நிலையான வளர்ச்சி இலக்கான குறியீடு:(SDG India Index 2025):
- நிலையான வளர்ச்சி இலக்கான (Sustainable Development Goal 16 Indicators (SDG)) 16 குறியீடுகளில், ஒன்பதில் பின்தங்கியிருக்கும் இந்தியா, உலகளவில், 167 நாடுகளில் 109வது இடத்தைப் பிடித்துள்ளது.
- எனினும், (SDG Tamilnadu Index 2025) இந்த நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டில் நாட்டின் சராசரியான 71-ஐ விடவும் (80.2 மதிப்பெண்) அதிக புள்ளிகள் பெற்று தமிழ்நாடு, நமது நாட்டிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலிடத்தில் கேரளம் உள்ளது.
- இந்தியா எஸ்டிஜி 5-ல் (பாலின சமத்துவம்) பலவீனமாக உள்ளது. இதன் கீழ் இருக்கும் எட்டு அளவீடுகளிலும் இந்தியா வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நாட்டில் இன்னமும் 1000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற விகிதமே நீடிக்கிறது. திருமணமான பெண்களில் 29.2 சதவீதம் பேர் குடும்ப வன்முறையை எதிர்கொள்கிறார்கள், 13.96 சதவீதம் பெண்கள்தான் சொந்தமாக சொத்து வைத்திருக்கிறார்கள் என்று காட்டுகிறது.
- எஸ்டிஜி 5 இல், தமிழகம் 50-64 புள்ளிகளைப் பெற்றுள்ளது, அதாவது, 1,000 ஆண்களுக்கு 929 பெண்கள் என்ற பாலின விகிதம் தேசிய தரவுடன் பொருந்துகிறது.
- மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பானது, மாநிலங்களோடு மாநிலங்களை ஒப்பிடும் வகையில், டூப்ளின் பல்கலைக்கழகத்தின் நிலையான மேம்பாட்டு அறிக்கை, நிதி ஆயோக் வெளியிட்ட நிலையான வளர்ச்சி இலக்கு குறியீடு 2023 - 24, தேசிய மக்கள்தொகை ஆணையத்தின் 2011-2036 மக்கள்தொகை கணிப்புகள் குறித்த தொழில்நுட்பக் குழு அறிக்கை ஆகியவற்றை ஒப்பிட்டு, ஒரு கலவையான ஒப்பீட்டுத்தரவை வெளியிட்டுள்ளது.
- நாட்டின் ஒட்டுமொத்த நிலையான வளர்ச்சி குறியீட்டு மதிப்பீடு 2023-24 -ம் ஆண்டில் 71 ஆக உள்ளது, இது 2020-21-ம் ஆண்டில் 66 ஆகவும், 2018-ம் ஆண்டில் 57 ஆகவும் இருந்தது.
- 2023-24-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மதிப்பீடு குறைந்தபட்சம் 57 முதல் அதிகபட்சம் 79 வரை உள்ளது. இது 2018-ம் ஆண்டில் இது 42 முதல் 69 வரை இருந்தது.
நிலையான வளர்ச்சி இலக்கான குறியீடு 2025:
SDG India Index 2025 : மாநிலங்கள்
- Kerala-80.2
- Tamil Nadu 80.2
- Punjab 77.8
- Uttarakhand 77.2
- Goa 75.6
- Himachal Pradesh 74
- Telangana 74
- Mizoram 73
- Haryana 72.2
- Sikkim 72
- Kamatakt 71.6
- Andhra Pradesh 70,4
- Maripur 69.6
- Rajasthan 60.4
- Gujarat 68
- Tripura 67.8
- Maharashtra 67.6
- Arunachal Pradesh 65,4
- West Bangal 64.2
- Nagaland 61.6
- Odisha 61.2
- Chhattisgarh 50
- Assam 57.2
- Jharkhand 57.2
- Modhya Pradesh 56,8
- Meghalaya 56.6
- Uttar Pradesh 56.4
SDG India Index 2025: யூனியன் பிரதேசங்கள்:
- Chandigarh 78.2
- Delhi 76.6
- Lakshadweep 73
- Puducherry 70
- Jammu & Kashmir 69.8
- Ladakh 68.4
- A&N Islands 66.6
- DNHDD 64.2
நன்றி :தினமணி