CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (09.04.2025-10.04.2025)

TNPSC PAYILAGAM
By -
0

CURRENT AFFAIRS IN TAMIL APRIL 2025 (09.04.2025-10.04.2025)

 

 செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையம்:

  • சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (சென்னை ஐஐடி), இந்தியாவின் அடிமட்ட சவால்களைத் தீர்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உயர்சிறப்பு மையத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இதற்காக கலிபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்ட டீப்டெக் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜிரோ லேப்ஸ், ஐஐடிஎம் பிரவர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் ஆகியவற்றுடன் இக்கல்வி நிறுவனம் இணைந்து செயல்படவுள்ளது.
  • CPU, எட்ஜ் டிவைஸ் இண்டர்பியரன்சிங் ஆகியவற்றில் நடைமுறைக்கு ஏற்ற, வலிமையான செயற்கை நுண்ணறிவு தீர்வுகளை உருவாக்குவதில் இந்த உயர்சிறப்பு மையம் கவனம் செலுத்தும். ஏஐ மாதிரிகள் மூலம் அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண உதவும் முக்கிய நடவடிக்கையாக ஜிரோ லேப்ஸ் ‘Kompact AI’ன் முதல் பதிப்பை சென்னை ஐஐடி-ல் (ஏப்ரல் 9, 2025) வெளியிடப்பட்டது.
  • Kompact AI’ என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு தளமாகும். அதிக செலவு பிடிப்பதுடன், எளிதில் கிடைக்காத GPU (Graphics Processing Units)-க்கு பதிலாக CPU-க்கள் மூலம் அடிப்படை மாதிரிகளை உருவாக்கி சேவையளிக்க உதவுகிறது.
  • Ziroh Labs ஏற்கனவே DeepSeek, Qwen, Llama உள்ளிட்ட 17 ஏஐ மாதிரிகளை CPU-களில் திறமையாக இயங்க மேம்படுத்தியுள்ளது. இந்த மாதிரிகளை சென்னை ஐஐடி ஏற்கனவே தரப்படுத்தியுள்ளது, செயல்திறன் அளவு, துல்லிய செயல்திறன் ஆகிய இரண்டையும் மதிப்பீடு செய்கின்றன. முதன்முறையாக, உயர் செயல்திறன் கொண்ட ஏஐ CPU-க்களில் திறமையாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது, இதனால் ஏஐ மிகவும் அணுகக்கூடியதாகவும், அளவிடக்கூடியதாகவும், செலவு குறைந்ததாகவும் இருக்கும்.


ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25% குறைத்தது:

  • வங்​கி​கள் ரிசர்வ் வங்​கி​யிட​மிருந்து பெறும் குறுகிய கால கடனுக்​கான வட்டி (ரெப்​போ) விகிதத்தை ரிசர்வ் வங்கி 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீத​மாக நிர்​ண​யித்​துள்​ளது. இதையடுத்​து, வீடு, வாகன கடன்​களுக்​கான வட்டி விகிதம் குறை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.
  • ரிசர்வ் வங்கி நடப்​பாண்​டில் ரெப்​போ வட்டி விகிதத்தை குறைப்​பது இது இரண்​டாவது முறை. முன்​ன​தாக கடந்த பிப்​ர​வரி​யில் ரெப்​போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்​கப்​பட்டு 6.25 சதவீத​மாக நிலைநிறுத்​தப்​பட்​டது. இந்த நிலை​யில், ரிசர்வ் வங்கி வெளியிட்ட பணவியல் கொள்​கை​யில் ரெப்​போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைத்து 6 சதவீத​மாக நிர்​ண​யித்​துள்​ளது.

சுற்​றுச்​​சூழலுக்​கு மாசு இல்​லாத எரி சக்​தி உற்​பத்​தி ஆய்​​வறிக்​கை:

  • பிரிட்​​டனை சேர்ந்​த சுற்​றுச்​​சூழல் அமைப்​​பான எம்​​பர், சுற்​றுச்​​சூழலுக்​கு மாசு இல்​லாத எரி சக்​தி உற்​பத்​தி குறித்​து ஆண்​​டு​தோறும்​ ஆய்​வு நடத்​தி விரி​வான அறிக்​​கையை வெளி​யிட்​டு வரு​கிறது. இதன்​படி எம்​​பர் அமைப்​​பின் ஆய்​​வறிக்​கை அண்​​மை​யில் வெளி​யிடப்​​பட்​​டது.
  • உலகம்​ முழு​வதும்​ 215 நாடு​களின் மின் உற்​பத்​தி குறித்​து விரி​வான ஆய்​வு நடத்​​தப்​​பட்​​டது. இதன்​படி கடந்​த ஆண்​டு சர்​வ​தேச அளவி​லான மின் உற்​பத்​​தி​யில் 41 சதவீத மின்​சா​ரம்​ அணு சக்​தி மற்​றும்​ புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி முறை​களில் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது. இது வரவேற்​கத்​​தக்​​கது. இதன்​படி சர்​வ​தேச அளவில் நீர்​மின் நிலை​யங்​​கள் மூலம்​ 14%, அணு சக்​தி மூலம்​ 9%, காற்​றாலைகள் மூலம்​ 8%, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள் மூலம்​ 7%, இதர புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​தி மூலம்​ 3% மின் உற்​பத்​தி செய்​​யப்​​பட்​​டிருக்​​கிறது.
  • அதிக அளவில் மின்​சா​ரத்​தை பயன்​படுத்​​தும்​ நாடு​களின் பட்​​டியலில் சீனா முதலிடத்​​தில் இருக்​​கிறது. அமெரிக்​​கா, ஐரோப்​​பிய ஒன்​றி​யம்​, இந்​​தி​யா, ரஷ்​யா, ஜப்​​பான், பிரேசில் நாடு​கள் அடுத்​​தடுத்​த இடங்​​களில் உள்​ளன. 
  • சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய மின் உற்​பத்​​தி​யில் சீனா முதலிடத்​​தில் இருக்​​கிறது. சீனா​வின் மொத்​த உற்​பத்​​தி​யில் 82 சதவீத மின்​சா​ரம்​, காற்​றாலை, சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள், நீர் மின் நிலை​யங்​​கள், அணுமின் நிலை​யங்​​கள் மூலம்​ உற்​பத்​தி செய்​​யப்​​படு​கின்​றன. அந்​த நாட்​​டில் நிலக்​​கரி மூலம்​ 18% மின்​சா​ரம்​ உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது.
  • சர்​வ​தேச அளவி​லான காற்​று, சூரிய சக்​தி மின் உற்​பத்​​தி​யில் ஜெர்​மனியை பின்​னுக்​கு தள்ளி 3-ம்​ இடத்​​துக்​கு இந்தியா முன்​னேறி உள்​ளது. இந்​​தி​யா​வின் மொத்​த மின் உற்​பத்​​தி​யில் 78% நிலக்​​கரி உள்​ளிட்​ட புதைபடிமங்​​களில் இருந்​து உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது. மீத​முள்ள 22% காற்​றாலைகள், சூரிய மின் கட்​​டமைப்​​பு​கள், அணு மின் நிலை​யங்​​கள் உள்​ளிட்​ட புதுப்​​பிக்​​கத்​​தக்​க எரிசக்​​தி​யில் உற்​பத்​தி செய்​​யப்​​படு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​​பட்​​டுள்​ளது.


உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்:

  • பரஸ்பர வரி பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த 02/04/2025-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
  • இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடியாக அமெரிக்கா சீனாவின் கூடுதல் வரி விதிப்புக்கு அபராதமாக 50% வரியை விதித்தது. இதனால் சீனப் பொருட்களின் மீதான வரி 104% ஆனது. 
  • இந்நிலையில் இவ்விரு நாடுகளுக்கிடையிலான வரி யுத்தம் தீவிரமடைய அமெரிக்க பொருட்களுக்கான வரி (ஏப்.10) முதல் 84% ஆக உயர்த்தப்படும் என சீன நிதியமைச்சகம்  09/04/2025 அறிவித்தது. 
  • இந்தச் சூழலில் தான் உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று அறிவித்துள்ளார்.

சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு :

  • சிறுதொழில் நிறுவனங்களுக்கான கூடுதல் முதலீட்டு மானிய உச்சவரம்பு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று சட்டப்பேவையில் குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
  • 2 ஆயிரம் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 6 லட்சம் மாணவர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் ரூ.1.9 கோடி மதிப்பீட்டில் 'நிமிர்ந்து நில்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.
  • 100 கிராமங்களில் 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் வகையில் 'கிராமம்தோறும் புத்தொழில்' திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும். விண்வெளி தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும். இவை உட்பட 43 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

26 ரஃபேல்-எம் ரக போர் விமானங்​களை வாங்க பிரதமர் தலைமையிலான மத்​திய அமைச்​சரவை ஒப்​புதல் அளித்​துள்​ளது:

  • இந்​திய கடற்​படை​யில் உள்ள ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க்​கப்​பல்​களில் பயன்​படுத்​து​வற்​காக 45 மிக்​-29கே ரக போர் விமானங்​கள் உள்​ளன. இவை அனைத்​தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்​லியன் டாலர் மதிப்​பில் வாங்​கப்​பட்​ட​வை. ஆனால், இந்த விமானங்​களுக்​கான சர்​வீஸில் கடந்த சில ஆண்​டு​களாக பல பிரச்​சினை​கள் எழுந்​தன. கடற்படை பயன்​பாட்​டுக்​கான போர் விமானங்​களை உள்நாட்​டில் தயாரிக்க இன்​னும் 10 ஆண்​டுக்கு மேல் ஆகும்.

  • அதனால் பிரான்​ஸிட​மிருந்து 26, ரஃபேல்​-எம் ரக போர் விமானங்​களை வாங்க கடற்​படை முடிவு செய்​தது. இதற்கு பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்​நாத் சிங் தலை​மையி​லான பாது​காப்பு கொள்​முதல் கவுன்​சில் கடந்​தாண்டு செப்​டம்​பரில் ஒப்​புதல் வழங்​கியது. இந்த விமானங்க​ளை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலை​மையி​லான மத்திய அமைச்​சரவை  ஒப்புதல் அளித்​தது.

வங்கதேசத்துக்கு வழங்கப்பட்ட சரக்கு முனைய வசதியை நிறுத்தியது இந்தியா:

  • வங்கதேச இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனஸ் சமீபத்தில் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘இந்தியாவின் 7 வட கிழக்கு மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்ட பகுதி. வங்க கடலின் ஒரே பாதுகாவலன் வங்கதேசம்தான். அதனால் அங்கு சீனா முதலீடு செய்ய வேண்டும்’’ என அழைப்பு விடுத்தார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.
  • இந்நிலையில் இந்திய சரக்கு முனையம் மற்றும் சுங்க நிலையங்களை பயன்படுத்தி கொள்ள வங்கதேசத்துக்கு கடந்த 2020-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்வதாக மத்திய நேரடி வரிகள் மற்றும் சுங்க வாரியம் வங்கதேசத்துக்கு கடந்த 8-ம் தேதி கடிதம் அனுப்பியது. மேலும், இந்திய பகுதிக்குள் ஏற்கெனவே நுழைந்த வங்கதேசத்தின் சரக்கு வாகனங்களும் இந்திய பகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. முகமது யூனுஸ் தெரிவித்த கருத்துக்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியா வந்துள்ள துபாய் இளவரசர் முகமது பின் ரசீத்:

  • பாய் இளவரசர் முகமது பின் ரசீத் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், துபாய் இளவரசர் முகமது பின் ரசீத் முதல் முறையாக  இந்தியா வந்தார். அவரை டெல்லி பாலம் விமான நிலையத்தில், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத்துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி வரவேற்றார்.
  • இளவரசர் முகமது பின் ரசீத்துக்கு, பிரதமர் மோடி மதிய விருந்தளித்தார். இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம் இடையே பல துறைகளில் உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.


வாழ்நாள் சாதனையாளர் விருது:

  • ஹாலிவுட்​டின் பழம்​பெரும்​ நடிகர்களில் ஒருவர் ராபர்ட்​ டி நிரோ. 80 வயதான இவர், ‘ரேஜிங்​ புல்’, 'தி காட்​பாதர் பார்ட்​ 2’ படங்​களுக்​காக 2 முறை சிறந்​த நடிகருக்​கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். 'டாக்​ஸி டிரைவர்', 'தி ஐரிஷ்மேன்', ‘த பிக்​ வெட்​டிங்​’, ‘ஜோக்​கர்’ என பல படங்​களில் நடித்​துள்ளார்.
  • கடந்​த சில வருடங்​களுக்​கு முன் இவர் அளித்​தபேட்​டியில், தனக்​கு​ சமீபத்​தில் 7-வது குழந்​தை பிறந்​தது என்று அறிவித்​திருந்​தார். இந்​நிலையில், இவருக்​கு 78-வது கேன்ஸ் திரைப்​பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்​கப்​பட இருக்​கிறது. மே மாதம்​ 13-ம்​ தேதி தொடங்​கும்​ விழாவில் இவ்விருது அவருக்​கு வழங்​கப்​பட உள்ளது.


OUR CURRENT AFFAIRS PDF AVAILABLE IN TELEGRAM PAGE :



FOLLOWS ON:

  • Email: tnpscpayilagam@gmail.com

 

If you have any questions, suggestions, or queries, please feel free to contact us at tnpscpayilagam@gmail.com. We would love to hear from you and help you achieve your dreams. Thank you for visiting TNPSCPAYILAGAM and happy learning!



Post a Comment

0Comments

Post a Comment (0)