தமிழ் வார விழா:
- “பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஏப். 29 முதல் மே 5ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும்” என்று சட்டப்பேரவையில், விதி 110-ன்கீழ் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் இளம் எழுத்தாளர், கவிஞர் ஒருவருக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் என்ற விருது வழங்கப்படும்.
- “எல்லார்க்கும் எல்லாம் என்று இருப்பதான இடம் நோக்கி நடக்கின்றது இந்த வையம்” என்ற பாவேந்தரின் கவிதை வரிகளை மையப்படுத்தி அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும்
- இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு பேசினார்.
பஹல்காம் தாக்குதல்
- காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் ரிசார்ட் பகுதி அருகே 22.04.2025 பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உட்பட 26 சுற்றுலாப்பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
- இந்த கொடிய தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது.இந்த படையில் உள்ள தற்கொலைப் படை தீவிரவாதிகள்தான் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.
- பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார். அவர் பயணத்தை இடையில் முடித்துக் கொண்டு 23.04.2025 காலை அவசரமாக இந்தியா திரும்பியுள்ளார்.
- இந்நிலையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு உமர் அப்துல்லா தலைமையிலான ஜம்மு காஷ்மீர் அரசு இழப்பீடு அறிவிப்பித்துள்ளது.
- இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. கூடுதலாக, பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் சுவிட்சர்லாந்து" என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது
காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம்:
- காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
- பசுமை மின் உற்பத்தியை மேம்படுத்த பணிகள் நடந்து வருவதாகவும், தமிழ்நாட்டில் தனியாருக்கு சொந்தமான பழைய காற்றாலைகள் மீண்டும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
- தமிழக மின் தேவையில் 50 சதவீதம், தமிழ்நாடு மின்சாரத் துறையின் சொந்த உற்பத்தியாக உள்ளது என்றும், 74 ஆயிரத்து 815 மின்மாற்றிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
- 393 துணைமின் நிலையங்கள் அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு, 116 பணிகள் நிறைவுற்றதாகவும், 64 பணிகள் நடைபெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.சூரிய சக்தியை பயன்படுத்துவதில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்
2024-25 நிதியாண்டுக்கான காதி மற்றும் கிராமத் தொழில்களின் தற்காலிகத் தரவு:
- புதுதில்லி ராஜ்காட்டில் அமைந்துள்ள அலுவலகத்தில் 2024-25 நிதியாண்டுக்கான காதி மற்றும் கிராமத் தொழில்களின் தற்காலிகத் தரவை வெளியிட்ட அதன் தலைவர் திரு மனோஜ் குமார், 2024-25 ம் நிதியாண்டில் உற்பத்தி, விற்பனை மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது என்று தெரிவித்தார்.
- கடந்த 11 ஆண்டுகளில், விற்பனையில் 447 சதவீதமும், உற்பத்தியில் 347 சதவீதமும், வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் 49.23 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2013-14 ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-24 ம் நிதியாண்டில் விற்பனையில் 399.69% மற்றும் உற்பத்தியில் 314.79% அதிகரித்துள்ளது.
- 2013-14 ம் நிதியாண்டில் காதி மற்றும் கிராமத் தொழில் தயாரிப்புகளின் உற்பத்தி ரூ.26109.07 கோடியாக இருந்தது 2024-25 ம் நிதியாண்டில் சுமார் நான்கு மடங்கு அதிகரித்து ரூ.116599.75 கோடியாக 347 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். 2013-14 ம் நிதியாண்டில் விற்பனை ரூ.31154.19 கோடியாக இருந்தது முன்னெப்போதும் இல்லாத வகையில் 447 சதவீத வளர்ச்சியுடன் சுமார் ஐந்து மடங்கு அதிகரித்து 2024-25 ம் நிதியாண்டில் ரூ.170551.37 கோடியை எட்டியுள்ளது.
- கடந்த 11 ஆண்டுகளில் கதர் ஆடை உற்பத்தியில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அவர் கருத்து தெரிவித்தார். 2013-14 ம் நிதியாண்டில் கதர் ஆடை உற்பத்தி ரூ.811.08 கோடியாக இருந்த நிலையில், இது 366 சதவீதம் அதிகரித்து 2024-25 நிதியாண்டில் நான்கரை மடங்கு அதிகரித்து ரூ.3783.36 கோடியாக உள்ளது என்று அவர் கூறினார்.
பிரதமரின் சவுதி அரேபியா பயணம்:
- இந்தியா-சவுதி அரேபியா பாதுகாப்பு கூட்டாண்மைக் குழுமத்தின் இரண்டாவது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோதி மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும், பிரதமருமான திரு முகமது பின் சல்மான் ஆகியோரது கூட்டுத் தலைமையில் ஏப்ரல் 22-ம் தேதி ஜெட்டாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், கலாச்சாரம், மக்கள் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் இணைந்து செய்லபடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- இந்தியா-சவுதி அரேபியா இடையேயான கூட்டுக் குழுமத்தின் கீழ் நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: (1) அரசியல், தூதரக மற்றும் பாதுகாவல் ஒத்துழைப்புக் குழு. (2) பாதுகாப்பு ஒத்துழைப்புக் குழு. (3) பொருளாதாரம், எரிசக்தி, முதலீடு மற்றும் தொழில்நுட்பக் குழு. (4) சுற்றுலா மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக் குழு.
- எரிசக்தி, பெட்ரோ கெமிக்கல்ஸ், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், நிதிசார் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தொலைத்தொடர்பு, மருந்துகள், உற்பத்தி, சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியாவில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு முதலீடு செய்யவும், சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது.
- விண்வெளி, சுகாதாரம், ஊக்கமருந்து தடுப்பு, போன்ற துறைகளில் பரஸ்பரம் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
- சவுதி அஞ்சல் கழகம், இந்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல் துறை ஆகியவற்றுக்கு இடையே தரைவழி அஞ்சல் மற்றும் பார்சல் போன்ற நடவடிக்கைகளுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பிரதமரின் விருது 2025:
- புதிய சாதனையாக இந்தியா முழுவதும் நிகழ்நேர சத்துணவு விநியோகத்தில் புரட்சிகரமாக போஷன் கண்காணிப்பு செயலியை (Poshan Tracker app) உருவாக்கியதற்காக பொது நிர்வாகத்தில் (புதிய கண்டுபிடிப்புப் பிரிவு) சிறப்புமிக்க செயலுக்கான பிரதமரின் விருதினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு அனில் மாலிக் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
- சத்துணவு மற்றும் குழந்தைகள் நல சேவைகள் வழங்கப்படுவது குறித்த நிகழ்நேர தரவுகளை அளிக்க, செல்பேசி அடிப்படையிலான சத்துணவு கண்காணிப்பு செயலி அங்கன்வாடி ஊழியர்களால் பயன்படுத்தப்படுகிறது.
தீ பாதுகாப்பு வாரம்:
- சுகாதார மருத்துவமனைகளில் தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் தொடர்புடைய மத்திய அமைச்சகங்கள்/ துறைகளுடன் இணைந்து 2025 ஏப்ரல் 21-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை தீ பாதுகாப்பு வாரத்தைத் தொடங்கியுள்ளது.
- நிர்மான் பவனில் 'சுகாதார வசதிகளில் தீ பாதுகாப்பு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற நாடு தழுவிய உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு மத்திய சுகாதார செயலாளர் திருமதி புண்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமை தாங்கினார்.
அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு:
- அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டை, சீனா வெற்றிகரமாக பரிசோதித்துப் பார்த்துள்ளது. சீன விஞ்ஞானிகள் ஹைட்ரஜன் எரிபொருளை அடிப்படையாகக் கொண்ட அணுசக்தி அல்லாத வெடிகுண்டை உருவாக்கும் சோதனையை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வந்தனர்.
- இந்நிலையில் அண்மையில் இந்த சோதனையை சீன விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அணுசக்தி அல்லாத புளோடார்ச் வெடிகுண்டு என்று பெயர் வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டால் ஏற்படும் தீப்பிழம்பு 2 விநாடிகளுக்கு மேல் நீடிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- இந்த 2 கிலோ எடையுள்ள புளோடார்ச் வெடிகுண்டானது, டிஎன்டி ஏற்படுத்தும் வெடிப்புகளை விட 15 மடங்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும்.
- இது எந்த அணுசக்தி பொருளையும் பயன்படுத்தாமலேயே குண்டு வெடித்த இடத்தில் வெப்பநிலை 1,000 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது.
- இந்த வெடிபொருளை சீன மாகாண கப்பல் கட்டும் கழகத்தின்(சிஎஸ்எஸ்சி) கீழ் செயல்படும் 705 ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
- மெக்னீசியம் அடிப்படையிலான திட நிலை ஹைட்ரஜன் சேமிப்புப் பொருளைப் பயன்படுத்தி இந்த வெடிகுண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
கொலஸ்ட்ராலைக் கண்டறிவதற்கான புதிய ஆப்டிகல் சென்சிங் தளம்:
- அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் ஒரு தன்னாட்சி நிறுவனமாக குவஹாத்தியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட ஆய்வு நிறுவனத்தின்(Institute of Advanced Study in Science and Technology (IASST)) பலதுறை ஆராய்ச்சியாளர்கள் குழு, பாஸ்போரின் குவாண்டம் புள்ளிகளைப் பயன்படுத்தி செயல்படும் பட்டு இழைகளின் அடிப்படையில் கொழுப்பைக் கண்டறிவதற்கான ஆப்டிகல் சென்சிங் தளத்தை உருவாக்கியுள்ளது.
- இதைப் பயன்படுத்தி கொலஸ்ட்ராலைக் கண்டறிய ஆய்வக அளவில் பாயின்ட் ஆஃப் கேர் ( Point-of-care) சாதனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரம்பிற்குக் கீழான அளவுகளில் கூட கொழுப்பின் அளவைக் கண்டறிய முடியும். மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை கண்காணிப்பதற்கான திறமையான கருவியாக இது இருக்கும்.
LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL:
உலக புத்தக தினம்:
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்படுகிறது
- 1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாகக் கொண்டாடி வருகிறது. உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
- புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி, உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
- "ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்" என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம்.
- 2025-ம் ஆண்டு உலக புத்தக தினத்திற்கான கருப்பொருள் "உங்கள் வழியைப் படியுங்கள்" என்பதாகும்.
OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :
FOLLOWS ON:
- Instagram : / tnpscpayilagam
- Personal Twitter: / @TNPSCPayilagam) / X(twitter.com)
- Facebook Page : / TNPSCPAYILAGAM
- Email: tnpscpayilagam@gmail.com
- Telegram: https://t.me/TNPSCPAYILAGAM
- LinkedIN: TNPSCPAYILAGAM | LinkedIn
- Pinterest : https://in.pinterest.com/tnpscpayilagam
- Youtube : https://www.youtube.com/@TNPSCPAYILAGAM
If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!