையிலானஉச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது?
A) நீதிபதி சூர்ய காந்த்
B) நீதிபதி விக்ரம் நாத்
C) நீதிபதி பி.ஆர்.கவாய்
D) நீதிபதி என்.கோட்டீஸ்வர்
ANS: C) நீதிபதி பி.ஆர்.கவாய்
7.சமீபத்தில் கிருஷ்ணா லால் சத்தா-உடல்நலக் குறைவால் உயிரிழந்தார் .இவர்?
1) தோட்டக்கலை விஞ்ஞானி
2) 2012-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்
3) பாகிஸ்தானில் பிறந்தவா்
4) வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் பேராசிரியா்
A) 1 மற்றும் 2 சரி
B) 1 மற்றும் 4 சரி
C) 1 ,2 4 சரி , 3 மட்டும் தவறு
D) அனைத்தும் சரி
ANS: D) அனைத்தும் சரி
8.உலக வானிலை நாள் ?
A) மார்ச் 20
B) மார்ச் 25
C) மார்ச் 24
D) மார்ச் 23
ANS: D) மார்ச் 23
9.உலக காசநோய் தினம் 2025 -கருப்பொருள் ?
A) Yes! We can end TB : Commit, Invest
B) Yes! We Can End TB: Commit, Invest, Deliver
C) Yes! We Can End TB: Commit, Treatement,Deliver
D) Yes! We can end TB : Commit, Treatement
ANS: B) Yes! We Can End TB: Commit, Invest, Deliver
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!