சேர்த்து எழுதுதல்-SERTHU ELUDHUTHAL ONLINE MODEL TEST 01- TNPSC ILAKKANAM -TNPSC NEW SYLLABUS [ UPDATED ON 2025 ]

TNPSC PAYILAGAM
By -
1 minute read
0
SERTHU ELUDHUTHAL  ONLINE MODEL TEST 01- TNPSC ILAKKANAM -TNPSC NEW SYLLABUS  [ UPDATED ON 2025 ]



அலகு I : இலக்கணம் (25 கேள்விகள்) 

எழுத்து: 

TNPSC TAMIL ILAKKANAM NEW SYLLABUS STUDY NOTES  [ UPDATED ON 2025 ]


சேர்த்து எழுதுதல்-SERTHU ELUDHUTHAL  ONLINE MODEL TEST 01:


1.இல்லாது + இயங்கும் - சேர்த்து எழுதுக.
(A) இல்லாதுஇயங்கும்
(B) இல்லாஇயங்கும்
(C) இல்லாதியங்கும்
(D) இல்லதியங்கும்
ANS : (C) இல்லாதியங்கும்

2.நீலம் + வான் - சேர்த்து எழுதுக.
(A) நீலம்வான்
(B) நீளம்வான்
(C) நீலவ்வான்
(D) நீலவான்
ANS : (D) நீலவான்

3.ஓடை + எல்லாம் என்பதைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) ஓடைஎல்லாம்
(B) ஓடையெல்லாம்
(C) ஓட்டையெல்லாம்
(D) ஓடெல்லாம்
ANS : (B) ஓடையெல்லாம்

4.இடம் + எங்கும் - சேர்த்தெழுதுக
(A) இடவெங்கும்
(B) இடமெங்கும்
(C) இடம்எங்கும்
(D) இடம்மெங்கும்
ANS : (B) இடமெங்கும்


5.சேர்த்தெழுதுக. காடு + ஆறு
(A) காட்டாறு
(B) காடாறு
(C) காட்டு ஆறு
(D) காடு ஆறு
ANS : (A) காட்டாறு

6.பால் + ஊறும் - சேர்த்தெழுதுக.
(A) பால்ஊறும்
(B) பால்லூறும்
(C) பாலூறும்
(D) பாஊறும்
ANS : (C) பாலூறும்

7.சேர்த்தெழுதுதல் - தூக்கி + கொண்டு
(A) தூக்கிகொண்டு
(B) தூக்குக் கொண்டு
(C) தூக்கிக் கொண்டு
(D) தூக்கு கொண்டு
ANS : (C) தூக்கிக் கொண்டு

8.சேர்த்தெழுதுதல்.- விழித்து + எழும்
(A) விழியெழும்
(B) விழித்தெழும்
(C) விழித்தழும்
(D) விழித்து எழும்
ANS : (B) விழித்தெழும்

9.பொங்கல் + அன்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) பொங்கலன்று
(B) பொங்கல் அன்று
(C) பொங்கலென்று
(D) பொங்கஅன்று
ANS : (A) பொங்கலன்று

10.சேர்த்தெழுதுக - இன்புற்று + இருக்க
(A) இன்புற்றிருக்க
(B) இன்புறுறிருக்க
(C) இன்புற்று இருக்க
(D) இன்புறுஇருக்க
ANS : (A) இன்புற்றிருக்க

11. 'கட்டி + அடித்தல்' என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்
(A) கட்டியிடத்தல்
(B) கட்டியடித்தல்
(C) கட்டிஅடித்தல்
(D) கட்டுஅடித்தல்
ANS : (B) கட்டியடித்தல்

12.சேர்த்தெழுதுதல்: - எட்டு + திசை - சேர்த்து எழுதுக
(A) எட்டி இசை
(B) எட்டு திசை
(C) எட்டிசை
(D) எட்டுத்திசை
ANS : D) எட்டுத்திசை

13.'பாட்டு + இருக்கும்' - என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்.
(A) பாட்டிருக்கும்
(B) பாட்டுருக்கும்
(C) படியிருக்கும்
(D) பாடியிருக்கும்
ANS : (A) பாட்டிருக்கும்

14.சேர்த்தெழுதுதல் - 'பால் + ஊறும்' என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
(A) பால் ஊறும்
(B) பாலூறும்
(C) பால்லூறும்
(D) பா ஊறும்
ANS : (B) பாலூறும்

15. பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.
(A) பருத்திஎல்லாம்
(B) பருத்தியெல்லாம்
(C) பருத்தெல்லாம்
(D) பருத்திதெல்லாம்
ANS : (B) பருத்தியெல்லாம்


Post a Comment

0Comments

Post a Comment (0)