சர்வதேச மகளிர் தினம்/ International Women’s Day 2025

TNPSC PAYILAGAM
By -
0

International Women’s Day 2025


சர்வதேச மகளிர் தினம்,  மார்ச் 8-ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தேசிய, இன, மொழி, கலாச்சார, பொருளாதார அல்லது அரசியல் எல்லைகளைக் கடந்து பெண்களின்  சாதனைகளை  அங்கீகரிக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.  


சர்வதேச மகளிர்தினத்தின் 2025 கருப்பொருள் :

  • 2025-ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தின்  கருப்பொருள்  "அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு: உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல்” (“For ALL Women and Girls: Rights. Equality. Empowerment.” )என்பதாகும்.  
  • அனைவருக்கும் சம உரிமைகள், அதிகாரம் மற்றும் வாய்ப்புகளை அளிக்கவும் யாரும் விடுபடாத வகையில் அனைவரையும் உள்ளடக்கிய எதிர்காலத்தையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆண்டின் கருப்பொருள் அழைப்பு விடுக்கிறது. இந்தத் தொலைநோக்குப் பார்வையானது அடுத்த தலைமுறையை - இளைஞர்களை, குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் வளரிளம் பெண்களை - நீடித்த மாற்றத்திற்கான கிரியா ஊக்கிகளாக மேம்படுத்தும்.
  • மேலும், 2025-ம் ஆண்டு, பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல்பாட்டு தளத்தின்  30-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு முக்கிய தருணமாகும். இந்த ஆவணம் உலகளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளுக்கான மிகவும் முற்போக்கான மற்றும் பரவலாக அங்கீகரிக்கப்பட்ட  செயல்திட்டமாகும்.


பெண்களுக்கு அதிகாரமளித்தல்:

  • இந்தியாவில், பல்வேறு கொள்கைகள், திட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள்  மூலம்  பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பாலின சமத்துவத்தை நோக்கி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 
  • தேசிய முன்னேற்றத்தில் சமமான பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் பெண்களின் வளர்ச்சி என்ற நிலையிலிருந்து பெண்கள் தலைமையில் முன்னெடுக்கும் வளர்ச்சி என்ற நிலைக்கு  நாடு மாறி வருகிறது. 
  • கல்வி, சுகாதாரம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் தலைமைப் பொறுப்புகளில் உள்ள தடைகளை உடைத்து, இந்தியாவின் சமூக-பொருளாதார நிலப்பரப்பை வடிவமைப்பதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
  • 2025 மார்ச் 3-ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச மகளிர் தினத்திற்கு முன்னதாக  நமோ செயலி திறந்தநிலை மன்றத்தில் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் தங்கள்  எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களைப்  பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தார். 
  • ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க பதிவுகளைப் பாராட்டிய அவர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்களின்  மீள்திறன்  மற்றும்  சாதனைகளை  எடுத்துரைத்தார். 
  • ஒரு சிறப்பு முயற்சியாக,  தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள்  தங்கள்  குரல்களையும்  அனுபவங்களையும்  விரிவுபடுத்த மார்ச் 8-ம் தேதி தனது சமூக ஊடக கணக்குகளை  எடுத்துக் கொள்வார்கள் என்று  பிரதமர் அறிவித்து உள்ளார். 
  • இந்த முயற்சி பெண்களின் பங்களிப்புகளைக் கொண்டாடுவதையும், அவர்களின் அதிகாரமளித்தல், விடாமுயற்சி மற்றும் வெற்றிக்கான பயணத்தைக் காண்பிப்பதன் மூலம் மற்றவர்களை ஊக்குவிப்பதையும்  நோக்கமாகக் கொண்டுள்ளது.


அரசியலமைப்பு மற்றும் சட்ட கட்டமைப்பு:

  • இந்திய அரசியலமைப்பு அதன் முகப்புரை, அடிப்படை உரிமைகள்  மற்றும்  மாநிலக் கொள்கையின் வழிகாட்டும் கோட்பாடுகள்  ஆகியவற்றில் உள்ள விதிகளின் மூலம்,  பாலின சமத்துவத்திற்கு  உத்தரவாதம் அளிக்கிறது.  அ
  • ரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 14,  சட்டத்தின் முன் சமத்துவத்தை உறுதி செய்கிறது. 
  • அதே நேரத்தில் பிரிவு 15,  பாலின அடிப்படையிலான பாகுபாட்டை தடைசெய்கிறது.  
  • பிரிவு 51 (a) (e)  பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் நடைமுறைகளைக் கைவிடுமாறு மக்களை ஊக்குவிக்கிறது. 

  • மாநில அரசுக்கான நெறிமுறைக் கோட்பாடுகள், குறிப்பாக பிரிவுகள் 39  மற்றும்  42, சமமான வாழ்வாதார வாய்ப்புகள், சம ஊதியம் மற்றும் மகப்பேறு நிவாரணம் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன.
  • மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனம் (1948)
  • அனைத்துலக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (1966)
  • பெண்களுக்கெதிரான அனைத்து வடிவங்களிலான பாகுபாடுகளையும் ஒழிக்கும் உடன்படிக்கை (1979)
  • பெய்ஜிங் பிரகடனம் மற்றும் நடவடிக்கைக்கான தளம் (1995)
  • ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை (2003)
  • நிலையான வளர்ச்சிக்கான செயல் திட்டம் 2030, போன்ற சர்வதேச ஒப்பந்தங்களில்  இந்தியா கையெழுத்திட்டுள்ளது.


பெண்கள் முன்னேற்றத்திற்கான அரசு திட்டங்கள்


1. கல்வி:

பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் பொருளாதார சுதந்திரத்திற்கான திறவுகோல் கல்வியாகும். ஆரம்பக் கல்வி முதல் உயர் கல்வி வரை தரமான கல்வியைப் பெற பெண்களுக்கு சமமான அணுகலை உறுதி செய்ய இந்தியா பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கல்வியில் பாலின சமத்துவம் கணிசமாக மேம்பட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் மாணவிகளின் சேர்க்கை மாணவர்களைவிட அதிகமாக உள்ளது.

  • இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 , அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக்கல்வி எளிதில் கிடைப்பதை உறுதி செய்கிறது.
  • பெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்: குழந்தை பாலின விகிதத்தை மேம்படுத்துதல் மற்றும் பெண் கல்வியை ஊக்குவித்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது.
  • ஒருங்கிணைந்த கல்வி இயக்கம்: பள்ளி உள்கட்டமைப்பு மற்றும் பெண்களுக்கான வசதிகளை ஆதரிக்கிறது.
  • தேசிய கல்விக் கொள்கை 2020,  பாலின சமத்துவம் மற்றும் கல்வியில் உள்ளடக்கலுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
  • ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளிகள்: பழங்குடியின மாணவிகளுக்கு தரமான கல்வியை ஊக்குவிக்கிறது.
  • பெண்களின் மொத்த சேர்க்கை விகிதம்  2017-18 முதல் ஆண்களின் மொத்த சேர்க்கை விகிதத்தை விட அதிகரித்துள்ளது.
  • உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கை: 2.07 கோடி (2021-22), இது மொத்த எண்ணிக்கையான 4.33 கோடியில் கிட்டத்தட்ட 50% ஆகும்
  • 2014-15-ம் ஆண்டில், 100 ஆண்களுக்கு 63 ஆக இருந்த பெண் ஆசிரியர் விகிதமும்,  2021-22-ம் ஆண்டில் 77 ஆக உயர்ந்துள்ளது.
  • STEM (அறிவியல், தொழில்நுட்பம். பொறியியல், கணிதம்) படிப்பில் பெண்கள்: மொத்த ஸ்டெம் சேர்க்கையில் 42.57% (41.9 லட்சம்).
  • விஞ்ஞான் ஜோதி (2020) பின்தங்கிய பகுதிகளில் உள்ள சிறுமிகளுக்கு ஸ்டெம் கல்வியை ஊக்குவிக்கிறது.
  • உலகளாவிய ஆராய்ச்சி வாய்ப்புகளில் பெண் விஞ்ஞானிகளுக்கு ஆதரவளிக்கிறது.
  • தேசிய டிஜிட்டல் நூலகம், ஸ்வயம் மற்றும் ஸ்வயம் பிரபா ஆகியவை ஆன்லைன் கற்றலுக்கான அணுகலை உறுதி செய்கின்றன.
  • ஸ்டெம் துறைகளில் பல்வேறு உதவித்தொகைகளின் கீழ் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் பயனடைந்துள்ளனர்.
  • திறன் இந்தியா இயக்கம், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம், மகளிர் தொழிற்பயிற்சி நிறுவனங்கள்,  பெண்களுக்கு தொழில் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குகின்றன.
  • மகளிர் தொழில்நுட்ப பூங்காக்கள், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான மையங்களாகச் செயல்படுகின்றன.


2. உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து

பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் பாலின அடிப்படையிலான சுகாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் முக்கியமானதாகும் .சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் உள்ள பெண்களுக்கு தாய் மற்றும் சேய் ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ ஆதரவை உறுதி செய்வதற்காக அரசு பல கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • பிரமரின் கர்ப்பிணி பெண்கள் நிதியுதவி திட்டம்:  கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பண ஊக்கத்தொகையை வழங்குகிறது, ஜனவரி 2025 நிலவரப்படி 3.81 கோடி பெண்களுக்கு ரூ .17,362 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • பேறுகால இறப்பு விகிதம் (எம்.எம்.ஆர்)  ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 130 (2014-16) லிருந்து 97 (2018-20) ஆகக் குறைந்துள்ளது.
  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் 43 (2015) இலிருந்து 32 (2020) ஆக குறைந்துள்ளது.
  • பெண்களின் ஆயுட்காலம்  71.4 ஆண்டுகளாக (2016-20) அதிகரித்துள்ளது, இது 2031-36-க்குள் 74.7 ஆண்டுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஜல் ஜீவன் இயக்கம்:  15.4 கோடி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பை வழங்கியுள்ளதானது சுகாதார அபாயங்களைக் குறைத்துள்ளது.
  • தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் 11.8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு, சுகாதாரம் மேம்பட்டுள்ளது.
  • ஊட்டச்சத்து இயக்கம்: தாய் சேய் ஊட்டச்சத்து திட்டங்களை வலுப்படுத்துகிறது
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10.3 கோடி  சமையல் எரிவாயு இணைப்புகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.


3. பொருளாதார அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம்:

தொழிலாளர் தொகுப்பில் பெண்களின் பங்களிப்பு பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு முக்கிய உந்துதலாகும். நிதி சுதந்திரம், தொழில்முனைவோர் மற்றும் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை மேம்படுத்த அரசு பல முயற்சிகளைத் தொடங்கியுள்ளது.

  • முக்கிய குடும்ப முடிவுகளில் பெண்களின் பங்கேற்பு: 84% (2015)-லிருந்து 88.7% (2020) ஆக அதிகரித்துள்ளது.
  • பிரதமரின் ஜன் தன் திட்டம்: 30.46 கோடிக்கும் அதிகமான கணக்குகள் (55% பெண்களுடையது) திறக்கப்பட்டுள்ளன.
  • ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டம்: ரூ .10 லட்சம் முதல் ரூ .1 கோடி வரையிலான கடன்களில் 84% பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • முத்ரா திட்டம்:  பெண்கள் தலைமையிலான நிறுவனங்களுக்கு 69% நுண்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • என்.ஆர்.எல்.எம்-ன் கீழ் சுய உதவிக் குழுக்கள்: 10 கோடி (100 மில்லியன்) பெண்கள் 9 மில்லியன் சுய உதவிக் குழுக்களுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.
  • வங்கி சிநேகிதி: 6,094 பெண் வங்கி சிநேகிதிகள் 2020-ல் 40 மில்லியன் டாலர் மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செயல்படுத்தினர்.
  • ஆயுதப்படையில் பெண்கள்:  போர்ப் படைகளில் பங்கேற்பு மற்றும் சைனிக் பள்ளிகளில் நுழைவு.
  • சிவில் விமானப் போக்குவரத்து: இந்தியாவில் 15%-க்கும் மேற்பட்ட பெண் விமானிகள் உள்ளனர். இது உலகளாவிய சராசரியான 5% ஐ விட அதிகமாகும்.
  • பணிபுரியும் மகளிர் விடுதிகள்: 26,306 பெண்கள் பயனடையும் வகையில் 523 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
  • புத்தொழில் நிறுவனங்களில் பெண் தொழில்முனைவோர்: இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் 10% நிதி பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது


4. டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப அதிகாரமளித்தல்

டிஜிட்டல் சகாப்தத்தில், தொழில்நுட்பத்திற்கான அணுகல் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவு ஆகியவை பெண்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கியமானவையாகும். பல்வேறு முயற்சிகள் மூலம் டிஜிட்டல் புரட்சியின் ஒரு பகுதியாக பெண்கள் இருப்பதை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

  • பிரதமரின் டிஜிட்டல் கல்வி இயக்கம்: 60 மில்லியன் கிராமப்புற குடிமக்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
  • பொது சேவை மையங்கள்: 67,000 பெண் தொழில்முனைவோர் டிஜிட்டல் சேவை மையங்களை நடத்தி வருகின்றனர்.
  • ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம்: டிஜிட்டல் தீர்வுகள் மூலம் சுகாதார அணுகலை இணைப்பது.
  • மகளிர் அதிகாரமளித்தலுக்கான சங்கல்ப் மையங்கள்: 35 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் 742 மாவட்டங்களில்  செயல்பட்டு வருகிறது
  • டிஜிட்டல் வங்கி மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட சேவைகள் பெண்களுக்கு நிதி பாதுகாப்பை உறுதி செய்கின்றன.
  • அரசு இ-சந்தைகள் பெண் தொழில்முனைவோர் மற்றும் ஆன்லைன் வணிகங்களை ஊக்குவிக்கின்றன.


5. பாதுகாப்பு:

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமையாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், சட்ட மற்றும் நிறுவன ஆதரவை வழங்கவும் பல சட்ட நடவடிக்கைகள், அர்ப்பணிக்கப்பட்ட நிதி மற்றும் விரைவு நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன.

  • குற்றவியல் சட்டம் (திருத்தம்) சட்டம், 2018: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரித்தல்.
  • குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005
  • பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம், 2013.
  • போக்சோ சட்டம், 2012:  சிறார்களை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவதற்கு எதிரான சட்டங்களை பலப்படுத்தல்.
  • முத்தலாக் தடை (2019): உடனடி விவாகரத்து நடைமுறைகளை குற்றமாக்குதல்.
  • வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961: வரதட்சணை தொடர்பான குற்றங்களுக்கு அபராதம் விதிக்கிறது.
  • குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006: கட்டாய திருமணங்களிலிருந்து சிறார்களைப் பாதுகாக்கிறது.

விரிவான கொள்கைகள், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் சட்ட கட்டமைப்புகள் மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. பொருளாதார பங்களிப்பு முதல் பாதுகாப்பு வரை, டிஜிட்டல் உள்ளடக்கம் முதல் கல்வி வரை, அரசின் முன்முயற்சிகள் பெண்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. இந்த சர்வதேச மகளிர் தினத்தில், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு உள்ளடக்கிய, பாலின சமத்துவ சமூகத்தை உருவாக்குவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவது முக்கியம். கொள்கை வகுப்பு, சமூக ஈடுபாடு, டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றில் நீடித்த முயற்சிகள் வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக் கதையை பெண்கள் தொடர்ந்து இயக்குவதை உறுதி செய்யும்.


SOURCE : PIB 



Post a Comment

0Comments

Post a Comment (0)