ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) நொடியில் அழிக்கும் லேசா் ஆயுத அமைப்பை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பு (டிஆா்டிஓ) வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது:
- எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை நடுவானில் சுட்டு வீழ்த்தும் லேசர் அடிப்படையிலான ‘டி.இ.டபிள்யூ’ என்ற ஆயுத சோதனை டிஆர்டிஓ வெற்றிகரமாக மேற்கொண்டது. இதன்மூலம் இத்தகைய ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பிடித்தது.
- எதிரிநாட்டு போர் விமானங்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை நடுவானிலேயே சுட்டு வீழ்த்த பல வகை ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
- துல்லிய தாக்குதலுக்கு லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ஒரு சில முன்னணி நாடுகள் பயன்படுத்துகின்றன. அதே போன்ற டைரக்டட்-என்ர்ஜி விபான் (டி.இ.டபிள்யூ) என்ற பெயரில் 30 கிலோ வாட் லேசர் அடிப்படையிலான ஆயுதத்தை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) தயாரித்தது. இதில் 360 டிகிரியில் சுழலும், எலக்ட்ரோ ஆப்டிக்கல், அகச்சிவப்பு சென்சார்கள் உள்ளன.
50ம் ஆண்டு பொன்விழா-தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம்:
- தமிழக அரசால் 1975ம் ஆண்டு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு உதவுவதற்காக தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் தொடங்கப்பட்டது.
- வங்கி சாரா நிதி நிறுவனமாக பதிவு செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி சென்னை திருவல்லிக்கேணியில் இது செயல்படுகிறது. இங்கு 1.37 லட்சம் வாடிக்கையாளர்கள், ரூ.10,427 கோடி முதலீடு செய்துள்ளனர்.
- ஓராண்டு முதல் 5 ஆண்டுகள் வரை பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து முதலீடு பெறப்படுகிறது. அதில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
- தற்போது இந்நிறுவனம் 50ம் ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிறப்பு வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், பணம் பெருக்கும் எனும் திட்டத்தின் கீழ் சாதாரண குடிமக்களுக்கு ஓராண்டுக்கு 8.10 முதல் 5 ஆண்டுகளுக்கு 8.50 சதவீதம் வரை அடிப்படை வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்யும் பட்சத்தில் ஓராண்டில் ரூ.54,175, 5 ஆண்டுகளில் ரூ.76,140 வழங்கப்படும்.
- அதே நேரம், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு 8.25 முதல் 5 ஆண்டுகளுக்கு 9 சதவீதமும் அடிப்படை வட்டி விகிதமாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதன்படி, ரூ.54,254 முதல் ரூ.78,025 வரை வழங்கப்படுகிறது.
டாக்டர் அம்பேத்கரின் 135-வது ஜெயந்தி விழா:
- டாக்டர் அம்பேத்கரின் 135-வது ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் 2025 ஏப்ரல் 14 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற புல்வெளியில் உள்ள பிரேர்னா ஸ்தல்-லில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய அரசியலமைப்பின் தந்தையாகப் போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பிறந்த நாளை நினைவுகூரும் இந்த நிகழ்ச்சிக்கு மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் சார்பில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.
அம்பேத்கரின் பிறந்தநாளைக்கு தேசிய விடுமுறை மத்திய அரசு அறிவிப்பு:
- பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அரசு உத்தரவில், அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, "இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை நிறுவனங்கள் உட்பட மத்திய அரசு அலுவலகங்கள்" ஏப்ரல் 14, 2025 அன்று விடுமுறை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பாபாசாகேப் அம்பேத்கர் என பரவலாக அறியப்படும் டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர், ஏப்ரல் 14, 1891 அன்று மத்தியப்பிரதேசத்தின் மோவில் பிறந்தார்.
- நவீன இந்தியாவை வடிவமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் மற்றும் தலித் செயல்பாட்டில் ஒரு முன்னணி நபராக அங்கீகரிக்கப்படுகிறார்.
- சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான வலுவான வக்கீலாக அம்பேத்கர் இருந்தார், விளிம்புநிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடினார்.
- பாபா சாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் பரப்புவதற்காக டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை நிறுவப்பட்டது. 1991-ம் ஆண்டில், பாபாசாகேப் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் நூற்றாண்டு கொண்டாட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக அப்போதைய இந்தியப் பிரதமர் இருந்தார். இந்த குழு டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளையை (டிஏஎஃப்) அமைக்க முடிவு செய்தது. 1992 மார்ச் 24 டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை என்ற தன்னாட்சி அமைப்பு, மத்திய சமூக நீதி - அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
உலகக் கோப்பை வில்வித்தை போட்டி 2025:
- அமெரிக்காவின் ஃபுளோரிடா நகரில் நடைபெறும் இப்போட்டியில் கலப்பு அணிகள் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா-ரிஷப் யாதவ் இணை 153-151 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபே அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. இதன் மூலம் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
- ரிஷப் யாதவுக்கு இது முதல் உலகக் கோப்பை தங்கம் ஆகும். ஜோதி சுரேகா வெல்லும் 11-ஆவது உலகக் கோப்பை தங்கம் இதுவாகும்.
- ஆடவா் அணிகள் ரிகா்வ் பிரிவில் தீரஜ் பொம்மதேவரா, அதானு தாஸ், தருண்தீப் ராய்ஆகியோா் அடங்கிய இந்திய அணி 1=5 என்ற புள்ளிக் கணக்கில் சீன அணியிடம் தோற்று வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினா்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL:
ஏப்ரல் 13:
ஜாலியன்வாலா பாக் படுகொலை தினம் (Jallianwala Bagh Massacre Day) :
- நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம், சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. இது பேராபத்து எனக் கருதி மக்களிடையே வளர்ந்து வந்த விடுதலை வேட்கையை அகற்ற மக்களின் கருத்துரிமையைப் பறிக்கும்வகையில் 1919 மார்ச் 21இல் ரவுலட் சட்டம் என்ற கொடிய சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13இல் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் திடலில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இத்திடலில் வெளியே வர ஒரேஒரு குறுகிய வழி மட்டுமே இருந்தது.
- இக்கூட்டத்தைக் கண்டு கொதிப்படைந்த ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 14:
தமிழ் புத்தாண்டு 2025:
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை 1 ஆம் தேதி தான் தமிழ் வருடப்பிறப்பாக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது.
- ஒவ்வொரு வருடமும் தமிழ் முதல் மாதமான சித்திரை மாதம் தமிழ் மக்களால் தமிழ் புத்தாண்டாக மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது
அம்பேத்கர் பிறந்த தினம் (Ambedkar Birth Anniversary):
- பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று பிறந்தார். உயர்கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர்.
- தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கினார். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடினார். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும், சமூக நீதிப் புரட்சியாளராகவும் விளங்கினார்.
- இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.
- இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பியாகவும் செயல்பட்டார். அவரது தலைமையில் அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.
- இந்தியாவின் மிகச்சிறந்த உயரிய விருதான பாரத ரத்னா விருது இவரது இறப்புக்குப் பின் 1990இல் இவருக்கு வழங்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் - 14 அன்று அரசு விடுமுறை தினமாக அறிவித்து அவரை சிறப்பிக்கிறது.
தேசிய தீயணைப்பு சேவை தினம் (National Fire Service Day):
- தீயால் அழியாதது எதுவுமில்லை. பெரும் தீ விபத்து ஏற்பட்டால் அதனை அணைப்பதற்கு தீயணைப்பு வீரர்கள் தேவை. ஒரு தீயணைப்பு வீரர் பணியில் சேரும்போதே உயிர்த்தியாகத்திற்கு தயாராகி விடுகிறார்.
- பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். தீயணைப்பு வீரர்களை கௌரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அன்று தேசிய தீயணைப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. பணியின் போது உயிர் இழந்த தீயணைப்பு வீரர்களுக்கு ஏப்ரல் 14 அன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
- 1944ஆம் ஆண்டு மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வெடி மருந்துகள் தாங்கிய கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் துறைமுகத்திற்குப் பெரும் சேதாரம் ஏற்பட்டது. பல கப்பல்கள் பாழடைந்தன. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்களும், பணியாளர்களும் போராடினர். இந்த விபத்தில் 249 பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து ஏப்ரல் 14 அன்று நிகழ்ந்தது. இவர்களின் தியாகத்தை நினைவு கூறவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக இரத்த ஒட்டுண்ணி நோய் தினம் World Chagas Disease Day :
- உலக இரத்த ஒட்டுண்ணி நாள் (World Chagas Disease Day) என்பது இரத்த ஒண்டுண்ணி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்ரல் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இது முதன்முதலில் ஏப்ரல் 14, 2020 அன்று கொண்டாடப்பட்டது. மேலும் ஏப்ரல் 14, 1909 அன்று முதன் முதலில் இந்நோயைக் கண்டறிந்த பிரேசிலிய மருத்துவர் கார்லோசு ரிபேரோ ஜஸ்டினியானோ சாகசின் பெயரால் இந்நோய் அழைக்கப்படுகிறது.
- உலக இரத்த ஒட்டுண்ணி நோய் நாள் மே 24, 2019 அன்று உலக சுகாதார சபையின் 72வது அமர்வில் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் மே 28, 2019 அன்று உலக சுகாதார சபையின் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது
- இந்த நோய் இதில் முதன்மையாகப் பாதிக்கப்பட்ட ட்ரைடோமைன் ஒட்டுண்ணிகள் கடிப்பதன் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதோடு இவை முத்தமிடும் பூச்சிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!