CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (05.04.2025-06.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (05.04.2025-06.04.2025)


தமிழ்நாடு  இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது

  • 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 சதவிகித உண்மை வளர்ச்சி விகிதத்துடன் நாட்டிலேயே மிக அதிக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அடைந்த மிக உயர்ந்த வளர்ச்சி வீதம் இதுவேயாகும். 2032-33 ஆம் ஆண்டில் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கினை அடையும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் ரூ.15,71,368 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (ஜிஎஸ்டிபி), 2024-25 ஆம் ஆண்டில் ரூ.17,23,698 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
  • பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல் மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே உண்மை வளர்ச்சி வீதம் ஆகும். பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு மதிப்பிடப்படும் வளர்ச்சி வீதமே பெயரளவு வளர்ச்சி வீதம் ஆகும். 2024-25 ஆம் ஆண்டு தமிழ்நாடு 14.02 சதவிகிதம் பெயரளவு வளர்ச்சி வீதத்தினைப் பெற்று இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் திகழ்கிறது.

மித்ர விபூஷண விருது:

  • இலங்கை சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான மித்ர விபூஷண விருதினை அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக வழங்கி கௌரவித்துள்ளார்.
  • விருதினைப் பெற்றுக் கொண்ட பிரதமர், திருக்குறள் சொல்லி தனது நன்றியை தெரிவித்தார்.
  • அதாவது, செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல வினைக்கரிய யாவுள காப்பு எனும் நட்பின் பெருமையை உணர்த்தும் திருக்குறளை பிரதமர் மோடி கூறினார்.
  • இலங்கை தமிழர்களுக்கு 10,000 வீடுகள், சுகாதார உள்கட்டமைப்புகள் கட்டித் தரப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்துள்ளார்.

பாம்பன் புதிய பாலம்: பிரதமர் திறந்து வைத்தார்:

  • ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதியில் 2.2 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாலம் கடந்த 1914-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 
  • இந்தப் பாலம் 106 ஆண்டுகள் கடந்த நிலையில், அதன் உறுதித்தன்மை குறைந்ததால், ரூ. 550 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி கடந்த 2019-ஆம் ஆண்டு தொடங்கி 2024 இறுதியில் நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், பிரதமர் மோடியால் 06.04.2025 திறந்துவைக்கப்பட்டது.
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது பாம்பன் ரயில் பாலம். கடந்த 1914-இல் கடலின் குறுக்கே 2.3 கி.மீ. நீளத்தில் 143 தூண்களுடன் அமைக்கப்பட்ட பாம்பன் ரயில் பாலம், கப்பல்களின் வருகையின் போது 90 டிகிரி கோணத்தில் மேல்நோக்கி திறக்கும் இயக்கத்தைக் கொண்டது. இதனால், இந்தப் பாலம் இந்தியாவின் மிகச் சிறந்த பொறியியல் பணிக்கு ஓா் உதாரணமாக விளங்கியது.
  • ரூ. 550 கோடியில் புதிய உயா் தொழில்நுட்பத்தில் பாம்பன் ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. பிறகு, லக்னெள ரயில்வே ஆராய்ச்சி, வடிமைப்பு தர நிா்ணய நிறுவனத்தின் மேற்பாா்வையில், திருச்சி பாரத் மிகுமின் நிறுவனம், ரயில் விகாஸ் நிகம் நிறுவனம் உள்ளிட்டவற்றின் உயா் தொழில்நுட்பங்களைக் கொண்டு புதிய ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.


பேரிடர் நிவாரண நிதி:

  • கடந்த 2024ஆம் ஆண்டு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 4 மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.1280.35 கோடியை பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.
  • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதியை வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட பிகாருக்கு ரூ.588.73 கோடியும், ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.136.22 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.522.34 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.33.06 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


சா்வதேச துப்பாக்கி சுடுதல்  உலகக் கோப்பை 2025:

  • ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் சா்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பையில் இந்தியாவின் சிஃப்ட் கௌர் சர்மா 50மீ. 3 பொசிஷன் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
  • 23 வயதாகும் சிஃப்ட் கௌர் சர்மா தனது முதல் தங்கத்தை வென்றுள்ளார்.
  • ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு இது முதல் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


புதிய ரயில்வே திட்டங்கள் :

  • நான்கு மல்டி டிராக்கிங் ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை உள்கட்டமைப்பு இணைப்பை மேம்படுத்தும், வசதியை அதிகரிக்கும், தளவாட செலவுகளை குறைக்கும் என்பதுடன் விநியோகச் சங்கிகளை வலுப்படுத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 
  • மத்திய ரயில்வே அமைச்சகத்தின் ரூ.16,658 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.
  • மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள 15 மாவட்டங்களில் இந்த நான்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம், இந்திய ரயில்வே நெட்வொர்க் தற்போதைய நிலையிலிருந்து கூடுதலாக 1,247 கி.மீ. அளவுக்கு அதிகரிக்கும்.


ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு 2025:

  • 2025-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பாறு கழுகுகள் கணக்கெடுப்பு தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பை தமிழக வனத் துறை முன்னெடுத்து, கேரளா மற்றும் கர்நாடகா வனத் துறையுடன் ஒருங்கிணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டது.
  • இக்கணக்கெடுப்பின் தரவுகளை ஆய்வு செய்ததில், 390 பாறு கழுகுகள் உள்ளதாக மதிப்பிட்டுள்ளது. 2023-24-ல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 320 பாறு கழுகுகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. 
  • தமிழகத்தில் 33 இடங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • தமிழகத்தில் 157 கழுகுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளன. அதிகபட்சமாக வெண்முதுகு பாறு கழுகு 110, நீண்ட மூக்கு பாறு கழுகு 31, செம்முக பாறு கழுகு 11 மற்றும் எகிப்தியன் பாறு கழுகு 5 எண்ணிக்கை உள்ளன.
  • இந்தக் கழுகுகளின் இனப் பெருக்கத்துக்கு முக்கியமான இடமாக முதுமலை புலிகள் காப்பகம் திகழ்கிறது



OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)