CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (30.03.2025-31.03.2025)

TNPSC PAYILAGAM
By -
0

 

CURRENT AFFAIRS IN TAMIL MARCH 2025 (30.03.2025-31.03.2025)

திண்டுக்கல்லின் காசம்பட்டி வீரகோவில் பல்லுயிர் தமிழ்நாட்டின் 2வது பல்லுயிர் பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • திண்டுக்கல் வனப்பகுதியில் அழகர்மலை காப்புக்காடுக்கு அருகில் அமைந்துள்ள காசம்பட்டியை உயிரிய பன்முகச் சட்டம் 2002-ன் கீழ் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவித்து, அரசிதழில் இதற்கான அறிவிப்பை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ளது.
  • இது தமிழ்நாட்டில் அறிவிக்கப்படும் இரண்டாவது பல்லுயிர் பாரம்பரிய தலமாகும். மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாபட்டி, 2022 ஆம் ஆண்டில் முதல் பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  • திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தாலுகா, ரெட்டியபட்டி பஞ்சாயத்து, காசம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வீர கோவில் ஒரு கோயில் காடுகள்.
  • 4.97 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த கோயில் காடுகள் இன்றும் காலத்தை வென்று நிலை கொண்டுள்ளது. வீர கோவில் கோயில் காடுகளில் உள்ளூர் தெய்வமான “வீரணன்” குடிகொண்டுள்ளதால் உள்ளூர் மக்களால் போற்றிப் பாதுகாக்கப்படுகிறது
  • இந்த காடுகள் பல்லுயிர் பன்முகத் தன்மையின் முக்கிய இடமாகும். இக்காடுகள் 48 தாவர இனங்கள், 22 புதர்கள், 21 கொடிகள் மற்றும் 29 மூலிகைகள் உட்பட தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் குறிப்பிடத்தக்க பல்லுயிர்களின் தாயகமாகும், இது காடுகளின் பாரம்பரிய செழுமைக்கு பங்களிக்கிறது.


மன் கி பாத் :

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது சமீபத்திய மன் கி பாத் உரையில், அன்றாட வாழ்வில் உடற்தகுதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஃபிட் இந்தியா கார்னிவல் மற்றும் சர்வதேச யோகா தினம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார். ஆரோக்கியமான உலக மக்கள்தொகைக்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், "2025 ஆம் ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள் 'ஒரு பூமிக்கு ஒரு ஆரோக்கியம்' (Yoga for One Earth, One Health’)என்பதாகும் . அதாவது, யோகா மூலம் முழு உலகையும் ஆரோக்கியமாக்க விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டார்.
  • குறிப்பாக, இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மையான நிறுவனமான மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (MDNIY), இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தை (IDY) பிரமாண்டமாக கொண்டாடும் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் மார்ச் 13, 2025 அன்று புது தில்லியின் விஞ்ஞான் பவனில் நடைபெற்ற யோகாமஹோத்சவ நிகழ்வின் போது IDY2025க்கான 100 நாள் கவுண்ட்டவுனை வெளியிட்டது


கம்பராமாயண விழா:

  • மயிலாடுதுறை மாவட்டம் கம்பர்மேட்டில் கம்பராமாயண விழா 30.03.25 தொடங்கியது. இந்நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இது ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
  • மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத், 18.03.25 அன்று கம்பரை போற்றும் விதமாக விழா நடத்தப்படும் என அறிவித்தார். அதன்படி மத்திய அரசின் பண்பாட்டுப் பிரிவின் கீழ் செயல்படும், இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி வட்டம் சார்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கம்பர் பிறந்த ஊராக கருதப்படும் தேரழுந்தூர் என்னும் கிராமத்திலுள்ள கம்பர்மேடு என்னும் இடத்தில் கம்பராமாயண விழாவை 30.03.25 முதல் 06.04.25 வரை பல நிகழ்வுகள் மூலம் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
  • இந்த நிகழ்ச்சியானது பொதுமக்கள் மற்றும் பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கு கம்பராமாயணத்தின் முக்கியத்துவத்தையும் அதன் பாரம்பரியத்தையும் உணர்த்தும் நோக்கில் அமையும்.
  • இந்த நிகழ்வை தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர். என். ரவி, இன்று (30.03.2025) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கம்பராமாயணத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.


நிதி- என்சிஏஇஆர் மாநிலங்கள் பொருளாதார மன்றம் -இணையதளம் :

  • நிதி ஆயோக், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சிக் குழுமத்துடன் (NCAER-என்சிஏஇஆர்) இணைந்து, சுமார் 30 ஆண்டு காலத்திற்கான (அதாவது 1990-91 முதல் 2022-23 வரை) சமூக, பொருளாதார, நிதி அளவீடுகள், ஆய்வு அறிக்கைகள், ஆவணங்கள், மாநில நிதி நிலை குறித்த வல்லுநர்களின் கருத்துகள் ஆகியவை அடங்கிய விரிவான களஞ்சியமாக ஒரு இணையதளத்தை உருவாக்கியுள்ளது. 
  • மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2025 ஏப்ரல் 1 ஆம் தேதி புதுதில்லியில் "நிதி- என்சிஏஇஆர் மாநிலங்கள் பொருளாதார மன்றம்" (NITI NCAER States Economic Forum) இணையதளத்தைத் தொடங்கி வைக்கிறார்.இந்த தளம் நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டுள்ளது - அதாவது:
  • 1) மாநில நிதிசார் சூழல் அறிக்கைகள்
  • 2) தரவு களஞ்சியம் - ஐந்து பிரிவுகளில் அதாவது மக்கள்தொகை; பொருளாதார அமைப்பு, நிதி, சுகாதாரம், கல்வி ஆகியவை தொடர்பான புள்ளி விவரங்கள் இடம்பெறும்.
  • 3) மாநில நிதி- பொருளாதாரத் தகவல் பலகை
  • 4) ஆய்வுத் தகவல் - நிதி மேலாண்மையின் முக்கிய அம்சங்கள் பற்றிய விரிவான ஆராய்ச்சியின் அடிப்படையில் இது அமையும்


ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அந்த ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும்-தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது:

  • மகளிா் பெயரில் வீடு, மனை உள்ளிட்ட அனைத்து வகையான அசையா சொத்துகளையும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யும்போது  (ஏப்ரல் 1,  2025) பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு மாா்ச் 14-இல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, சமூகத்தில் மட்டுமன்றி, அவரவா் குடும்பங்களிலும் மகளிருக்கான சமபங்கை உறுதி செய்யும் வகையில் ஏப்.1 முதல் மகளிா் பெயரில் பதிவு செய்யப்பட்டால், அந்த ஆவணங்களுக்கு பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும் என்று அறிவித்தாா். அதைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
  • அதில் மகளிா் பெயரில் வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையா சொத்துக்களும் ரூ.10 லட்சம் மதிப்பு வரை பதிவு செய்யப்பட்டால், பதிவுக் கட்டணம் ஒரு சதவீதம் குறைக்கப்படும். இது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியல்:2025

  • உலகெங்கிலும் 53 நாடுகளில் ‘ஜுடோபி’ அமெரிக்க ஓட்டுநா் பயிற்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வருடாந்திர அறிக்கையில், உலகின் வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் ஆபத்தான நாடாக தென்னாப்பிரிக்கா இடம்பெற்றுள்ளது.
  • இந்த தரவரிசையில், அமெரிக்கா மற்றும் இந்தியா முறையே 3 மற்றும் 5-ஆவது ஆபத்தான நாடுகளாக பட்டியலிடப்பட்டுள்ளன.
  • வாகனம் ஓட்டுவதற்கு உலகின் பாதுகாப்பான நாடாக நாா்வே தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நீடிக்கிறது. அதேநேரம், தென்னாப்பிரிக்கா தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக ஆபத்தான நாடாகத் திகழ்கிறது.

செமி கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி

  • திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு மகேந்திர கிரியில் உள்ள இஸ்ரோ திரவ உந்தும வளாகத்தில் நடைபெற்ற பவர் ஹெட் டெஸ்ட் ஆர்டிகள் செமி கிரையோஜனிக் என்ஜின் கட்டமைப்பின் முதல் வெப்ப சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தகவல் அளித்துள்ளது.
  • 2000 கிலோ நியூட்டன் என்ற அளவிலான வெப்ப சோதனையுடன் செமி கிரயோஜனிக் மேம்பாட்டு திட்டத்தில் இஸ்ரோ மிகப்பெரிய திருப்புமுனையை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
  • மேம்படுத்தப்பட்ட செமி கிரயோஜெனிக் என்ஜின் சோதனையில் சிறந்த செயல்திறன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட என்ஜின் அமைப்புகள் என அனைத்தும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெற்றி அடைந்துள்ளது.


01.01.2025 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2025 முதல் விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • அகவிலைப்படி மற்றும் அகவிலைப்படி நிவாரணம் ஆகிய இரண்டும் உயர்த்தப்படுவதால் அரசுக்கு ஏற்படும் ஒட்டுமொத்த செலவு தாக்கம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.6614.04 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 48.66 லட்சம் மத்திய அரசு பணியாளர்களும், 66.55 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவார்கள்.
  • 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானம் - தமிழக சட்டசபையில் நிறைவேற்றம்:

  • மத்திய அரசு சமீபத்தில் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் அந்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அரசினர் தீர்மானத்தை கொண்டுவர முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.
  • இந்த நிலையில், வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கொண்டு வந்து முன்மொழிந்தார்.
  • இதனைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். வக்ஃப் தீர்மானத்திற்கு பா.ஜ.க மட்டும் எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்து வெளியேறியது. ஆனால், அ.தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன.
  • இதனையடுத்து, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


வங்கிச் சட்டங்கள் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

  • மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் புதன்கிழமை நிறைவேறியது.
  • குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா, வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் நான்கு நாமினிகளை வைத்திருக்க அனுமதிக்கிறது.
  • மேலும் இயக்குநர்களுக்கான "கணிசமான வட்டி" மறுவரையறை தொடர்பான மாற்றங்களையும் முன்மொழிகிறது. அதன் வரம்புகள் தற்போதைய வரம்பான ரூ .5 லட்சத்திற்கு பதிலாக ரூ .2 கோடியாக அதிகரிக்கக்கூடும்.
  • அரசியலமைப்பு (தொண்ணூற்று ஏழாவது திருத்தம்) சட்டம், 2011 உடன் ஒத்துப்போகும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் இயக்குநர்களின் பதவிக்காலத்தை (தலைவர் மற்றும் முழுநேர இயக்குநர் தவிர) எட்டு ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தவும் இது வழிவகை செய்கிறது.


மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி 2025:

  • மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சை வீழ்த்தி செக். குடியரசின் ஜேக்கப் மென்ஸிக் முதல் முறையாகப் பட்டத்தைக் கைப்பற்றினார்.
  • பெலாரஸ் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சபலென்கா மியாமி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் பட்டத்தை வென்றார்.இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் ஜெஸிகா பெகுலாவுடன் மோதிய சபலென்கா 7-5, 6-2 என்ற செட்களில் வென்றார்.மியாமி ஓபனில் இது அவரது முதல் பட்டமாகும். மேலும், இது 8ஆவது டபிள்யூடிஏ 1000 பட்டம், ஒட்டுமொத்தமாக இது அவரது 19ஆவது பட்டம் என்பதும் கவனிக்கத்தக்கது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)