CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (26.04.2025 to 27.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (26.04.2025 to 27.04.2025)


வலுக்கட்டாய கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதா தமிழக சட்டசபையில் அறிமுகம்:

  • கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வகைசெய்யும் மசோதாவை சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார். 
  • இந்த மசோதா வரும் 29-ம் தேதி நிறைவேற்றப்பட உள்ளது.


11வது பிரிக்ஸ் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்கள் கூட்டம் 2025 :

  • பிரேசிலியாவில் பிரேசில் தலைமையில் 2025, ஏப்ரல் 25 அன்று நடைபெற்ற பிரிக்ஸ் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் (11th BRICS Labour & Employment Ministers’ Meeting 2025), மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ஷோபா கரந்த்லஜே இந்தியக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். 
  • "அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான நிர்வாகத்திற்கான உலகளாவிய தெற்கின் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்", என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட இந்தக் கூட்டம், "செயற்கை நுண்ணறிவு மற்றும் வேலையின் எதிர்காலம்" "உலகில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் மற்றும் ஒரு நியாயமான மாற்றம்" ஆகிய இரண்டு முக்கிய கருப்பொருள்களை மையமாகக் கொண்ட ஒரு எதிர்கால நோக்குடைய பிரகடனத்தை ஏற்றுக்கொள்வதுடன் நிறைவடைந்தது.

பிரிக்ஸ் பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்

  • புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பை சமநிலைப்படுத்தும் உள்ளடக்கிய ஏஐ கொள்கைகளை ஊக்குவித்தல்.
  • நியாயமான காலநிலை மாற்றங்களை உறுதி செய்ய சமூக உரையாடலை மேம்படுத்துதல்.
  • தொழிலாளர் நிர்வாகம், டிஜிட்டல் உள்ளடக்கம், பசுமை வேலை உருவாக்கம் ஆகியவற்றில் உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்.

இரங்கல்:

  • இஸ்ரோ முன்னாள் தலைவரும் தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் (84) பெங்களூருவில் 25/04/2025 காலமானார். அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
  • கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் கடந்த 1940-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதி பிறந்த கிருஷ்ணசாமி கஸ்தூரி ரங்கன் சிறந்த விஞ்ஞானியாகவும், கல்வியாளராகவும் சூழலியல் ஆர்வலராகவும் விளங்கினார். இஸ்ரோவி்ல் 40 ஆண்டுகள் பணியாற்றிய இவர் 1994-ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரை இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். இவர் பொறுப்பு வகித்த காலக்கட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
  • கடந்த 2003-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அப்போது இந்திய திட்டக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.
  • கடந்த 2020-ம் ஆண்டு கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழுவினர் இணைந்து 'தேசிய கல்வி கொள்கையை' உருவாக்கினர். புதிய கல்வி கொள்கையை வடிவமைத்ததில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதேபோல மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கஸ்தூரி ரங்கன் குழு விரிவான அறிக்கையை வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.
  • ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றியுள்ள கஸ்தூரி ரங்கன் பத்மஸ்ரீ , பத்ம பூஷண் , பத்ம விபூஷண் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.


வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் தமிழக அரசு அறிவிப்பு :

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இதன் மீதான பதில் உரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். 
  • அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கண்ணாடி இலை வலையமைப்பு நிறுவனம் மூலமாக (TANFINET) தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 92 சதவீதம் பணிகள் 53 ஆயிரத்து 334 கிலோ மீட்டர் தொலைவிற்கு மாநிலத்தில் உள்ள 11626 கிராம பஞ்சாயத்துகளை இணைக்கும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள பணிகள் நிறைவடைந்து அதன் மூலமாக வீடுகளுக்கு மாதம் 200 ரூபாய் கட்டணத்தில் 100 MBPS வேகத்தில் இணையதள சேவை வசதி வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது, “எனத் தெரிவித்தார்.

இ-சேவையை வாட்ஸ்ஆப் மூலம் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம்:

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இதன் மீதான பதில் உரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். 
  • அப்போது பேசிய அவர், ஆதார் சேவைகளை மக்கள் எளிதாக பெற, தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மூலம் புதிதாக 50 ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்படும். இ-சேவை மற்றும் பிற துறைகளின் சேவைகளை வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒருங்கிணைந்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதில் முதல்கட்டமாக ரூ.3.85 கோடி செலவில் 50 சேவைகள் வழங்கப்படும்.
  • அரசு திட்டங்களில் வெளிப்படை தன்மையை மேம்படுத்தவும், பயனாளிகளின் அடையாளத்தை சரிபார்க்கவும் இ-கேஒய்சி கைபேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கப்படும். முதியோர் ஓய்வூதியம், கல்வி உதவித்தொகை, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு உள்ளிட்ட திட்டங்களில் இந்த வசதியை பயன்படுத்த முடியும்.

தொழில் மேம்பாட்டு விருது- Udyog Vikas Award 2025:

  • கேரள மாநிலத்தின் முன்னணி செய்தி நாளிதழான ஜன்மபூமி தினசரி ஏடு ஏற்பாடு செய்த நிகழ்வின் போது தேசிய தொழில் பெருவழித்தட மேம்பாட்டுக் கழகத்திற்கு (National Industrial Corridor Development Corporation (NICDC) ) தொழில் மேம்பாட்டு  விருது வழங்கப்பட்டது. 
  • இந்த நிகழ்ச்சியில் மத்திய கனரக தொழில்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் எஃகுத் துறை இணையமைச்சர் திரு. பூபதி ராஜு சீனிவாச வர்மா கலந்து கொண்டார்.

எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதிக்கான 18% ஜிஎஸ்டி வரி:

  • எம்எல்ஏ-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகளின் மீது விதிக்கப்படும் 18 சதவீத வரித் தொகையை இந்த நிதியிலிருந்தே கட்டப்படுவதால், தொகுதி நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் பாதிக்கப்படுகிறது. 
  • எனவே, 18 சதவீத வரித் தொகையை தமிழக அரசே ஏற்கும்,” என்று பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம் உலக வங்கி அறிக்கை:

  • இந்தியாவில் 10 ஆண்டுகளில் (2011-12 முதல் 2022-23 ஆண்டுகள் வரை) கடும் வறுமையிலிருந்து 17.1 கோடி போ் மீட்கப்பட்டுள்ளனா் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • ‘இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவம்’ என்ற தலைப்பிலான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் 10 ஆண்டுகளில் வறுமையால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக-ஆனந்த் அம்பானி:

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் முழுநேர இயக்குநராக முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வாரியக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நியமனம் 2025 மே 1, முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி இந்தப் பொறுப்பில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றுவார்.
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவன வாரியத்தில் நிர்வாகமற்ற இயக்குநராக ஆனந்த் அம்பானி தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு:

  • மையோனைஸ் தயாரிக்க பச்சை முட்டை பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மையோனைஸ் உற்பத்தி செய்ய, சேமித்து வைக்க, விநியோகம் செய்ய, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. முட்டையில் இருந்து செய்யப்படும் மையோனைஸ்-க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
  • மேலும் மயோனைஸ் சாப்பிடுவதால் உடலில் பலவிதமான நோய் பாதிப்புகள் ஏற்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
  • சமீபத்தில் மயோனைஸ் குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.அதில் Salmonella typhimurium ,Listeria monocytogenes, தீங்கு விளைவிக்க கூடிய பாக்டீரியாக்கள் மயோனைஸ் மூலம் பரவுவது தெரியவந்தது.


தமிழக முன்னாள் எம்எல்எக்ளுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் உயர்த்தப்படுவதாக பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்:

  • "சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-லிருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும்.
  • சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ. 15,000 -லிருந்து ரூ. 17,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  • அவர்களுக்கு ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவப்படி ரூ. 75,000 என்பது ரூ. 1 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். ஏற்கெனவே இந்த ஆண்டின் மருத்துவப்படி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள ரூ. 25,000 விதிகள் திருத்தம் செய்யப்பட்டபிறகு வழங்கப்படும்" என்று அறிவித்தார்.





OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :


FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)