அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
குறில், நெடில் வேறுபாடு-KURIL NEDIL VERUPADU-ONLINE MODEL TEST 01
1.குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
(A) உயிர் எழுத்துகள்
(B) முதல் மூன்று
(C) பத்து பார்வை
(D) எட்டு ஏணி
ANS : (A) உயிர் எழுத்துகள்
2.குறில் நெடில் மாற்றத்தில் தவறான இணையைக் கண்டறிக.
(A) இரை, ஈகை
(B) படம், பார்த்தல்
(C) உடல், ஊண்
(D) சிறகு, வளர்த்தல்
ANS : (D) சிறகு, வளர்த்தல்
3.குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக-கனகம் கானகம்
(A) செல்வம் - அரசன்
(B) காடு தொடுதல்
(C) பொன் - காடு
(D) நங்கை - தங்கை
ANS : (C) பொன் - காடு
4.குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக- தொடு-தோடு
(A) இயற்கை - செயற்கை
(B) வெகுளி - கோபம்
(C) கேண்மை - நட்பு
(D) தொடுதல் - அணிகலன்
ANS : (D) தொடுதல் - அணிகலன்
5.குறில் நெடில் மாற்றம் அறிந்து பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக. சிலை - சீலை
(A) ஓவியம் - வண்ணம்
(B) இறைவன் திருவுருவம் -துணி
(C) மணல்- குன்று
(D) மறை -வேதம்
ANS : (B) இறைவன் திருவுருவம் -துணி
6.குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. 'கொடு - கோடு'
(A) செய்தல் - வட்டம்
(B) தருதல் -நேராக வரைதல்
(C) விருப்பம் - வளைவு
(D) உயரம் -குழந்தை
ANS : (B) தருதல் -நேராக வரைதல்
7.குறில் நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக. தரம் -தாரம்
(A) தகுதி - மிகுதி
(B) மனைவி - தகுதி
(C) மதிப்பு - துணி
(D) தகுதி -மனைவி
ANS : (D) தகுதி -மனைவி
8.குறில் நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு
கோடிட்ட இடத்துக்கு பொருத்தமான சொல்லைத் தேர்க.
------- யைத் திரை ------------ மறைத்திருக்கிறார்கள்.
(A) வலை, வளை
(B) மலை, மழை
(C) அலை, அழை
(D) சிலை, சீலை
ANS : (D) சிலை, சீலை
9.தவறான இணையைத் தேர்ந்தெடு.
(A) கொள் - கோள்
(B) பெறு - பேறு
(C) விடு -வீடு
(D) பனி - பாணி
ANS : (D) பனி - பாணி
10.குறில் - நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக- கிரி - கீரி
(A) மலை - பிளந்து
(B) மலை -விலங்கு
(C) வலை -விலங்கு
(D) மலை -வலை
ANS : (B) மலை -விலங்கு