நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு:
ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிற்குப் பிறகும், மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்ய வேண்டுமென இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 82 மற்றும் 170 வலியுறுத்துகிறது. இப்படி மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய Delimitaion Commission என்கிற குழுவை அமைக்க வேண்டுமென்று 1952ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டம் கூறியது.
DELIMITATION COMMISSION குழு:
- 1951 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் மறுவரையறை ஆணையின் காரணமாக 1952 ஆம் ஆண்டு எல்லை மறுவரையறை ஆணையம் உருவாக்கப்பட்டது.
- உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான நீதிபதி என். சந்திரசேகர அய்யர் 1953 ஆம் ஆண்டு அதன் தலைவராக இருந்தார்.
- மக்களவையில் இடங்களை 489 இலிருந்து 494 ஆக அதிகரிக்க ஆணையம் பரிந்துரைத்தது
மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு :
- பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் (Census) அடிப்படையில் தொகுதி மறுவரை செய்யப்பட வேண்டுமென்றது சட்டம்.
- இதற்குப் பிறகு இந்தியாவில் மூன்று முறை 1951, 1961 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தது.
- மேற்கூறிய கணக்கெடுப்புகளின் படி இந்தியாவின் மக்கள் தொகை முறையே 36 கோடி, 43.9 கோடி, மற்றும் 54.8 கோடியாக இருந்தது.
- இந்த எண்ணிக்கைகளின் அடிப்படையில் 1952இல் நடந்த முதல் தேர்தலில் 494 தொகுதிள் அமைக்கப்பட்டன. அடுத்த பத்தாண்டுகளில் மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு இந்த எண்ணிக்கை 522 மற்றும் 543 என்று உயர்ந்தது.
42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம்:தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை :
- தொகுதி மறுசீரமைப்பை பொறுத்தவரை, மக்கள் தொகை அதிகமாகி கொண்டே இருக்கிறது என்றால் , தொகுதிகளை அதிகரித்து கொண்டே இருக்க கூடாது. 1971 ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள்தொகை என்பது 4.11 கோடி. உத்தரப்பிரதேசத்தில் 8 கோடிக்கு மேல்.
- ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தைக் காரணம் காட்டி தொகுதிகளை அதிகரித்துக் கொண்டே சென்றால் அதிக மக்கள்தொகையுள்ள மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைத்து நாடாளுமன்றத்தின் சமநிலை பாதிக்கப்படும் என்று நினைத்த இந்திரா காந்தி அரசு தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கும் வகையில் Delimitaion Actஐத் திருத்தியது. 1976ஆம் அவசரநிலைக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட 42ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2001 வரை தொகுதி மறுசீரப்பை நிறுத்தி வைத்தது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை சரியாகச் செயல்படுத்திய மாநிலங்கள் இதனால் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
- 2001இல் இந்த 25 ஆண்டு என்கிற காலவரம்பு முடிவுக்கு வந்தது. இதனால் 2002இல் அடல் பிஹாரி வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது தொகுதி மறுசீரமைப்பு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால், 84வது திருத்தத்தின் மூலம் இது மேலும் 25 ஆண்டுகளுக்கு தள்ளிப் போடப்பட்டது. இதன்படி, 2026க்குள் இந்தியாவின் அனைத்துப்பகுதியிலும் மக்கள் தொகை நிலைபெற்றுவிடும் என கருதப்பட்டது. ஆகவேதான், இப்போது தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை உருவெடுத்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை :தமிழ்நாடு:
- இந்தியாவில் நாடாளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யும்போது, மக்கள் தொகையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள மாநிலமான தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் சிக்கல் குறித்து விவாதிக்க, மாநில அரசு (மார்ச் 05) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
- மொத்தம் 63 கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
- இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளப் போவதில்லை என பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி ஆகியவை அறிவித்தன. இதுதவிர, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி ஆகியவையும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
- அ.தி.மு.க., இடதுசாரிக் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், தமிழக வெற்றிக் கழகம், அ.ம.மு.க, ம.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகள் இதில் பங்கேற்றன.
- இந்தக் கூட்டம் மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் (மார்ச் 05)காலை பத்து மணிக்குத் தொடங்கியது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்:
- இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான 'நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை' இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.
- கடந்த 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் வாஜ்பேய் உறுதி அளித்தார். தற்போதும் இந்த வரையறை 2026இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும். மேலும், அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.
- நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.
- தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக்கூடாது என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
- இந்தக் கோரிக்கைளையும் அவை சார்ந்த போராட்டங்களையும் முன்னெடுத்துச் செல்ல - மக்கள் மத்தியில் இந்தப் பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய 'கூட்டு நடவடிக்கைக் குழு' ஒன்றை அமைத்திட வேண்டும்.
லோக்சபா தேர்தல் தொகுதிகள், இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தொகுதிகளின் பட்டியல் இங்கே:
| மாநிலம் / யூனியன் பிரதேசம் | தொகுதிகளின் எண்ணிக்கை |
- | ஆந்திரப் பிரதேசம் 25
- | அருணாச்சலப் பிரதேசம் 2
- | அசாம் 14
- | பீகார் 40
- | சத்தீஸ்கர் 11
- | கோவா 2
- | குஜராத் 26
- | ஹரியானா 10
- | ஹிமாச்சலப் பிரதேசம் 4
- | ஜார்கண்ட் 14
- | கர்நாடகா 28
- | கேரளா 20
- | மத்யபிரதேசம் 29
- | மகாராஷ்டிரா 48
- | மணிப்பூர் 2
- | மேகாலயா 2
- | மிசோரம் 1
- | நாகாலாந்து 1
- | ஒரிசா 21
- | பஞ்சாப் 13
- | ராஜஸ்தான் 25
- | சிக்கிம் 1
- | தமிழ்நாடு 39
- | தெலுங்கானா 17
- | திரிபுரா 2
- | உத்தரப் பிரதேசம் 80
- | உத்தராகண்ட் 5
- | மேற்கு வங்காளம் 42
- | அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் 1
- | சண்டிகர் 1
- | தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ 2
- | ஜம்மு மற்றும் காஷ்மீர் 5
- | லடாக் 1
- | லட்சத்தீவுகள் 1
- | டெல்லி 7
- | புதுச்சேரி 1
- இந்தியாவில் மக்களவை வரையறை 1951, 1962, 1972, 2003 ஆகிய நான்கு ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது.
- ஓவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பிறகும் மக்களவை மறுவரை நடைபெறும்.
- 1971-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்களவையின் எண்ணிக்கை 543ஆக உள்ளது.
KEY WORDS :
- DELIMITATION
COMMISSION ACT
- DELIMITATION
COMMISSION OF INDIA
- DELIMITATION
INDIA
- DELIMITATION
- DELIMITATION
COMMISSION UPSC
- DELIMITATION
OF CONSTITUENCIES
- HOW
MANY TIMES DELIMITATION COMMISSION FORMED IN INDIA
- WHAT
IS DELIMITATION
- WHAT
IS DELIMITATION COMMISSION
- DELIMITATION
COMMISSION ARTICLE
- DELIMITATION
UPSC ,TNPSC EXAM NOTES
REFERENCE SOURCE : BBC NEWS , PUTHIYA THALAIMURAI NEWS