CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (03.04.2025-04.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (03.04.2025-04.04.2025)


6-வது பிம்ஸ்டெக் உச்சிமாநாடு / 6th BIMSTEC Summit :

  • தாய்லாந்தில் 04.04.2025 நடைபெற்ற 6-வது பிம்ஸ்டெக் (பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன் முயற்சி) உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 
  • 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில், பிம்ஸ்டெக் நாடுகளிடையே ஒத்துழைப்புக்கான பல்வேறு கூறுகளை  உள்ளடக்கிய 21 அம்ச செயல் திட்டத்தைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி முன்மொழிந்துள்ளார்
  • உச்சிமாநாட்டின் கருப்பொருள் – பிம்ஸ்டெக்: வளமான, உறுதியான மற்றும் வெளிப்படையானது" ("BIMSTEC: Prosperous, Resilient and Open) என்பதாகும்.
உச்சிமாநாடு பின்வருவனவற்றை ஏற்றுக்கொண்டது:
  • i. உச்சி மாநாட்டு பிரகடனம்
  • ii.பிம்ஸ்டெக் பாங்காக் தொலைநோக்குத் திட்டம் 2030 ஆவணம், இது இந்த மண்டலத்தின் கூட்டு வளத்திற்கான செயல்திட்டத்தை விவரிக்கிறது.
  • iii. பிம்ஸ்டெக் கடல்சார் போக்குவரத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுதல்- இது கப்பல்கள், பணியாளர்கள் மற்றும் சரக்குகளுக்கு தேசிய ஒப்புதல் மற்றும் உதவிக்கு வழிவகுக்கும்.  சான்றிதழ்கள் / ஆவணங்களை பரஸ்பரம் அங்கீகரித்தல்; கூட்டு கப்பல் ஒருங்கிணைப்புக் குழு; சர்ச்சைக்கான தீர்வு நடைமுறை.
  • iv. பிம்ஸ்டெக் அமைப்பின் எதிர்கால வழிகாட்டுதலுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பிம்ஸ்டெக் நிபுணர்கள் குழுவின் அறிக்கை.


இந்திய பொருள்களுக்கு 26%  வரிவிதிப்பு:

  • உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அவரின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது.
  • அதிகபட்சமாக கம்போடியா 49%, வியட்நாம் 46%, இலங்கை 44%, சீனா 34%, இந்தியா 26%, ஜப்பான் 24%, ஐரோப்பிய யூனியன் 20% மீது வரி விதிப்பு அமலாகிறது. இதேபோல கனடா சார்ந்த செலவினங்கள் குறித்தும் ட்ரம்ப் தனது கருத்தை தெரிவித்தார். மேலும், ஆட்டோமொபைல் இறக்குமதிக்கு சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். 
  • ட்ரம்ப்பின் 26 சதவீத வரிவிதிப்பால் இந்தியாவில் எந்தெந்த துறைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என க்ளோபல் டிரேட் ரிசேர்ச் இனிஷியேடிவ் என்ற அமைப்பு கணித்துள்ளது. அதன்படி இந்தியாவில் வேளாண் துறை, அதிலும் குறிப்பாக மீன் இறக்குமதி துறை, இறைச்சி, பதப்படுத்தப்பட்ட கடல் உணவுத் துறை ஆகியன பாதிக்கப்படும்.

வக்பு திருத்த மசோதா நிறைவேறியது :

  • மக்களவையில் ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் விடிய விடிய நடந்த காரசார விவாதத்துக்கு பிறகு வக்பு திருத்த மசோதா நிறைவேறியது. இதற்கு ஆதரவாக 288 பேரும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். 03.04.2025 அதிகாலை 2 மணியளவில் இந்த மசோதா நிறைவேறியது.
  • மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்ட திருத்த மசோதா, மாநிலங்களவையில் 03.04.2025 தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

  • இந்த மசோதா ‘உமீது’ மசோதா என பெயர் மாற்றப்படும். (Unified Waqf Management Empowerment, Efficiency and Development (UMEED) Bill).

நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணை (எம்ஆர்எஸ்ஏஎம்)  சோதனை :

  • ஏப்ரல் 03 & 04, 2025 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் இருந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடுத்தர தூர தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்கும் ஏவுகணையின் (Medium-Range Surface-to-Air Missile (MRSAM)) இராணுவ பதிப்பின் நான்கு வெற்றிகரமான விமான சோதனைகளை நடத்தின. 
  • நான்கு செயல்பாட்டு விமான சோதனைகளும் அதிவேக வான் இலக்குகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டன. 
  • ஏவுகணைகள் வான் இலக்குகளைத் தடுத்து அழித்து, நேரடித் தாக்குதலைப் பதிவு செய்தன. நீண்ட தூரம், குறுகிய தூரம், அதிக உயரம் மற்றும் குறைந்த உயரத்தில் நான்கு இலக்குகளைத் தடுத்து நிறுத்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன, இது செயல்பாட்டுத் திறனை நிரூபிக்கிறது.
  • ஆயுத அமைப்பு செயல்பாட்டு நிலையில் இருந்தபோது விமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தால் பயன்படுத்தப்பட்ட ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ-ஆப்டிகல் கண்காணிப்பு அமைப்புகள் போன்ற வரம்பு கருவிகளால் கைப்பற்றப்பட்ட விமானத் தரவு மூலம் ஆயுத அமைப்பின் செயல்திறன் சரிபார்க்கப்பட்டது. டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் விமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.


ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:

  • இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது.
  • ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை விண்ணில் செலுத்த முடியாது. எனவே மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இத்தகவலை தெரிவித்துள்ளார்.


கார்ல் மார்க்ஸுக்கு சிலை:

  • சென்னையில் கார்ல் மார்க்ஸுக்கு சிலை அமைக்கப்படும் என்றும், பி.கே.மூக்கையா தேவரை சிறப்பிக்கும் வகையில் அவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் (சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன்கீழ்) அறிவித்துள்ளார்.


தேசிய சப்-ஜூனியர் வில்வித்தை போட்டி 2025:

  • 14-வது தேசிய சப்-ஜூனியர் வில்வித்தைப் போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் 10 வயதான மதுநிஷா, 15 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும், 13 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் 2-வது இடம் பிடித்து 2 வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றினார்.


2024ஆம் ஆண்டின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமாக ஜியோ தேர்வு செய்யப்பட்டுள்ளது:

  • இணைய வேகத்தையும் தொலைத்தொடர்பு அலைவரிசையையும் கணக்கிட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஓக்லா நிறுவனம் அளித்துள்ள தரவுகளின் அடிப்படையில் ஜியோ சிறந்த நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது.
  • ஓக்லா நிறுவனத்தின் தரவுகளின்படி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜியோ இணைய சேவையில் 258.54 Mbps வேகத்தில் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று 14.54 Mbps வேகத்தில் தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
  • இதனால், 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக கணக்கிட்டால் சிறந்த சேவையை வழங்கிய நிறுவனமாக ஜியோ தேர்வாகியுள்ளது.


டைகர் டிரையம்ப் பயிற்சியின் 4-வது பதிப்பு / TIGER TRIUMPH - 25

  • இந்தியா-அமெரிக்க மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரண இருதரப்பு முப்படை பயிற்சியான டைகர் ட்ரையம்ப் பயிற்சியின் நான்காவது பதிப்பு, ஏப்ரல் 01 முதல் 13 வரை கிழக்கு கடற்பரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நிலையான இயக்குதல் வழிகாட்டி தொகுப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது
  • இந்தியத் தரப்பில் ஜலாஷ்வா, கரியால், மும்பை , சக்தி ஆகிய இந்திய கடற்படை கப்பல்கள், ஒருங்கிணைந்த ஹெலிகாப்டர்கள் மற்றும் தரையிறங்கும் படகுகள், நீண்ட தூர கடல்சார் ரோந்து விமானம் 91-வது ஐஎன்எஃப் பிரிகேட் மற்றும் 12 மெக் காலாட்படை பட்டாலியனைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், விமானப்படை சி-130 விமானங்கள், எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள், விரைவு அதிரடி மருத்துவக் குழு ஆகியவை பங்கேற்கின்றன. அமெரிக்க தரப்பில் அமெரிக்க கடற்படை கப்பல்களான காம்ஸ்டாக் மற்றும் ரால்ப் ஜான்சன் ஆகியவையும் அமெரிக்க மரைன் டிவிஷனின் துருப்புகளும் பங்கேற்க உள்ளன.
  • விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏப்ரல் 01 முதல் 07, 25 வரை துறைமுகப் பயிற்சி கட்டம் நடைபெறும். 

நாட்டில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை :

  • இந்தியாவில் 22 லட்சம் டிரைவர்கள் பற்றாக்குறை இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. 
  • நாட்டில் முறையான டிரைவிங் பயிற்சி வசதிகள் இல்லாதது விபத்துகளுக்கும் உயிரிழப்புக்கும் வழிவகுக்கிறது. நாடு முழுவதும் படிப்படியாக 1,600 டிரைவிங் பயிற்சி நிலையங்களை ஏற்படுத்தும் ரூ.4,500 கோடி செலவிலான திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது. 
  • நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்துகளால் சுமார் 1.8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த விபத்துகளில் பல, பயிற்சியற்ற டிரைவர்களால் ஏற்படுகிறது. இவ்வாறு மக்களவையில் கேள்வி நேரத்தில் அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

 

LIST OF IMPORTANT DAYS AND DATES IN APRIL 2025 IN TAMIL :


ஏப்ரல் 4:

சர்வதேச கண்ணிவெடி விழிப்புணர்வு International Day of Mine Awareness:

  • இந்த நாள் கண்ணிவெடிகளின் வகைதொகை கண்டறியா தன்மை மற்றும் போரில் வெடிக்காத எஞ்சிய கண்ணி வெடிகள் (ERW) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு. "உயிர்களைப் பாதுகாத்தல், அமைதியை உருவாக்குதல்"என்பதாகும்
  • 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் தேதியன்று, கண்ணிவெடி பயன்பாட்டுத் தடை ஒப்பந்தம் என்றும் அழைக்கப் படும் ஒட்டாவா ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தமானது, மனிதக் கொல்லி கண்ணி வெடிகளின் பயன்பாடு, கையிருப்பு, உற்பத்தி மற்றும் பரிமாற்றத்தைத் தடை செய்வதை ஒரு நோக்கமாகக் கொண்டது.
  • டிசம்பர் 8, 2005 அன்று  கண்ணிவெடித் தடை மாநாடு நடைபெற்றது. இதில் 164 நாடுகளில் கையொப்பமிட்டு  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் 2006 ஏப்ரல் 4 அன்று முதல்,  ‘கண்ணிவெடிகள் விழிப்புணர்வு மற்றும் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கை உதவிக்கான சர்வதேச தினம்’ கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும் வெடிக்கும் கண்ணிவெடி மற்றும் தீங்கு விளைவிக்கும் புதை பொருட்களால் பாதிக்கப்பட்ட மக்களை நிறுவுவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனுசரிக்கப்படுகிறது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)