பிரித்து எழுதுதல் -PIRITHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01– TNPSC ILAKKANAM -TNPSC NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]

TNPSC PAYILAGAM
By -
0
PIRITHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01



அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்) 

எழுத்து: 

TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]



பிரித்து எழுதுதல்-PIRITHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01


1.'தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
(A) தண் + அளிர் + பதம்
(B) தன்மை + தளிர் + பதம்
(C) தண்மை + தளிர் + பதம்
(D) தண்டளிர் + பதம்

ANS : (C) தண்மை + தளிர் + பதம்

2.கலம்பகம் -இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
(A) கலம் + அகம்
(B) கலம் + பகம்
(C) கலம்பு + அகம்
(D) கல் + அம்பகம்

ANS :(B) கலம் + பகம்

3.மாசற பிரித்தெழுதுக.
(A) மாச + அற
(B) மாச + உற
(C)மாசு + அற
(D) மாசு + உற

ANS : (C)மாசு + அற

4.இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) இடம் + மெல்லாம்
(B) இடம் + எல்லாம்
(C) இட + எல்லாம்
(D) இட + மெல்லாம்

ANS : (B)இடம் + எல்லாம்

5.'படிப்பறிவு' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) படி + அறிவு
(B) படிப்பு + அறிவு
(C) படி + வறிவு
(D) படிப்பு + வறிவு

ANS : (B) படிப்பு + அறிவு

6.பாசிலை - பிரித்தெழுதுக :
(A) பசுமை + இலை
(B) பச்சை + இலை
(C) பாசு + சிலை
(D) பா + சிலை

ANS : (A) பசுமை + இலை

7.'அருந்துணை' என்பதை பிரித்தெழுதுக.
(A) அருமை + துணை
(B) அரு + துணை
(C) அருந் + துணை
(D) அரு + இணை

ANS : (A) அருமை + துணை

8.பலவுயிர் - பிரித்தெழுதுக.
(A) பல் + உயிர்
(B) பல + உயிர்
(C) பல + வுயிர்
(D) பல் + வுயிர்

ANS :(B) பல + உயிர்

9.'வண்கீரை' - பிரித்தெழுதுக.
(A) வண் + கீரை
(B) வண்ணம் + கீரை
(C) வளம் + கீரை
(D) வண்மை + கீரை

ANS :(D) வண்மை + கீரை

10.'எற்பாடு' பிரித்து எழுதுக.
(A) எல் + பாடு
(B) எற் + பாடு
(C) எழு + பாடு
(D) எழுமை + பாடு

ANS : (A) எல் + பாடு

11.நமனில்லை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(A) நம் + இல்லை
(B) நமது + இல்லை
(C) நமன் + நில்லை
(D) நமன் + இல்லை

ANS : (D) நமன் + இல்லை

12.பிரித்து எழுதுக :  ஆற்றுணா
(A) ஆற்று + உணா
(B) ஆற்று + உண்ணா
(C) ஆறு + உணா
(D) ஆறு + உண்ணா

ANS : (C) ஆறு + உணா

13.வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.
(A) வண்டு + எழுந்து
(B) வண்டாய் + எழுந்து
(C) வண்டா + எழுந்து
(D) வண்டு + எழு + உந்து

ANS : (B) வண்டாய் + எழுந்து

14.கண்டெடுக்கப்பட்டுள்ளன - பிரித்தெழுதுக.
(A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன
(B) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன
(C) கண்டெடுக்க + பட்டு + உள்ளன
(D) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன

ANS : (A) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன

15.பெருங்கடல் - பிரித்தெழுதுக.
(A) பெரு + கடல்
(B) பெருமை + கடல்
(C) பெரிய + கடல்
(D) பெருங் + கடல்

ANS : (B) பெருமை + கடல்



Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)