CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (11.04.2025-12.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (11.04.2025-12.04.2025)


ஆட்டோமொபைல் துறையில் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நீதி ஆயோக் விரிவான அறிக்கையாக வெளியிட்டுள்ளது:

  • மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் மத்திய பாஜக அரசால் ‘நீதி ஆயோக்’ (தேசிய கொள்கை குழு) அமைக்கப்பட்டது. 
  • தேசிய வளா்ச்சிக்கான கொள்கைகளை வகுப்பதே இதன் முதன்மை நோக்கமாகும். 
  • நீதி ஆயோக்கின் அறிக்கையில், இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் உதிரி பாகங்கள் தயாரிப்பு வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 145 பில்லியன் டாலர் என்ற உயர் அளவை எட்டும் என்று நீதி ஆயோக் குறிப்பிட்டுள்ளது. 
  • இன்னொருபுறம், ஆட்டோமொபைல் துறையில் தற்போதைய பொருளாதார ஏற்றுமதியானது 20 பில்லியன் டாலர் என்ற அளவில் இருக்கும் நிலையில், இது மும்மடங்கு அதிகரித்து 60 பில்லியன் டாலர்களாக அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


 ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் சுகாதார அவசரநிலை அறிவிப்பு:

  • ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியதாக 5 பேருக்கு லெகியோனையர்ஸ் எனும் நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
  • மேலும், அவர்கள் 5 பேரும் சிட்னியின் மத்திய வர்த்தக மாவட்டத்திற்கு சென்று திரும்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனைவக்கும் கடந்த மார்ச்.30 முதல் ஏப்.4 வரையிலான காலக்கட்டத்தில் இந்நோயிக்கான அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
  • இருப்பினும், இந்தத் தொற்று பரவியதற்கான மூலக்காரணம் என்னவென்று தெரியவராத நிலையில் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
  • முன்னதாக, லெகியோனையர்ஸ் என்பது லெகியோனெல்லா எனும் நன்னீரில் வாழும் பாக்டீரியாவினால் ஏற்படும் ஒரு வகையான நிமோனியா காய்ச்சலாகும்.
  • இந்த பாக்டீரியாக்கல் மனித உடம்பினுள் சென்ற 2 10 நாள்களுக்குள் தலைவலி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை
  • வெளிக்காட்ட துவங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
  • மேலும், காற்றில் பரவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5-10 சதவிகிதம் உயிரிழக்கும் அபாயமுள்ளதெனவும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு இந்தப் பாதிப்பு ஏற்பட்டு அதற்கு முறையான சிகிச்சையளிக்கவில்லை என்றால் 80 சதவிகிதம் வரையில் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து நீண்ட தூர கிளைடு குண்டு சோதனையை டிஆர்டிஓ வெற்றிகரமாக நடத்தியது:

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) 2025 ஏப்ரல் 08-ம் தொடங்கி 10-ம் தேதிக்கு இடையில் எஸ்யு-30 எம்கேஐ விமானத்திலிருந்து, கௌரவ்' எனப்படும் நீண்ட தூரம் சென்று தாக்கும் வெடிகுண்டு சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. சோதனைகளின் போது, தீவில் தரை இலக்குகளை நோக்கி 100 கி.மீ தூரம் வரை துல்லியமாகப் பயணிக்கும் திறன் வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டது.
  • எல்.ஆர்.ஜி.பி 'கௌரவ்' என்பது 1,000 கிலோ கிளைட் குண்டு ஆகும். இது சந்திபூரின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இமாராத் ஆராய்ச்சி மையம், ஒருங்கிணைந்த சோதனை வரம்பு ஆகியவற்றால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.  டி.ஆர்.டி.ஓ மற்றும் இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டு இந்த சோதனைகளை ஆய்வு செய்தனர்.

இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி குறியீட்டு எண் பிப்ரவரி 2025:

  • நாட்டின் தொழில்துறை உற்பத்திக் குறியீட்டு எண் குறித்த மதிப்பீடுகள் மாதந்தோறும் 12-ம் தேதி (அல்லது 12-ம் தேதி விடுமுறை நாளாக இருந்தால் முந்தைய வேலை நாள்) ஆறு வார கால தாமதத்துடன் வெளியிடப்படுகின்றன. 
  • மேலும் முக்கிய முகமைகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் இந்தத் தகவல்கள் தொகுக்கப்படுகின்றன. அவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள், நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெறுகின்றன. தொழில் உற்பத்திக் குறியீட்டின் திருத்தக் கொள்கையின்படி, இந்த விரைவு மதிப்பீடுகள் அடுத்தடுத்த வெளியீடுகளில் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படும்.
  • இந்தத் திருத்தத்தின் . முக்கிய சிறப்பம்சங்கள்: 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான தொழில் உற்பத்திக் குறியீட்டெண் வளர்ச்சி வீதம் 2.9 சதவீதமாக உள்ளது. இது கடந்த மாதத்தில் 5.0 சதவீதமாக இருந்தது.
  • சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் ஆகிய மூன்று துறைகளின் வளர்ச்சி விகிதங்கள் முறையே 1.6 சதவீதம், 2.9 சதவீதம் மற்றும் 3.6 சதவீதமாகும். இத்துறைகளின் உற்பத்தி குறியீடுகள் முறையே 141.9, 148.6 மற்றும் 194.0 ஆக உள்ளன.


உலகளாவிய தொழில்நுட்ப உச்சிமாநாடு 2025:

  • இந்திய அரசு, வெளியுறவு அமைச்சகம் மற்றும் கார்னகி இந்தியா இணைந்து நடத்தும் முதன்மை நிகழ்வான உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் (GTS -Global Technology Summit) 9வது பதிப்பு, 2025 ஏப்ரல் 10 முதல் 12 வரை புதுதில்லியில் நடைபெறும். 
  • இந்த உச்சிமாநாடு, உலகளாவிய தொழில்நுட்பக் கொள்கையை வடிவமைப்பதை நோக்கமாகக் கொண்ட அரசு, தொழில், கல்வித்துறை மற்றும் சிவில் சமூகம் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த உலகளாவிய தலைவர்களை ஒன்றிணைக்கிறது. 
  • "சம்பவனா"(Sambhavna) (சாத்தியக்கூறுகள் என்று பொருள்) என்ற கருப்பொருளுடன், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் எவ்வாறு உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்க்கலாம், டிஜிட்டல் நிர்வாகத்தை மேம்படுத்தலாம் மற்றும் எல்லை தாண்டிய ஒத்துழைப்பை எளிதாக்கலாம் என்பதை GTS 2025 ஆராயும்.


நம்ம கோவை’ செயலி அறிமுகம்:

  • பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ‘நம்ம கோவை’ செயலியை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் ஆன்லைன் முறையில் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
  • அதன் ஒரு பகுதியாக, ‘நம்ம கோவை’ என்ற செயலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
  • கோவையின் முக்கிய சுற்றுலா தளங்கள் குறித்த விவரங்கள், கோவை மாநகரின் சுய விவரங்கள், தன்னார்வலர்கள் பதிவு செய்த விவரம், பொதுப்பணிகள் மற்றும் அம்சங்கள், அரசுத் திட்டங்கள், மாநகராட்சி அலுவலர்களின் தொடர்பு விவரங்கள், வார்டுகளின் விவரங்கள், அதன் வரைபடங்கள், மாநகராட்சியின் செய்திகள், நிகழ்வுகள், அதிகாரிகளின் ஆய்வு நிகழ்வுகள் போன்றவை அதில் இருக்கும். மேலும், மாநகராட்சியின் திருமண மண்டப விவரங்கள், மாநகராட்சி அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள், விடுதிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அதில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.


தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் தங்க முதலீட்டுத் திட்டப் பத்திரங்கள்:

  • தமிழகத்தில் உள்ள 21 கோயில்களின் மூலம் கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகளை தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்ததற்கான முதலீட்டுப் பத்திரங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். 
  • இதன்மூலம் ஆண்டொன்றிற்கு கோயில்களுக்கு 17 கோடியே 81 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வட்டித் தொகையாக கிடைக்கப் பெறுகிறது.
  • இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (ஏப்.11) தலைமைச் செயலகத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் 21 திருக்கோயில்களில் காணிக்கையாக வரப்பெற்ற பலமாற்றுப் பொன் இனங்களில் கோயிலுக்கு பயன்பாடற்ற பொன் இனங்களை உருக்கி கிடைக்கபெற்ற 1,074 கிலோ 123 கிராம் 488 மில்லிகிராம் சுத்தத் தங்கக் கட்டிகள் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டது.
  • 21 கோயில்களின் பெயரில் பாரத ஸ்டேட் வங்கியின் தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதற்கு அடையாளமாக சமயபுரம், மாரியம்மன் கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ஆனைமலை மாசாணியம்மன் கோயில் ஆகிய கோயில்களின் அறங்காவலர் குழு தலைவர்கள், இணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர், செயல் அலுவலர் ஆகியோரிடம் அதற்கான பத்திரங்களை முதல்வர் இன்று வழங்கினார்.

2028 முதல் சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது:

  • அதன்படி, 2027-ல் வெளியான படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என்று ஆஸ்கர் விருது வழங்கும் அகாடமி அறிவித்துள்ளது. 
  • மேலும், 2028-ல் நடைபெறவுள்ளது 100-வது ஆஸ்கர் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.
  • சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை. சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது போல, திரைப்பட சண்டைப் பயிற்சி துறைக்கான டாரஸ் வேர்ல்ட் ஸ்டன்ட் விருதுகள் (Taurus World Stunt Awards) உள்ளன.
  • இந்நிலையில், வரும் 2028-ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விருது விழா தொட்டு சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக மாநிலத் தலைவரானார் நயினார் நாகேந்திரன்:

  • பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட்டது. 
  • சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனுக்கு இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டது. பாஜக தேசிய நிர்வாகிகள் கிஷன் ரெட்டி, தருண் சுக் உள்ளிட்டோர் சான்றிதழை அளித்தனர்.


மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது:

  • தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், கடந்த 8 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்கத் தீர்ப்பினை வழங்கிய நிலையில், 415 பக்க தீர்ப்பு நகலை அனைத்து மாநில ஆளுநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகலை ஏப்ரல் 11 ஆம் தேதி நள்ளிரவில் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. 
  • மாநில ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்கள் மீது குடியரசுத்தலைவர் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி முடிவு எடுக்க முடியாவிட்டால் அதற்கான காரணத்தை அந்தந்த மாநில அரசுகளுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில பேரவை அனுப்பும் மசோதாக்களை நிறைவேற்றாமல் தாமதப்படுத்த ஆளுநருக்கு வீட்டோ(தனி) அதிகாரம் என ஏதுமில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
  • அரசியலமைப்பின் 201 வது பிரிவின் கீழ், ஒரு மசோதா மீது முடிவெடுக்க காலவரம்பு எதுவும் குடியரசுத் தலைவருக்கு நிர்ணயிக்கப்படவில்லை என்பதால், மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)