தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல்:
- தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, "அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளித்துறையில் 10,000 கோடி முதலீடுகளை ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
- அடுத்த ஐந்து ஆண்டுகளில் விண்வெளித் துறையில் ரூ. 10,000 கோடி முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய இலக்கு. குறைந்தபட்சம் 10,000 நபர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், விண்வெளித் துறைக்கு திறமை வாய்ந்த, தகுதியான நபர்களை உருவாக்குவது இந்த விண்வெளி தொழில் கொள்கையின் முக்கிய அம்சம்
- இதில், ரூ. 25 கோடியில் இருந்து இருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 300 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கு சிறப்பு தொகுப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் 'ஸ்பேஸ் பே' என்று அறிவிக்கப்பட்டு அந்த இடங்களில் முதலீடுகள் வருமேயானால் அதற்கு சிறப்பு தொகுப்பு வழங்கவும் திட்டமிட்டுள்ளோம்.
- தமிழ்நாட்டில் ராக்கெட் பிரிண்ட் செய்யப்படுகிறது. உலக அளவில் எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்திற்கு போட்டியாக தமிழ்நாட்டில், சென்னையில் ஒரு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எனவே இதுபோன்ற நிறுவனங்களை ஊக்குவிக்க இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், காப்புரிமை பெறுவதில் 50% சலுகையை அரசு வழங்கும் அம்சமும் இதில் இருக்கிறது
நாட்டின் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு:
- இந்தியாவில் சில்லறை பணவீக்கம், நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்ணால் அளவிடப்படுகிறது, இது அன்றாட பொருட்கள், சேவைகளின் விலையை பிரதிபலிக்கிறது. இது 2024-25 நிதியாண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 4.6% ஆக சரிந்தது. இது 2018-19-க்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.
- நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான சில்லறை விலை பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்தில் 3.34 சதவீதமாகக் குறைந்துள்ளது.
- கடந்த 2019 ஆகஸ்ட்டுக்கு பின் அதாவது, 67 மாதங்களில் அதாவது சுமார் 6 ஆண்டுகளில் இதுவே குறைந்தபட்ச பணவீக்கம் ஆகும்.
- காய்கறிகள், முட்டை, பருப்பு வகைகள், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைந்ததே பணவீக்கம் குறைய முக்கிய காரணமாக அமைந்தது. கடந்த பிப்ரவரியில் 3.75 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பணவீக்கம், மார்ச் மாதத்தின் 2.69 சதவீதமாக குறைந்துள்ளது.
- கடந்தாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு மார்ச் மாதத்தில், இஞ்சி, தக்காளி, பூண்டு போன்றவற்றின் விலை கணிசமாக குறைந்துள்ளது.
- இதனிடையே கடந்த மாதம், நகர்ப்புறங்களில் பணவீக்கம் 3.43 சதவீதமாகவும்; கிராமப்புறங்களில் 3.25 சதவீதமாகவும் இருந்தது.
சிறந்த திருநங்கை விருது 2025:
- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், (15.4.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான "சிறந்த திருநங்கை விருதினை" நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு திருநங்கைகளின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி வழங்கினார்.
- திருநங்கை தினம் – ஏப்ரல் 15
ஐகிமி (AIKEYME) கூட்டு கடற்படை பயிற்சி 2025:
- ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இடையேயான கூட்டு கடற்படை பயிற்சியானது ஐகிமி (AIKEYME) என்ற பெயரில் தான்சானியாவில் நடைபெற்றது.
- முதல்முறையாக இந்தியா மற்றும் 9 ஆப்பிரிக்க நாடுகள் இணைந்து தன்சானியாவின் தாா்-எஸ்-சலாம் கடற்பகுதியில் கடற்படை கூட்டுப் பயிற்சியை தொடங்கின.
- 6 நாள்கள் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சியை இந்திய கடற்படையும், தன்சானியா பாதுகாப்புப் படையும் இணைந்து நடத்துகின்றன. கூட்டுப் பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சியில் கடற்படை தலைமைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத், தன்சானியா பாதுகாப்புத் துறை அமைச்சா் ஸ்டொ்கோமெனா லாரன்ஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
- இப்பயிற்சியில் INS சென்னை, INS கேசரி, INS சுனைனா போன்ற கப்பல்கள் இடம் பெற்றுள்ளன.
நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள்:
- தமிழகம் மற்றும் கேரளா இணைந்து நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் 24 முதல் 27 வரை நான்கு நாட்கள் நடைபெறவுள்ளன. தமிழ்நாட்டின் மாநில விலங்காக உள்ள நீலகிரி வரையாடுகளின் இரண்டாம் ஆண்டு கணக்கெடுப்பு பணிகளை முன்னிட்டு, வனப்பணியாளர்களுக்கு அட்டக்கட்டியில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
- தமிழகத்தின் 14 வனக்கோட்டங்களில் 176 இடங்களில் கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கீழ் உள்ள பொள்ளாச்சி கோட்டத்தில் 32 இடங்கள், திருப்பூரில் 22, கோவையில் 5 இடங்களில் கணக்கெடுப்பு செய்யப்பட உள்ளது.
- நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டம் : தமிழக அரசு கடந்தாண்டு ரூ.25 கோடி செலவில் நீலகிரி வரையாடு பாதுகாப்புத் திட்டத்தை தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு முதல் முறையாக நடைபெற்ற கணக்கெடுப்பில் மொத்தம் 1,031 வரையாடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. பொள்ளாச்சி - வால்பாறை சாலை, கிராஸ்ஹில்ஸ் வனப்பகுதிகளில் வரையாடு நடமாட்டத்தை காண முடிகிறது
வேவ்ஸ் 2025 - தீம் இசைப் போட்டி :
- வேவ்ஸ் (உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு) 2025 -இன் இந்தியாவில் படைப்போம் சவால் தொடரில் ஒன்றான தீம் இசைப் போட்டியின் வெற்றியாளர்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், இந்திய இசைத் துறையுடன் இணைந்து அறிவித்தது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.
- முதலாவது வேவ்ஸ் உச்சிமாநாடு மும்பையில் 2025 மே 01 முதல் 04 வரை நடைபெற உள்ளது
- இவர்களில் மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளர்கள் பெற்றிருக்கிறார்கள்.
- தென்னிந்திய மற்றும் வட இந்திய பாரம்பரிய பாணிகளின் தனித்துவ கலவையான டி. பவகணேஷ்-இன் படைப்பு வெற்றி பெற்றுள்ளது.
- அதைத் தொடர்ந்து, எதிர்காலம் மற்றும் நிகழ்காலத்தின் கலவையாக, ‘பிளேட் ரன்னர் 2049’ திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, ஆர். ஜெயனந்தனின் கற்பனையில் உருவான பாடல் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- பல்வேறு உணர்ச்சிகள் மற்றும் கலாச்சார மரபுகளை உள்ளடக்கிய அபிஷேக் ராஜாவின் ‘வாழ்க பாரதம்’ பாடலும் பரிசை வென்றுள்ளது.
நாட்டின் முதலாவது க்யூ.கே.டி மாற்றி:
- தொழில்நுட்பத் துறையில் ஒரு முக்கிய சாதனையாக, சி-டாட் ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து, நாட்டின் முதலாவது க்யூ.கே.டி மாற்றியின் மூலம் 4 பன்முக செயல்திறன் கொண்ட கண்ணாடி இழை நார் தகவல் தொடர்பு செயல்பாடுகளை வெற்றிகரமாகச் சோதித்துப் பார்த்துள்ளது.
- இது குவாண்டம் தொழில்நுட்பத்தின் பாதுகாப்பான தகவல்தொடர்பு கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான செயல்பாடுகளின் ஒரு சாதனை முயற்சியாக அமைந்துள்ளது.
- இந்தத் தொழில்நுட்பம் வாயிலாக தரவு பரிமாற்ற செயல்பாடுகளுக்குத் தேவையான தீர்வை வழங்குகிறது. இந்தத் தொழில்நுட்பம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கான செலவுகளை கணிசமான அளவில் குறைக்கிறது.
- க்யூ.கே.டி தொழில்நுட்பச் சூழலில் இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். குவாண்டம் மற்றும் கிளாசிக்கல் தரவுகளுக்கான சமிக்ஞைகளை ஒற்றை கண்ணாடி இழை நார் வழியாக தனித்தனி கோர்களாக பிரிக்க உதவுகிறது.
- இத்தகைய தொழில்நுட்பங்கள் அதிகத் திறன் கொண்ட தரவு போக்குவரத்தை ஒரே சமயத்தில் அனுப்ப உதவுவதுடன் கட்டமைப்புச் செலவுகளை வெகுவாக குறைக்கவும் உதவுகிறது.
இடைநிலை கருந்துளையை (IMBH-Intermediate-Mass Black Holes) கண்டுபிடித்த வானியலாளர்கள்:
- இந்தியாவின் மிகப்பெரிய ஆப்டிகல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி சுமார் 4.3 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் விண்மீன் மண்டலத்தில் உள்ள இடைநிலைக் கருந்துளையை கண்டுபிடித்த விண்வெளி ஆய்வாளர்கள், வாயு மேகங்கள் கருந்துளையை 125 ஒளி நிமிடங்கள் (சுமார் 2.25 பில்லியன் கிலோமீட்டர்) தொலைவில் வினாடிக்கு 545 கி.மீ வேகத்தில் சுற்றி வருவதைக் கண்டறிந்துள்ளனர்.
- இந்த கருந்துளைகள் சுற்றுப்புறங்களுடன் எவ்வாறு வளர்ந்து தொடர்பு கொள்கின்றன என்பது பற்றிய நமது புரிதலை இந்த கண்டுபிடிப்பு செம்மைப்படுத்துகிறது.
- 3.6 மீ தேவஸ்தல் ஆப்டிகல் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான ஆர்யபட்டா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் குழு, என்.ஜி.சி 4395 எனப்படும் மங்கலான விண்மீன் மண்டலத்தில் கருந்துளைகளின் பண்புகளை வெற்றிகரமாக கண்டறிந்து அளவிட்டுள்ளது
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL:
ஏப்ரல் 18:
உலக பாரம்பரிய தினம் 2025:
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினம் (World Heritage Day) சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறது
- நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச கவுன்சில் (ICOMOS) 1982 ஆம் ஆண்டில், ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதியை உலக பாரம்பரிய தினமாக அறிவித்தது
- உலகில் உள்ள பண்டைய காலத்து பாரaம்பரிய, கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!