பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் / PM-GATI SHAKTI NATIONAL MASTER PLAN

TNPSC PAYILAGAM
By -
0
PM-GATI SHAKTI NATIONAL MASTER PLAN




  • பல்வேறு பொருளாதார மண்டலங்களுக்கு பன்முக இணைப்பு உள்கட்டமைப்பை வழங்குவதற்காக பிரதமரின் விரைவுசக்தி தேசிய பெருந்திட்டம் (PMGS-NMP) 2021 அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்டது.
  • பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட இணையதளத்தில் பொருளாதார, சமூக, சரக்குப்போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவு அடுக்குகள் உள்ளன. இதன் மூலம் சரக்குப் போக்குவரத்திற்கான பன்முக இணைப்பை முழுமையாக ஒருங்கிணைக்கும் நோக்கில் செயல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அடையாளம் காண முடியும் . 
  • முறையான சரக்குப் போக்குவரத்து  இணைப்பிற்காக மக்கள், சரக்குகள் மற்றும் சேவைகளின் தடையற்ற இயக்கத்தில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து, அதனை களைவதற்கான நடவடிக்கைகள் சரக்குப் போக்குவரத்திற்கான செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.
  • இந்த இணையதளத்தை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சிகளில் 550 –க்கும் கூடுதலான அடுக்குகள் வெவ்வேறு தரவு தொகுப்புகள் கிடைப்பதை உறுதி செய்கின்றன. இதன் மூலம் சீரமைப்பு நடவடிக்கைகள் உட்பட விரிவான திட்ட அறிக்கையை  மேம்படுத்தவும் உதவுகிறது.
  • மேலும், ரூ. 6.38 லட்சம் கோடி மதிப்பீட்டில் சுமார் 13,500 கிலோ மீட்டர் தொலைவிலான 115 தேசிய நெடுஞ்சாலைகள் / சாலைத் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து இந்த இணையதளம் மூலம் ஆய்வு செய்யப்படுகிறது. 
  • பிரதமரின் விரைவு பெருந்திட்டத்தின் கீழ் செயல்படும் கட்டமைப்பு, திட்டமிடல் குழுக்களுடன் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, திட்ட வடிவமைப்பு, சீரமைப்பு, அனுமதி வழங்குதல், ஒப்புதல்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய கால அவகாசம் மற்றும் செலவுகளைக் குறைப்பதன் மூலம் மிக நேர்த்தியான முறையில் நெறிப்படுத்தப்பட்ட திட்ட விநியோகத்திற்கான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளை சிறந்த முறையில் செயல்படுத்தவும் வழிவகுத்துள்ளது.
  • இந்தத் திட்டமானது மாறும் தன்மை கொண்ட புவியியல் தகவல் அமைப்பு தளத்தில் உள்ள அம்சங்களுடன் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட விரிவான திட்ட தொகுப்பு கருவி, தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட சீரமைப்புகளை மேம்படுத்துவதற்கும், தற்போதுள்ள இயற்பியல் / புவியியல் அம்சங்கள், வனப்பகுதிகள், சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதிகள் போன்றவை தொடர்பான தகவல்களைக் கருத்தில் கொண்டு பணிகளைத் திட்டமிடுவதற்கும் உதவியாக இருக்கும். அனுமதி தொடர்பான நடவடிக்கைகள் விரைவான, பயனுள்ள திட்ட தயாரிப்புக்கு உறுதுணையாக உள்ளன.  
  • திட்ட செயலாக்க நிலைகளில் அது தொடர்பான அம்சங்களில் இடைப்பட்ட காலத்தில் தேவைப்படும்  திருத்தங்களைத் தவிர்ப்பதன் மூலம் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது.
  • வழக்கமான கொள்கை தலையீடுகள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அணுகுமுறை மூலம், உள்கட்டமைப்புத் திட்டங்களின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத்தை மேம்படுத்துவதில் பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட இணையதளத்தில் நோக்கத்தை விரிவுபடுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. 
  • தரவுகளை புதுப்பித்தல், மின்னணு முறையிலான விரிவான விபத்து தகவல் தொகுப்பு, போக்குவரத்து கணக்கெடுப்பு, சுங்கச்சாவடி புள்ளி விவரங்கள் போன்ற பிற தரவுத்தளங்களுடன் ஒருங்கிணைத்தல் மூலம் இந்த இணைய தளத்தை தொடர்ந்து மேம்படுத்துவதில் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.


SOURCE : PIB


Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)