CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (07.04.2025-08.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (07.04.2025-08.04.2025)


குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது:

  • தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு  08.04.2025 தீர்ப்பளித்தது.
  • சட்டப் பிரிவு 200-ன் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்படும்போது அவருக்கு மூன்று வாய்ப்புகள் உள்ளன. ஒன்று அவர், ஒப்புதல் வழங்குவது, இரண்டாவது ஒப்புதலை நிறுத்தி வைப்பது மூன்றாவது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்புவது.
  • ஆளுநரின் ஒப்புதலுக்கான காலக்கெடு இல்லாத போதிலும், அவர் மசோதாக்களை காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று அர்த்தமல்ல. அரசியலமைப்பில் நேரம் நிர்ணயிக்கப்படாத சந்தர்ப்பங்களில், முடிவு ஒரு நியாயமான காலத்திற்குள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது.
  • எனவே குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் 10 மசோதாக்களை நிறுத்திவைத்தது சட்டவிரோதமானது, சட்டப்படி தவறானது. எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கைகளும் சட்டவிரோதமானவை என்று இந்த உச்சநீதிமன்றம் கருதுகிறது.

ஆளுநர்களுக்கு காலக்கெடு: ஆளுநர்கள் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் 200வது பிரிவின் கீழ், மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும்போது, ஒப்புதலை நிறுத்தி வைத்தால், ஒரு மாதம். 
  • மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு மாறாக ஒப்புதலை நிறுத்தி வைத்தால், மூன்று மாதங்கள்.
  • மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு எதிராக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு மசோதாக்கள் ஒதுக்கப்பட்டால், மூன்று மாதங்கள். 
  • ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்படும் மசோதாக்கள் விஷயத்தில், ஒரு மாதம். இவை அதிகபட்ச காலக்கெடு. ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தமிழ்நாடு அரசால் ரூ.576 கோடி மதிப்பிலான மீனவர் நலத் திட்டங்கள்110-வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளன:

  • புதிய மீன்பிடி துறைமுகங்கள்: தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற கடலோர மாவட்டங்களில் ரூ.576 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகங்கள் அமைக்க திட்டம்.
  • ஆழ்கடல் மீன்பிடி வசதிகள்: தங்கச்சிமடம்** (₹150 கோடி), பாம்பன் (₹60 கோடி), குந்துக்கல் (₹150 கோடி) ஆகிய இடங்களில் ஆழ்கடல் மீன்பிடிக்க முக்கியத் திட்டங்கள்.
  • மீனவர்களின் பொருளாதார வளர்ச்சி: 52.33 கோடி மதிப்பில் 7,000 மீனவர்களுக்கு பயிற்சி, கடற்பாசி வளர்ப்பு, மீன் பதப்படுத்துதல், விற்பனை போன்ற வேலை வாய்ப்புகள்.
  • மாற்று தொழில்கள்: வலை பின்னல், படகு கட்டுதல், உலர் மீன் தயாரித்தல், வண்ண மீன் வளர்ப்பு போன்ற 20,100 பேருக்கு ரூ.54.48 கோடியில் தொழில்நுட்ப பயிற்சிகள்.
  • பிற பொருளாதார வாய்ப்புகள்: காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினை பொருட்கள், மசாலா பொருட்கள் தயாரித்தல் போன்ற 14,700 பேருக்கு ரூ.53.62 கோடியில் வேலை வாய்ப்புகள்.
  • இலங்கை பிரச்சினைகள்: கச்சத்தீவு மீட்பு, இலங்கையில் சிறையிலுள்ள தமிழ் மீனவர்களை விடுவிக்க, இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளை திருப்பிக்கொடுக்க மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.


மீனவளத்துறை மானிய கோரிக்கை 2025:

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மீனவளத்துறை மானிய கோரிக்கையில், “அலைகள்” திட்டம். ரூ.50 இலட்சத்தில் ‘இ-மீன்’ வலைதள சேவை, ரூ.4 கோடியில் புதிய மீன் இறங்குதளம், ரூ. 7.70 கோடியில் திலேப்பியா மீன் வளர்ப்பு திட்டம், ரூ. 74 இலட்சத்தில் மீன்வளக் கண்காட்சிகள் உள்பட 37 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
  • தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வளக் கூட்டுறவு இணையத்தின் மூலம்  மீனவ மகளிர் பயனடையும் வகையில் “அலைகள்” திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

  • இந்த நிலையில்,  கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை பால்வளம் தொடர்பான அறிவிப்புகள் மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி 37 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது. 


விண்வெளி ராக்கெட் இன்ஜின் 3-வது கட்ட சோதனை:

  • இந்தியாவில் விண்வெளி துறையில் ஈடுபட முதல் நிறுவனமாக ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.
  • இந்நிலையில், விண்வெளியில் ஏவக் கூடிய ராக்கெட் ஒன்றை ஸ்கைரூட் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த ராக்கெட்டுக்கு இந்திய விண்வெளித் துறையின் தந்தை என்று போற்றப்படும் விக்ரம் சாராபாய் நினைவாக, விக்ரம் -1 என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • இந்த விண்வெளி ராக்கெட் இன்ஜின் 3 நிலைகளை கொண்டது. முதல் 2 நிலைகளின் சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. இதையடுத்து ராக்கெட்டின் 3-வது கட்ட சோதனையை ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம்  வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 
  • இந்த ராக்கெட்டின் 3 நிலைகளிலும் திட எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஸ்கைரூட் நடத்திய ராக்கெட் 3-வது இன்ஜினுக்கு ஏவுகணை தந்தை என்று போற்றப்படும் கலாம் - 100 என பெயரிடப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.


குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம்:

  • குஜராத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  அடிக்கல் நாட்டினார். 
  • குஜராத்தின் காந்திநகர் கலோல் பகுதியில் இந்திய விவசாயிகள் உர கூட்டுறவு நிறுவன (இஃப்கோ) தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த நிறுவன வளாகத்தில் விதை ஆராய்ச்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.


டிஜிட்டல் அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கை / India launches first Digital Threat Report 2024 

  • வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீட்டு துறைகளில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு முயற்சியாக, சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை அறிமுகப்படுத்த இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
  • இந்த அறிக்கையை நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் துறை செயலாளர் திரு எம் நாகராஜு, மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் திரு எஸ் கிருஷ்ணன், கணினி அவசர கால மீட்புக்குழுவின் தலைமை இயக்குநர் டாக்டர் சஞ்சய் பாஹல் சிசா அமைப்பின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான திரு தர்ஷன் சாந்தமூர்த்தி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்.
  • வங்கி, நிதி சேவைகள், காப்பீடு ஆகிய துறைகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய துறைகளாக இருப்பதால், இணைய வழி தாக்குதல்கள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், இணையவழி அச்சுறுத்தல்களை சமாளிக்க பல்வேறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
  • இணைய வழி அச்சுறுத்தல்களை உரிய நேரத்தில் கண்டறிந்து மீட்பு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தரவுகளை பாதுகாப்பதற்கு அதுதொடர்பான நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
  • சிசா அமைப்புடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த அறிக்கையானது வங்கிகள், நிதிசார் சேவை வழங்கும் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றின் இணைதளங்களை பாதுகாக்கவும், நிதிசார் பரிவர்த்தனைகளுக்கான அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், அதிநவீன இணையவழி தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ளவும் ஒரு கூட்டு இணைய பாதுகாப்பு உத்திசார் நடவடிக்கையை உருவாக்கவும் தேவையான தகவல்களை வழங்கும்.


'சிட்டி கீ ஆஃப் ஹானர்' விருது 2025:

  • போர்ச்சுகலின் லிஸ்பன் நகரில் (ஏப்ரல் 7, 2025) நடைபெற்ற விழாவில், லிஸ்பன் மேயரிடமிருந்து லிஸ்பன் நகரத்தின் உயரிய விருதான 'சிட்டி கீ ஆஃப் ஹானர்' விருது குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு வழங்கப்பட்டது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!


Post a Comment

0Comments

Post a Comment (0)