97வது ஆஸ்கார் விருதுகள் 2025:
97வது ஆஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. உலக சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த ஆஸ்கார் விழாவில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது அளித்து கவுரவப்படுத்தப்படும்.
ஆஸ்கார் விருது 2025 வென்றவர்களின் பட்டியல்:
- சிறந்த திரைப்படம் - அனோரா
- சிறந்த அனிமேஷன் படம் - ப்லொவ் (Flow)
- சிறந்த துணை நடிகர் - கீரான் கல்கின் (A Real Pain Movie)
- சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆப் தி சைப்ரஸ் (IN THE SHADOW OF THE CYPRESS)
- சிறந்த ஆடை வடிவமைப்பாளர் - பால் டேஸ்வெல் (Wicked Movie)
- சிறந்த அசல் திரைக்கதை - சீன் பேக்கர் (Anora Movie)
- சிறந்த திரைக்கதை - சீன் பேக்கர் இயக்கிய அனோரா
- சிறந்த இயக்குனர் -சீன் பேக்கர் (அனோரா)
- சிறந்த படத்தொகுப்பு - அனோரா
- சிறந்த நடிகை - மில்கி மேடிசன் (அனோரா)
- சிறந்த நடிகர் - அட்ரியன் ப்ரோட்ய் (THE BRUTALIST)
- சிறந்த பின்னணி இசை - டேனியல் பிளூம்பெர்க் (THE BRUTALIST)
- சிறந்த தழுவப்பட்ட திரைக்கதை - கான்க்ளேவ் (Peter Straughan Movie)
- சிறந்த சர்வதேச திரைப்படம் - வால்டர் சல்லெஸ் (I'M STILL HERE)
- சிறந்த ஒளிப்பதிவு - லொள் ஸ்ரவ்லே (THE BRUTALIST)
- சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - விக்டோரியா வார்மேர்டாம் அண்ட் ட்ரெண்ட் (I'M NOT A ROBOT)
- சிறந்த கிராபிக்ஸ் - டுனே 2 (DUNE: PART TWO)
- சிறந்த ஒலி வடிவமைப்பு - டுனே 2 (DUNE: PART TWO)
- சிறந்த ஆவண திரைப்படம் - நோ அதர் லேன்ட் (NO OTHER LAND)
- சிறந்த ஆவண குறும்படம் - தி ஒன்லி கேர்ள் இன் தி ஓர்சேஸ்ட்ரா (THE ONLY GIRL IN THE ORCHESTRA)
- சிறந்த பாடலுக்கான விருது - EMILIA PEREZ MOVIE ( El Mal SONG)
- சிறந்த கலை வடிவமைப்பு - நாதன் கிரௌலே, லீ சண்டல்ஸ் (WICKED MOVIE)
- சிறந்த துணை நடிகை - ஜோ சாலடான (EMILIA PÉREZ MOVIE)
- 'ANORA' திரைப்படம் 5 விருதுகளையும், 'DUNE: PART TWO' திரைப்படம் இரண்டு விருதுகளையும் வென்றுள்ளது
- 'தி புரூட்டலிஸ்ட்' (THE BRUTALIST) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் பிரியங்கா சோப்ரா மற்றும் குனீத் மோங்கா தயாரித்த 'அனுஜா' என்ற குறும்படம் மட்டும் 'சிறந்த குறும்படம் (லைவ் ஆக்ஷன்)' பிரிவில் தேர்வாகியிருந்தது.
- ஆஸ்கர் விருது விழாவில் 13 பிரிவுகளில் ஸ்பானிஷ் திரைப்படமான 'எமிலியா பெரெஸ்' (EMILIA PEREZ) நாமினேட் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் தான் (KARLA SOFIA GASCON) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.