ராஜீவ் யுவ விகாசம்' திட்டம் / Rajiv Yuva Vikasam Scheme
By -TNPSC PAYILAGAM
March 19, 2025
0
தெலுங்கானாவில் ஐந்து லட்சம் வேலையில்லாத இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை உருவாக்குவதற்காக 'ராஜீவ் யுவ விகாசம்' திட்டத்தை முதலமைச்சர் ஏ. ரேவந்த் ரெட்டி தொடங்கி வைத்தார்.
ராஜீவ் யுவ விகாசம் திட்டத்தின் கீழ் தெலுங்கானா அரசு, பட்டியல் சாதியினர் (SC), பட்டியல் பழங்குடியினர் (ST), பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த ஐந்து லட்சம் வேலையற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வாய்ப்புகளை வழங்கப்பட உள்ளது. இந்த ராஜீவ் யுவ விகாசம் திட்டத்தின் மூலம் வேலை இல்லாத பட்டியல் இனத்தை சேர்ந்த 5 லட்சம் இளைஞர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்காக 6,000 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு தெலங்கானா மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுயதொழில் திட்டங்களின் கீழ் தகுதியுள்ள ஐந்து லட்சம் பயனாளிகளுக்கு இந்த உதவி வழங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 15 ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் இளைஞர்கள் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை தங்கள் விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மே 31 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு பயனாளிகள் அடையாளம் காணப்பட உள்ளார். அடையாளம் காணப்பட்ட பயனாளிகளுக்கு ஜூன் 2 ஆம் தேதி ஒப்புதல் கடிதங்கள் வழங்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் ஒவ்வொரு பயனாளியும் தங்கள் தொழில்முனைவோர் முயற்சிகளை மேற்கொள்ள தலா 3 லட்சம் ரூபாய் பெறுவார்கள்.