CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (19.04.2025 to 21.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (19.04.2025 to 21.04.2025)


இரங்கல்:

  • கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில்,  21.04.2025 அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
  • வாடிகன் தனது ட்விட்டரில், "போப் பிரான்சிஸ் ஈஸ்டர் திங்கட்கிழமை, ஏப்ரல் 21ம் தேதி தனது 88வது வயதில் வாடிகனில் உள்ள காசா சாண்டா மார்ட்டாவில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்" என அறிவித்துள்ளது.
  • போப் பிரான்சிஸ் : இவர் கடந்த 1936ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ம் தேதி அர்ஜென்டினாவில் உள்ள பியூனஸ் ஐர்ஸ் என்ற இடத்தில் பிறந்தார். இவரது முழுப் பெயர் ஜோர்ஜ் மாரியோ பெர்கோலியோ. இவரின் பெற்றோர் இத்தாலியிலிருந்து அர்ஜென்டினாவுக்கு குடியேறியவர்கள். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த போப் பிரான்சிஸ், 1969இல் கத்தோலிக்க ஆசாரியராக மாறினார். தொடர்ந்து கிறிஸ்துவ மத சேவைகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். 
  • அதன் பிறகு பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்த இவர், 2001ல் கார்டினலாக நியமிக்கப்பட்டார். 
  • மேலும், 2005ல் பேனடிக்ட் XVI திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் இவர் இருந்தார். கடந்த 2013ம் ஆண்டு அப்போது போப்பாக இருந்த போப் பெனடிக்ட் உடல்நலக்குறைவு காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தபோது புதிய போப்பாக இவர் தேர்வானார். அப்போது தான் "பிரான்சிஸ்" என்ற பெயர் வழங்கப்பட்டது.


டெஸர்ட் ஃபிளாக்-10 போர்ப் பயிற்சி 2025:

  • முதன்மையான பன்னாட்டு விமான போர் பயிற்சியான டெஸர்ட் ஃபிளாக்-10 என்ற போர்ப் பயிற்சியில் பங்கேற்க இந்திய விமானப்படையின் ஒரு பிரிவு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல் தஃப்ரா விமான தளத்தைச் சென்றடைந்தது. இந்தப் பயிற்சியில் மிக்-29, ஜாகுவார் ஆகிய விமானங்களை இந்திய விமானப்படை களமிறக்குகிறது.
  • டெஸர்ட் ஃபிளாக் பயிற்lசி என்பது ஐக்கிய அரபு அமீரக விமானப்படையால் நடத்தப்படும் ஒரு பன்னாட்டுப் பயிற்சியாகும். இதில் இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, பஹ்ரைன், பிரான்ஸ், ஜெர்மனி, கத்தார், சவுதி அரேபியா, கொரிய குடியரசு, துருக்கி,  இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இந்திய விமானப்படையுடன் பங்கேற்கின்றன. இந்த பயிற்சி 2025 ஏப்ரல் 21 முதல் மே 08 வரை நடைபெறவுள்ளது.

சூரியசக்தி மின்சார உற்பத்தி-தமிழகம் 4வது இடம்:

  • கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இதுகுறித்து, மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வெளியிட்டுள்ள தகவல்: சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்வதில், அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையே போட்டி அதிகரித்துள்ளது. அதன்படி, கடந்த 2024-25ம் ஆண்டில் 10,153.48 மெகாவாட் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்து தமிழகம் அகில இந்திய அளவில் தொடர்ந்து 3-வது ஆண்டாக 4-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
  • இப்பட்டியலில்,28,286.47 மெகாவாட் சூரியசக்தி மின்னுற்பத்தி செய்து குஜராத் மாநிலம் முதலிடத்தையும், மகாராஷ்டிரா மாநிலம் 10,687.27 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.


யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம்:

  • யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இது பெருமைமிக்க தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
  • உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய விண்ட்ஹோக் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை தற்போது 570 ஆக அதிகரித்துள்ளது.

கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்:

  • மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் (ஏப். 19) தொடங்கி வைத்தார்.
  • கைவினைக் கலைஞர்களுக்காக மத்திய அரசு கொண்டுவந்த விஸ்வகர்மா திட்டம் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதைத் தடுத்து, குலத் தொழிலை ஊக்குவிப்பதாக குற்றஞ்சாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின், அதற்கு மாற்றாக சமூகப் பாகுபாடு இல்லாமல் அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய 'கலைஞர் கைவினைத் திட்டம்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தார்.

மாநில அளவில் சிறந்த குறுந்தொழில் நிறுவனத்துக்கான விருது :

  • 2023-24-ம் ஆண்டுக்கான மாநில அளவில் சிறந்த குறுந்தொழில் நிறுவனத்துக்கான விருதை திருச்சி டிஜிட் பிசினஸ் சர்வீசஸ் நிறுவனத்துக்கும்
  • சிறந்த மகளிர் நடுத்தர தொழில் நிறுவனத்துக்கான விருதை காஞ்சிபுரம் கிரியா மெடிக்கல் டெக்னாலஜிஸ் நிறுவனத்துக்கும்
  • சிறந்த மகளிர் சிறுதொழில் நிறுவனத்துக்கான விருதை திண்டுக்கல் பிஆர்எஸ். டெய்ரி நிறுவனத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


2025 மார்ச் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண்:

  • 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 மார்ச் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் ஒருங்கிணைந்த குறியீட்டு எண் 3.8 சதவீதம் (தோராயமாக) அதிகரித்துள்ளது. 2025 மார்ச் மாதத்தில் சிமெண்ட், உரங்கள், எஃகு, மின்சாரம், நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் பொருட்களின் உற்பத்தி, ஆக்கப்பூர்வமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
  • 2024 டிசம்பர் மாதத்தில் 8 முக்கிய தொழில் துறைகளின் குறியீட்டு வளர்ச்சி விகிதம் 5.1 சதவீதமாக இருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் இந்த வளர்ச்சி விகிதம் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.4 சதவீதமாக (தோராயமாக) இருந்தது.
  • நிலக்கரி உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 5.1 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.
  • கச்சா எண்ணெய் உற்பத்தி 2024 மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 1.9 சதவீதம் அதிகரித்திருந்தது. 2024-25 நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான காலத்தில் மொத்த குறியீட்டு எண் 2.2 சதவீத அளவுக்கு குறைந்திருந்தது.


LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL:


ஏப்ரல் 19:

உலக கல்லீரல் தினம் 2025:

  • உலக கல்லீரல் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
  • உலகளவில் கல்லீரல் நோய்கள் பெரிய பொது சுகாதார பிரச்சனையாக உள்ளன. ஆண்டுதோறும் 2 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்த உலகளாவிய இறப்புகளில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க விகிதத்தை கொண்டுள்ளது. இவற்றில் 18.3% கல்லீரல் நோயால் ஏற்படுகிறது.
  • கருப்பொருள்: உணவே மருந்து (Food is Medicine)



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)