அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்)
எழுத்து:
TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES [ UPDATED ON 2025 ]
சந்திப்பிழை நீக்கி எழுதுதல் -SANTHI PILAIYAI-ONLINE MODEL TEST 01:
1.சந்திப்பிழையைச் சரிபார்த்து எழுதுக.
(A) கண்களை கசகிக் கொண்டுபார்த்தான்
(B) கண்களைக் கசக்கி கொண்டுபார்த்தான்
(C) கண்களைக் கசக்கிக் கொண்டுபார்த்தான்
(D) கண்களை கசகி கொண்டுபார்த்தான்
ANS : (C) கண்களைக் கசக்கிக் கொண்டுபார்த்தான்
2.சந்திப்பிழை இல்லாத தொடரைக் காண்க.
(A) ஆசிரியர் வருவதாக கூறிச் சென்றார்
(B) ஆசிரியர் வருவதாகக் கூறிச் சென்றார்
(C) ஆசிரியர் வருவதாகக் கூறி சென்றார்
(D) ஆசிரியர் வருவதாக கூறி சென்றார்
ANS : (B) ஆசிரியர் வருவதாகக் கூறிச் சென்றார்
3.சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.
1. காட்சியைப் பார்
2. என கேட்டார்
3. ஊருக்கு செல்
4. கதவைத் திற
(A) 1 மற்றும் 4
(B) 2 மற்றும் 3
(C) 1 மற்றும் 3
(D) 4 மற்றும் 2
ANS : (A) 1 மற்றும் 4
4.சந்திப் பிழை - கதையை படித்தேன்
(A) கதை படித்தேன்
(B) கதையைப் படித்தேன்
(C) கதையில் படித்தேன்
(D) கதையால் படித்தேன்
ANS : (B) கதையைப் படித்தேன்
5.சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
(A) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
(B) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரபோகிறது
(C) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களை செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
(D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
ANS : (D) வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
6.சந்திப்பிழையை நீக்குக.- தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்
(A) சிக்கனமாகப் பயன்படுத்துவேன்
(B) சிக்கனம்ஆகப் பயன்ப்படுத்துவேன்
(C) சிக்கனம்மாக பயன்படுத்துவேன்
(D) சிக்கனம்மாக பயன்ப்படுத்துவேன்
ANS : (A) சிக்கனமாகப் பயன்படுத்துவேன்
7.சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக.
(A) ஒன்றை சொல்லுவதற்கென்றே இசைக்கபடும் இசைக்கவல்ல தாள கருவி பறை.
(B) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைகவல்ல தாள கருவிப் பறை.
(C) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி பறை.
(D) ஒன்றைச் சொல்லுவதற்கென்ரே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாலக் கருவிப் பரை.
ANS : (C) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி பறை.
8. சந்திப் பிழையற்ற தொடர் எது?
(A) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
(B) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்று கொள்வேன்.
(C) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்று கொள்வேன்.
(D) கைவினைக் கலைகளுள் ஒன்றை கற்றுக் கொள்வேன்.
ANS: (A) கைவினைக் கலைகளுள் ஒன்றைக் கற்றுக் கொள்வேன்.
9.சந்திப்பிழை நீக்கி எழுதுக
(A) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை
(B) பண்பாட்டுக் கூறுகளைப் பேணி பாதுகாப்பது நம் கடமை
(C) பண்பாட்டு கூறுகளைப் பேணி பாதுகாப்பது நம் கடமை
(D) பண்பாட்டு கூறுகளை பேணி பாதுகாப்பது நம் கடமை
ANS:(A) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை
10. சந்தி பிழையற்ற தொடர்- வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
(A) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது
(B) வள்ளை பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றது
(C) வள்ளைப் பாட்டின் சிறப்பு கேற்ப முழவை முழங்குகின்றன
(D) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றன
ANS:(A) வள்ளைப் பாட்டின் சிறப்புக் கேற்ப முழவை முழங்குகின்றது