CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (24.04.2025 to 25.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (24.04.2025 to 25.04.2025)


பெஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து அமைச்சரவைக் குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள்:

சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு  அறிவித்திருந்தது:

  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
  • இதைதொடர்ந்து பிரதமர் மோடி உடனடியாக பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதில் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதி நீரை தற்போது இந்தியா நிறுத்தியது.
  • சிந்து நீர் ஒப்பந்தம் (Indus Waters Treaty) : சிந்து ஆற்று நீரை இந்தியாவும் அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேருவும் பாகிஸ்தான் அதிபர் முகமது அயூப் கானும் இதில் (செப்டம்பர் 19, 1960) கையெழுத்திட்டார்கள். உலக வங்கி மூன்றாவது சாட்சியாக இதில் ஒப்பமிட்டதுஇதன் படி சிந்து ஆறும் அதன் துணை ஆறுகளும் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டன. சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்றும் மேற்கு பகுதி ஆறுகள் எனவும், பியாஸ், சத்லஜ், ராவி ஆகிய மூன்றும் கிழக்கு பகுதி ஆறுகள் எனவும் பிரிக்கப்பட்டன. இதன் படி கிழக்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை வழங்கப்பட்டது. மேற்கு பகுதி ஆறுகளின் நீரை முழுக்க பயன்படுத்த பாகிஸ்தானுக்கு உரிமை வழங்கப்பட்டது. 
சார்க் விசா ரத்து : 

  • சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட விசாக்கள், மேலும் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள்  ரத்து செய்யப்பட்டது.
  • இந்த சூழலில் பாகிஸ்தானியருக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும்  ரத்து செய்யப்பட்டன. 
  • இதன்படி ஏப்ரல் 27-ம் தேதிக்குள் அனைத்து பாகிஸ்தானியரும் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளது. மருத்துவ விசாவில் இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தானியருக்கு மட்டும் ஏப்ரல் 29-ம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாகா எல்லை:

  • பாகிஸ்தானுடனான வாகா எல்லையை உடனடியாக மூடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இதேபோல், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  • அதன்படி, மே 1ம் திகதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேற இந்திய மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • பாகிஸ்தான் உடனான தூதரக உதவிகளை குறைக்க முடிவு செய்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.

ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் ஏவுகணைச் சோதனை வெற்றி:

  • ஐ.என்.எஸ். சூரத் போர்க்கப்பலில் இருந்து இந்திய கடற்படை நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது. போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை, வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
  • அதிநவீன அம்சங்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிகப் பெரிய போா்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், துல்லியமாக தாக்கக் கூடிய ஏவுகணை அமைப்பை கொண்டது. போா் விமான எதிா்ப்பு, நீா்மூழ்கி எதிா்ப்பு, போா்க்கப்பல் எதிா்ப்பு உள்பட பல்திறன்களை உள்ளடக்கிய இப்போா்க் கப்பல் இந்திய கடற்படையில் கடந்த ஜனவரியில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன.
  • இந்நிலையில், தளத்தில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் நடுத்தர ரக ஏவுகணை, ஐஎன்எஸ் போா்க் கப்பலில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. நிா்ணயிக்கப்பட்ட இலக்கை ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம்:

  • கும்பகோணத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • தமிழக சட்டப்பேரவையில், அதிமுக, பாஜக தவிர்த்து, காங்கிரஸ், பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித்தலைவர்கள் சார்பில், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கக்கோரி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது


மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி

  • கடந்த 2024-25-ம் நிதி ஆண்டில் தமிழகம் 14.65 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மி்ன்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து, புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

  • தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கடந்த 2023-24ம் நிதி ஆண்டில், தமிழகத்தின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ஒப்பந்த மதிப்பு 9.56 பில்லியன் டாலர்கள் என பதிவாகியுள்ளது. இது கர்நாடகா (4.60 பில்லியன் டாலர்), உத்தர பிரதேசம் (4.46 பில்லியன் டாலர்) ஆகிய மாநிலங்களைவிட 2 மடங்கு அதிகம். இந்நிலையில், இந்த ஆண்டு புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. அதாவது, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி 14.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
  • நாட்டின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவாக 41.23 சதவீதத்தை தமிழகம் அடைந்துள்ளது.



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)