பிரதமரின் உள்ளகத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் :
- இன்றைய வேகமான பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான திறன்களுடன் இளைஞர்களை ஆயத்தப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா தீவிரமாக உணர்ந்து வருகிறது.
- இந்த பார்வைக்கு ஏற்ப, பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டம் எனப்படும் பிரதமரின் உள்ளகத் தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் 2023 அக்டோபர் 03 அன்று தொடங்கப்பட்டது.
- இந்த லட்சிய முயற்சி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு மதிப்புமிக்க உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு வணிக சூழல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் பல்வேறு தொழில்களைத் தெரிந்து கொள்ளவும் அனுமதிக்கிறது.
- 024-25-ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. எண்ணெய், எரிவாயு, எரிசக்தி, விருந்தோம்பல், வாகனம், வங்கி, நிதி சேவைகள் உள்ளிட்ட 24 துறைகளில் உள்ளகப் பயிற்சி வாய்ப்புகள் உள்ளன . இந்த முன்னோடித் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அவர்களின் பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு (CSR) செலவினங்களின் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இந்தியாவின் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தற்போது செயல்படுத்தப்படும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள், பயிற்சிகளிலுருந்து தனித்து இருப்பதே இந்தத் திட்டத்தை வேறுபடுத்துகிறது. உள்ளகப்பயிற்சிகளில் (இன்டர்ன்ஷிப்) மட்டுமே கவனம் செலுத்துவதன் மூலம், பிரதமரின் உள்ளகப் பயிற்சித் (இன்டர்ன்ஷிப்) திட்டம் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
- இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் 12 மாத ஊதியத்துடன் கூடிய பயிற்சிகள்.
- இந்தத் திட்டம், கல்வி கற்றல் மற்றும் தொழில்துறை தேவைகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்க உதவும் வணிகங்கள் அல்லது நிறுவனங்களின் நிஜ வாழ்க்கை சூழலில் (குறைந்தது ஆறு மாதங்கள்) பயிற்சி பெறவும், அனுபவத்தையும் திறன்களையும் பெறவும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது, இதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்த உதவுகிறது.
- இந்தத் திட்டம் 21 முதல் 24 வயதுடைய, முழுநேர கல்வித் திட்டத்தில் சேராத அல்லது முழுநேர வேலையில் இல்லாத நபர்களை இலக்காகக் கொண்டு, அவர்களின் வாழ்க்கையைத் தொடங்க ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
- இந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேரும் இளைஞா்களுக்கு 12 மாதங்களுக்கு மாதம் ரூ.5,000 உதவித் தொகையும், ஒரு முறை மானியமாக ரூ. 6,000 வழங்கப்படும்.
தகுதி:
- இத்திட்டம் 21 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களுக்காக வடிவமைக்கப்பட்ட 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சியை வழங்குகிறது. குறிப்பாக முழுநேர வேலையில் இல்லாத அல்லது முழுநேர கல்வியில் ஈடுபடாத இந்திய இளைஞர்களுக்கு இது பயன் அளிக்கும்.
- ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி படிப்புகளில் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- 2024 அக்டோபர் 12 முதல் பிரதமரின் உள்ளகப் பயிற்சிக்கான தளம் மூலம் உள்ளகப் பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
- இந்த திட்டம் 2024-25-ம் நிதியாண்டில் 1.25 லட்சம் உள்ளகப் பயிற்சிகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- தகுதியுள்ள இளைஞர்கள் புதிய மொபைல் செயலி மூலமாகவோ அல்லது https://pminternship.mca.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்
முன்னோடித் திட்டத்தின் முதல் சுற்றில் (அக்டோபர் - டிசம்பர் 2024), 25 துறைகளைச் சேர்ந்த சுமார் 280 நிறுவனங்களால் சுமார் 745 மாவட்டங்களில் 1.27 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. வேட்பாளர்களுக்கு 82,000 க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
பைலட் திட்டத்தின் இரண்டாம் சுற்று ஜனவரி 2025 இல் தொடங்கியது, மேலும் நாடு முழுவதும் சுமார் 327 நிறுவனங்கள் 1.18 லட்சத்திற்கும் மேற்பட்ட வாய்ப்புகளை (புதிய மற்றும் திருத்தப்பட்ட முந்தைய சுற்றின் நிரப்பப்படாத வாய்ப்புகள்) பதிவு செய்துள்ளன.
பன்முகத்தன்மை, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவிப்பதை வலியுறுத்தி, நிறுவனத்தின் தேவைகளுடன் வேட்பாளர்களின் விருப்பங்களையும் கருத்தில் கொள்ளும் ஒரு செயல்முறையை தளம் எளிதாக்குகிறது. இது எஸ்சி பிரிவினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
இன்டர்ன்ஷிப் எனப்படும் இந்த உள்ளகப் பயிற்சித் திட்டம் இளைஞர்களுக்கு நிதி ஆதரவையும் விரிவான பயிற்சி அனுபவத்தையும் வழங்குகிறது. இந்தியாவில் அடுத்த தலைமுறையினருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- இளைஞா்களிடையே தொழில் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு சாா்பில் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதமா் தொழில் பயிற்சி திட்டத்துக்கு கைப்பேசி செயலியை (PM Internship Scheme App) மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
SOURCE : PIB