ஜவுளித் தொழிலுக்கான புதிய திட்டம்:
- நாடு முழுவதும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்கள்/முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. முக்கிய திட்டங்கள்/முன்முயற்சிகளில் பிரதமரின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆடை (பிஎம் மித்ரா-PM Mega Integrated Textile Regions and Apparel (PM MITRA) Parks Scheme) பூங்காக்கள் திட்டம் ஆகியவை அடங்கும்.
- இது நவீன, ஒருங்கிணைந்த பெரிய அளவிலான, உலகத் தரம் வாய்ந்த தொழில்துறை சூழல் அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறது. இது முதலீடுகளை ஈர்ப்பதற்கும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கும் உதவும்;
- பெரிய அளவிலான உற்பத்தியை ஊக்குவிப்பதற்கும் போட்டித்தன்மையை அதிகரிப்பதற்கும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஃபைபர் & ஆடை மற்றும் தொழில்நுட்ப ஜவுளி ஆகியவற்றில். உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டம் கவனம் செலுத்தும்.
- தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் ஆராய்ச்சி, புத்தாக்கக் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பாடு, சந்தை மேம்பாடு, திறன் மற்றும் ஏற்றுமதி மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
- ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக நாட்டை திகழச் செய்யும் வகையில் மத்திய அரசு 2027-28 வரை ஏழு ஆண்டு காலத்திற்கு ரூ.4,445 கோடி செலவில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் ஏழு பிரதமரின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளி பிராந்தியம் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்களை (பிஎம் மித்ரா) அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
- பிரதமர் மித்ரா பூங்காக்களை அமைப்பதற்காக தமிழ்நாடு (விருதுநகர்), தெலங்கானா (வாரங்கல்), குஜராத் (நவ்சாரி), கர்நாடகா (கல்புர்கி), மத்தியப் பிரதேசம் (தார்), உத்தரப் பிரதேசம் (லக்னோ / ஹர்தோய்) மற்றும் மகாராஷ்டிரா (அமராவதி) ஆகிய 7 இடங்களை அரசு இறுதி செய்துள்ளது.
- இப்பூங்காக்கள் ஜவுளித் தொழிலை உலக அளவில் போட்டியிடவும் அதிக முதலீடுகளை ஈர்க்கவும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் உதவும்.
ஜவுளித் துறையை மேம்படுத்தும் முக்கிய திட்டங்கள்:
- தேவை சார்ந்த, வேலைவாய்ப்பு சார்ந்த, திறன் மேம்பாட்டுத் திட்டத்தை வழங்கும் நோக்கத்துடன் ஜவுளித் துறையில் திறன் மேம்பாடு மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டிற்கான சமர்த் திட்டம்(SAMARTH – Scheme);
- தரப்படுத்தப்பட்ட ஜவுளி இயந்திரங்களில் தகுதியான முதலீட்டிற்கு மூலதன முதலீட்டு மானியம் மூலம் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் நவீனமயமாக்கலை ஊக்குவிக்க ATUFS-திட்டம்;
- பட்டுப்புழு வளர்ப்பு மதிப்புச் சங்கிலியின் விரிவான மேம்பாட்டிற்கான பட்டு சமக்ரா-2'(Silk Samagra-2)திட்டம்;
- கைத்தறி மற்றும் கைவினைத் துறைகளுக்கு இறுதி முதல் இறுதி வரை ஆதரவளிக்கும் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் தேசிய கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை முக்கிய திட்டங்கள்/முயற்சிகளில் அடங்கும்.
SOURCE : PIB